நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Thursday, November 7, 2013

Youtube இல் காணொளிகளின் பட்டியலை பிரதி எடுப்பது எப்படி?

Youtube இல் காணப்படும் வசதிகளில் ஒன்று வேறு ஒருவர் தரவேற்றிய காணொளிகளின் பட்டியல் (Playlist)  ஒன்றை உருவாக்க முடியும் என்பதாகும். இது பலருக்கும் தெரிந்திருக்கும்.

இந்தப் பதிவில் வேறு ஒருவர் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் காணொளிகளின் பட்டியலை நமது கணக்கிற்கு பிரதி எடுப்பது எப்படி என்பது பற்றியை குறிப்பு ஒன்றைத் தருகிறேன்.

Digital Inspiration  என்ற இணையத் தளம் ஒன்றை உருவாக்கி அதில் எழுதிவரும்   Amit Agarwal  அவர்கள் இதனை செய்யக்கூடிய ஒரு இணையப் பக்கத்தை உருவாக்கி உள்ளார்.

image

இணையப் பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்.

இதனைப் பயன்படுத்தி வேறு ஒருவரின் காணொளிகளின் பட்டியலை இலகுவாக நமது கணக்கிற்கு பிரதி எடுத்துவிட முடியும்.

மேலதிக விபரங்களுக்கு, அவரின் இது தொடர்பான கீழுள்ள காணொளியை பார்க்கலாம்.

Monday, October 7, 2013

குரோம் இ.உலாவியே “Search Suggestions” ஐ மட்டும் காட்டு…!

கூகிள் குரோம் இணைய உலாவி தொடர்பான ஒரு பயன்படக்கூடிய உதவிக் குறிப்பு இது.

பொதுவாக குரோம் இணைய உலாவியின் முகவரி தட்டச்சு செய்யும் பெட்டியில் (Address bar / Omnibox ) ஏதேனும் ஒன்றை தட்டச்சு செய்யத் தொடங்கினால், குரோம் உலாவியானது பல தரப்பட்டவற்றை ஒரு பட்டியல் போல காட்டுவதை கண்டிருப்பீர்கள். உதாரணமாக நீங்கள் ஏற்கனவே சென்று வந்த இணையத் தள முகவரிகள், கூகிளின் சிறந்த முடிவுகள், குரோம் புத்தகக்குறி (Bookmarks) என பல தரப்பட்டவற்றைக் பட்டியலில் காட்டும். 

image

இதற்கு மாறாக Search Suggestions ஐ மட்டுமே பட்டியலில் காட்டுமாறு செய்வது எப்படி?

உலாவியில் முகவரி தட்டச்சு செய்யும் பெட்டியில் ? ஐ தட்டச்சு செய்து தொடங்கினால், Search Suggestions ஐ மட்டுமே குரோம் உலாவி காட்டும். இதனை Ctrl + E அல்லது Ctrl + K  என்ற குறுக்கு வழியை பயன்படுத்தியும் செய்யமுடியும்.

image

Tuesday, September 17, 2013

kikin - கூகிள் குரோம் நீட்சி!

இணையப் பக்கம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு சொல் என்னவென்று விளங்கவில்லை என்று வைத்துக் கொள்ளுவோம். உடனே என்ன செய்வீர்கள்? அந்தச் சொல்லை தெரிவு செய்து, நகல் எடுத்து ஏதாவது தேடு பொறியில் தேடத் தொடங்குவீர்கள் அல்லவா? சில நேரங்களில் இது எரிச்சலைத் தரலாம்.

வேறு வழி?

kikin என்ற குரோம் இணைய உலாவி நீட்சி இதற்கு ஒரு மாற்று வழி செய்கிறது. எப்படி என்றால், அறியவேண்டிய சொல்லின் மேல் அழுத்தி சிறிது நேரம் பிடித்திருந்தால், அது பற்றிய விளக்கம், படங்கள், காணொளி என்று பல கோணங்களில் தகவல்களை அள்ளி வீசுகிறது.

image

(பயணம் என்ற சொல்லின் மேல் சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வலது பக்கத்தில் பல்வேறு தகவல்கள் தோன்றுவதை மேல் உள்ள படத்தில் காணலாம். )

இதுக்கு மேல நான் அலட்டத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நீங்களே பயன்படுத்திப் பாருங்கள்.

