நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Sunday, March 31, 2013

உள்ளத்தில் உள்ளதை பதிவு செய்ய–கூகிள் கீப்!

“மனதில் உள்ளதை பதிவு செய்யுங்கள்.” இந்த வாசகத்தைச் சொல்லி Google Keep ஐ பயன்படுத்துங்கள் என்கிறது கூகிள். கூகிள் கீப் (யாருக்கு கீப் என்று கேட்டுத் தொலைக்காதீர்கள்…!) வேறு ஒன்றும் இல்லை. குறிப்பு எடுக்க உதவும் ஒரு மென்பொருள் அல்லது இணையத்தளம் அல்லது App!

ஒன்று போக ஒன்று தோன்றும் என்பது போல… கூகிள் நிறுவனம் அதன் பிரபல்யமான Google Reader இற்கு கட்டாய ஓய்வு கொடுப்பதாக அறிவித்து விட்டு (Google Reader இன் கடைசி நாள் July 1, 2013) Google Keep  ஐ களம் இறக்கியிருக்கிறது!

சாதரணமாக குறிப்பு எடுப்பதோடு மட்டுமல்லாமல் படங்களையும் இணைக்க முடியும். குறிப்புகளுக்கு வண்ணக் குறியீடும் செய்யலாம். பெரிசா எப்படி பயன்படுத்தணும் என்று சொல்லத் தேவையில்லை. கஸ்டம் ஒன்றும் இல்லை.

இந்த Google Keep  ஐ கணினி மூலமாகப் பயன்படுத்த விரும்பினால் இங்கே அழுத்துங்கள். இந்த வசதியை Google Drive இன் உள்ளங்கமாக இணைத்துள்ளார்கள். கைத் தொலைபேசியில் பயன்படுத்த விரும்பினால், Google Keep App ஐ தரவிறக்க வேண்டும். ஆனால்  ஒரு விசயம் Android 4.0 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்கு தளங்களை கொண்ட கைத் தொலைபேசிக்களில் மட்டும் தான் தற்போது கிடைக்கிறது. இதனை நீங்கள் Google Play இல் இருந்து தரவிறக்கலாம். iOS இயங்கு தளங்களை கொண்ட கருவிகளுக்கு (குறிப்பாக Iphone/Ipad) சீக்கரம் வரலாம் என்று நினைக்கிறேன்.

image

கடைசியாக ஒரு விசயம். ஏற்கனவே Evernote போன்ற பலரும் பயன்படுத்தும் இது போன்ற App களுக்கு போட்டியாக கூகிளின் அஸ்திரம் தான் இந்த  Google Keep!

எத்தனை பேருக்கு கீப்பாகுமோ மன்னிக்கவும் எத்தனை பேர் மனதை வெல்லும் என்று போகப் போக பார்க்கலாம்.

Sunday, March 3, 2013

முகப் புத்தகத்தில் ஒலிக் கவன ஈர்ப்பை நிறுத்துதல்!

நீங்கள் பல சாளரங்களை திறந்து வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சாளரங்களில் ஒன்று முகப் புத்தகம். முக்கியமாக வேறு ஒன்றில் கவனம் செலுத்தும் போது புதிதாக முகப் புத்தகத்தில் வரும் கவன ஈர்ப்புகள் (Nofitifications – மன்னிக்கவும் அடியேனின் தமிழ் கலைச் சொல் அறிவு அவ்வளவே!) சிறு ஒலி எழுப்பி, உங்களை “டே… என்னைப் பாரடா” என்று சொல்லாமல் சொல்லும். உடனே நம் கவனம் சிதறிவிடும்!

இவ்வளவு பீடிகை எதுக்கு என்று கேட்டால், முகப் புத்தகத்தில் இந்த மாதிரி வரும் ஒலிக் கவன ஈர்ப்பை நிறுத்துவது எப்படி என்று சொல்லத் தான்! (பெரிய விசயம் பாருங்க… )

முகப் புத்தகத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.

பின் Account Settings –> Notifications என்பதை தெரிவு செய்து “Notifications Settings” என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்.

கீழே படத்தில் காட்டியவாறு செய்யுங்கள்.

image

கடைசியாக கீழே படத்தில் காட்டியவாறு “Play a sound when each new notification is received” என்பதற்கான தெரிவை நீக்கிச் சேமியுங்கள்.

image

அவ்வளவு தான் இனி ஒலியுடன் கூடிய கவன ஈர்ப்புகள் வந்து உங்கள் கவனம் சிதறாது!

Related Posts Plugin for WordPress, Blogger...