அந்த நீட்சியை குரோம் இணைய உலாவியில் நிறுவ இங்கே அழுத்துங்கள்.

Saturday, August 10, 2013

எங்கே என் தொலைபேசி எங்கே…?

நீங்கள் பயணம் செய்யும் போது அல்லது ஏதாவது கொண்டாட்ட நிகழ்வு இடங்களில் அல்லது இன்ன பிற இடங்களில் உங்கள் கைத் தொலைபேசியை (Android இயங்குதளங்களை கொண்ட) தொலைத்து விட்டீர்களா? இதோ அதற்கு வழி கிடைத்து விட்டது இப்போது. கூகிள் ஆண்டவர் Adroid Device Manager மூலம் உங்கள் தொலைபேசியை கண்டுபிடிக்க அல்லது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வழி செய்துள்ளார்.

எப்படி?

உங்கள் தொலைபேசி உங்களிடம் இல்லை என்று தெரிந்தவுடன் நீங்கள் Adroid Device Manager மூலம் உங்கள் தொலைபேசி எங்க இருக்கு என்று கண்டுபிடித்து உலக படத்தோட பார்க்கலாம். (முக்கிய குறிப்பு - எக்குத் தப்பான இடத்திற்கு போய் தொலைத்து இருந்தால், மனைவியை அல்லது காதலியை பக்கத்தில வைச்சுக் கொண்டு தேடினீர்கள் என்றால் மாட்ட வாய்ப்புள்ளது! எந்த இடத்தில் இருக்கு என்று காட்டித் தொலைச்சிடுமே!)

image

இடத்தை காட்டியாச்சு… இனி எப்படி திரும்ப பெறுவது?

அதற்கு உங்கள் தொலைபேசியை நீங்க இருக்கும் இடத்தில் இருந்து அழைக்கலாம் (Ring). Silent ஆக இருக்கும் வகையில் மாற்றி இருந்தாலும் கவலை வேண்டாம். ஆகக் கூடிய சத்தத்தில் உங்கள் தொலைபேசியை அழைக்கமுடியும்! சத்தத்தை கேட்டு எடுத்த புண்ணியவான் தந்தால் சரி! தராவிட்டால் என்ன செய்வதாம்? முக்கியமான தகவல்கள் களவு போய்விடுமே!

எப்படி தகவல்களை காப்பது?

உங்கள் தொலைபேசி நிச்சயமாக கிடைக்காது என்று தெரிந்தவுடன் நீங்க அடுத்த அஸ்திரத்தை எய்யலாம். அதாவது உங்கள் தகவல்களை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்த வண்ணம் அழிச்சிடலாம்!

நானும் இந்த வசதியைப் பெறலாமா?

Adroid 2.2 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்கு தளத்தை கொண்ட கைத் தொலைபேசியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், நீங்களும் இந்த வசதியைப் பெறலாம். என்ன ஒன்று கூகிள் கணக்கும் கட்டாயம் தேவை!

Friday, July 12, 2013

Google Drive மூலம் Scan செய்தல்!

Google Drive ஐ நீங்கள் கைத் தெலைபேசியில், குறிப்பாக Android இயங்கு தளங்த்தில் இயங்கும் தொலைபேசியில்,  பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

நான் பெரும்பாலும் Google Drive ஐ அடிக்கடி பயன்படுத்தி வருபவன். சில கடிதங்களை Scan செய்து சேமிக்க வேண்டிய தேவை வருவதுண்டு. Google Drive இன் Android தொலைபேசிகளுக்கான மென்பொருளில் (Google Drive App for android) Scan  செய்வதற்கான வசதியை தந்திருக்கிறது கூகிள்.

Google Drive இனை உங்கள் கைத் தொலைபேசியில் திறந்து கொள்ளுங்கள்.

image

பின் காட்டப்படும் தெரிவு செய்வதற்கான பட்டியலில் Scan என்பதை தெரிவு செய்து Scan செய்யவேண்டியதை தொலைபேசி கமெரா மூலம் படம் எடுங்கள். நீங்கள் எடுத்த படம் தெளிவாக உங்களுக்கு திருப்தியாக இருந்தால் சேமியுங்கள்.

image

அவ்வளவு தான்!

இன்னும் Google Drive இனை கைத் தொலைபேசியில் பயன்படுத்தாதவர் எனில், தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள் –> Google Drive for Android

Friday, May 31, 2013

Google Drive இல் mp3 கோப்புகளை இயக்குதல்!

Google Drive என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கோப்புகளை சேமித்து எங்கிருந்தாலும் பயன்படுத்த உதவும் கூகிளின் சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தப் பதிவின் நோக்கம்  Google Drive இல் mp3 கோப்புகளை சேமித்து அதனை அதிலேயே இயக்கி கேட்பது எப்படி என்பது பற்றித் தான்!

Google Drive இல் mp3 கோப்பினை திறந்தால் என்ன நடக்குது என்று கீழே உள்ள படத்தில் காணலாம்.

image

சரி இப்ப என்ன செய்தால் mp3 கோப்பினை Google Drive இல் திறந்து கேட்கலாம் என்று பார்க்கலாம்.

ஏற்கனவே ஏதாவது mp3 கோப்பினை Google Drive இல் சேமித்து வைத்திருந்தால் அதன் மேல் வலது கிளிக் செய்து Open with –> Connect more apps என்பதை தெரிவு செய்யுங்கள்.

image

பின் music player என்று தட்டச்சு செய்து தேடுங்கள். Music Player for Google Drive என்பதற்கு பக்கத்தில் உள்ள CONNECT பொத்தானை அழுத்துங்கள். பின் மறக்காமல் இந்தச் செயலிக்கு அனுமதி கொடுக்க வேண்டும். இதனை Allow access  என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் செய்யலாம்.

image

அவ்வளவு தான் இப்போது Google Drive இல் mp3 கோப்புகளை திறந்து கேட்பதற்கான செயலியை இணைத்தாகி விட்டது. இனி mp3 கோப்புகளை நேரடியாக திறந்து கேட்க முடியும்.

image

 

mp3 கோப்பு எதுவும் உங்கள் Google Drive இல் இல்லாவிட்டால் Music Player செயலியை எப்படி இணைப்பது? கீழ் உள்ளவாறு செய்யுங்கள்.

Google Drive இல் Settings –> Manage apps என்பதை தெரிவு செய்து பின், Connect more apps என்பதை தெரிவு செய்யுங்கள். அதற்கு பின் மேலே சொன்னவாறு செய்யுங்கள். அவ்வளவு தான்.

image

Sunday, April 14, 2013

உங்கள் கூகிள் கணக்கு தொடர்பான உயில்!

நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்? குறி்ப்பிட்ட காலத்திற்கு நீங்கள் செயற்படா நிலையில் இருந்தால் என்ன நடக்க வேண்டும்? எதற்கு என்று தானே கேட்கிறீங்க? உங்கள் மின்னஞ்சல்கள், நீங்கள் தரவேற்றி வைத்திருக்கும் படங்கள் மற்றும் உங்கள் கோப்புகள் போன்றவைக்கு உங்கள் இறப்பின் பின்னோ அல்லது நீங்கள் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு செயற்படா நிலையில் இருந்தாலோ அவற்றிற்கு என்ன நடக்கவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு விடையாக கூகிள் அறிமுகப்படுத்தும் புதிய வசதி பற்றி தான் இந்த அறிமுகம். (கூகிளில் கணக்கை வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே!)

Inactive Account Manager – இது தான் கூகிளின் புதிய வசதி. இதனைப் பயன்படுத்தி செய்யக்கூடியவை

image

  • செயற்படா காலத்தை நிர்ணயம் செய்து கொள்ளல். (Timeout period)
  • செயற்படா காலத்தை அண்மிக்கும் போது உங்களுக்குத் தெரியப்படுத்துமாறு செய்தல்(மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம்)
  • குறிப்பிட்ட நபர் ஒருவரோடு உங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல்
  • அல்லது முற்றிலுமாக உங்கள் கணக்கை அழித்துவிடுதல்.(delete account)

மொத்தத்தில இது உங்கள் தகவல்கள் தொடர்பாக உயில் எழுதுதல்!

விரும்பினால் நீங்களும் செயற்படுத்தலாம்.

Sunday, March 31, 2013

உள்ளத்தில் உள்ளதை பதிவு செய்ய–கூகிள் கீப்!

“மனதில் உள்ளதை பதிவு செய்யுங்கள்.” இந்த வாசகத்தைச் சொல்லி Google Keep ஐ பயன்படுத்துங்கள் என்கிறது கூகிள். கூகிள் கீப் (யாருக்கு கீப் என்று கேட்டுத் தொலைக்காதீர்கள்…!) வேறு ஒன்றும் இல்லை. குறிப்பு எடுக்க உதவும் ஒரு மென்பொருள் அல்லது இணையத்தளம் அல்லது App!

ஒன்று போக ஒன்று தோன்றும் என்பது போல… கூகிள் நிறுவனம் அதன் பிரபல்யமான Google Reader இற்கு கட்டாய ஓய்வு கொடுப்பதாக அறிவித்து விட்டு (Google Reader இன் கடைசி நாள் July 1, 2013) Google Keep  ஐ களம் இறக்கியிருக்கிறது!

சாதரணமாக குறிப்பு எடுப்பதோடு மட்டுமல்லாமல் படங்களையும் இணைக்க முடியும். குறிப்புகளுக்கு வண்ணக் குறியீடும் செய்யலாம். பெரிசா எப்படி பயன்படுத்தணும் என்று சொல்லத் தேவையில்லை. கஸ்டம் ஒன்றும் இல்லை.

இந்த Google Keep  ஐ கணினி மூலமாகப் பயன்படுத்த விரும்பினால் இங்கே அழுத்துங்கள். இந்த வசதியை Google Drive இன் உள்ளங்கமாக இணைத்துள்ளார்கள். கைத் தொலைபேசியில் பயன்படுத்த விரும்பினால், Google Keep App ஐ தரவிறக்க வேண்டும். ஆனால்  ஒரு விசயம் Android 4.0 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்கு தளங்களை கொண்ட கைத் தொலைபேசிக்களில் மட்டும் தான் தற்போது கிடைக்கிறது. இதனை நீங்கள் Google Play இல் இருந்து தரவிறக்கலாம். iOS இயங்கு தளங்களை கொண்ட கருவிகளுக்கு (குறிப்பாக Iphone/Ipad) சீக்கரம் வரலாம் என்று நினைக்கிறேன்.

image

கடைசியாக ஒரு விசயம். ஏற்கனவே Evernote போன்ற பலரும் பயன்படுத்தும் இது போன்ற App களுக்கு போட்டியாக கூகிளின் அஸ்திரம் தான் இந்த  Google Keep!

எத்தனை பேருக்கு கீப்பாகுமோ மன்னிக்கவும் எத்தனை பேர் மனதை வெல்லும் என்று போகப் போக பார்க்கலாம்.

Sunday, March 3, 2013

முகப் புத்தகத்தில் ஒலிக் கவன ஈர்ப்பை நிறுத்துதல்!

நீங்கள் பல சாளரங்களை திறந்து வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சாளரங்களில் ஒன்று முகப் புத்தகம். முக்கியமாக வேறு ஒன்றில் கவனம் செலுத்தும் போது புதிதாக முகப் புத்தகத்தில் வரும் கவன ஈர்ப்புகள் (Nofitifications – மன்னிக்கவும் அடியேனின் தமிழ் கலைச் சொல் அறிவு அவ்வளவே!) சிறு ஒலி எழுப்பி, உங்களை “டே… என்னைப் பாரடா” என்று சொல்லாமல் சொல்லும். உடனே நம் கவனம் சிதறிவிடும்!

இவ்வளவு பீடிகை எதுக்கு என்று கேட்டால், முகப் புத்தகத்தில் இந்த மாதிரி வரும் ஒலிக் கவன ஈர்ப்பை நிறுத்துவது எப்படி என்று சொல்லத் தான்! (பெரிய விசயம் பாருங்க… )

முகப் புத்தகத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.

பின் Account Settings –> Notifications என்பதை தெரிவு செய்து “Notifications Settings” என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்.

கீழே படத்தில் காட்டியவாறு செய்யுங்கள்.

image

கடைசியாக கீழே படத்தில் காட்டியவாறு “Play a sound when each new notification is received” என்பதற்கான தெரிவை நீக்கிச் சேமியுங்கள்.

image

அவ்வளவு தான் இனி ஒலியுடன் கூடிய கவன ஈர்ப்புகள் வந்து உங்கள் கவனம் சிதறாது!

Friday, February 22, 2013

Google Drive இல் பது வசதி – Preview Files!

கூகிள் நிறுவனத்தின் பல சேவைகளில் ஒன்றான Google Drive அண்மையில் புது வசதி ஒன்றை அறிமுகப் படுத்தியது. அதாவது ஏறத்தாள 30 வகையான கோப்புகளை திறந்து பார்க்கும் வசதி (Preview) உள்ளமைக்கப் பட்டுள்ளது.

நீங்கள் Google Drive இல் தரவேற்றிய கோப்பை திறந்து பார்க்க விரும்பினால் அந்தக் கோப்பை வலது கிளிக் செய்து “Preview” என்பதை தெரிவு செய்தால் போதும்.

image

இதில் பல தரப்பட்ட கோப்புகளை பார்க்க முடிவதுடன் ஒரு கோப்பில் (PDF/Word) உள்ள எழுத்துக்களை தெரிவு செய்து பிரதி (Copy) எடுக்கவும் முடிகிறது. அத்துடன் கோப்பினை பெரிது படுத்தியும் பார்க்க முடியும்(Zoom). “Preview” நிலையில் இருந்து கொண்டு கோப்பினை அச்சடித்துக் (Print) கொள்ள முடியும். “Preview” நிலையில் இருந்து வெளியேற ESC பொத்தானை அழுத்தினால் சரி.

உண்மையில் இந்த வசதி சிறந்த ஒன்று தான் என்பதை பயன்படுத்திப் பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள்.

Wednesday, January 16, 2013

முகப் புத்தகம் அறிமுகப் படுத்தும் Graph Search!

முகப் புத்தகத்தின் தற்போதைய சூடான செய்தி அது அறிமுகப் படுத்தும் Graph Search என்பது. இது இன்னும் முழுமை பெற்ற பதிப்பாக வெளிவரவில்லை. மாறாக Beta பதிப்பாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். எல்லோாருக்கும் கிடைக்கப் பெற காத்திருக்க வேண்டும்.

அதெல்லாம் சரி. அது என்ன Graph Search? முதல்ல ஒரு விசயத்தை சொல்லணும். இது ஒன்றும் கூகிள் மாதிரி இணையத் தேடல் அல்ல. பிறகு? நல்லா கற்பனை பண்ணிப் பாருங்க. முகப் புத்தகத்தில் எத்தனை மில்லயன் கணக்கான தகவல்கள் சேமிக்கப் பட்டிருக்கு. ஆனால் தற்போது முகப் புத்தகத்தில் இருக்கும் தேடுதல் வசதியைப் பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தகவல்கள் மட்டுமே கிடைக்கப் பெறும். அதனால் அவர்கள் அறிமுகப்படுத்தும் இந்த Graph Search ஐ பயன்படுத்தி மிகச் சிறந்த தேடலை மேற்கொள்ளலாம்.

எப்படி எல்லாம் தேடலாம் என்பதற்கு சில உதாரணங்கள்.

  • நான் விரும்பிய படங்கள் எவை?
  • நான் இருக்கிற என் நகரத்தில் இருக்கும் நண்பர்கள் யார்?
  • குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை செய்யும் என் முகப் புத்தக நண்பர்கள் யார்?
  • பரிஸ் நகருக்கு சென்று வந்த நண்பர்கள் யார்?
  • கொழும்பில் எடுத்த படங்கள் எவை?

மேலே சொன்னவை எவை சாத்தியம் என்பதற்கான சில உதாரணங்கள். ஆனால் இதன் எல்லை பெரியது என்று முகப் புத்தகம் சொல்கிறது.

சரி எப்போது எனக்கு அந்த வசதி கிடைக்கும். தெரியல. ஆனால் நீங்கள் காத்திருப்போர் பட்டியலில் இணையலாம். இணைய விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.

image

கடைசியாக ஒரு விசயம். முகப் புத்தகம் வைத்திருக்கும் பல மில்லியன் கணக்கான தகவல்கள் கூகிளிடம் இல்லை (அதாவது எங்களைப் பற்றிய தகவல்கள்). ஆக Graph Search ஆனது முழுமை பெறும்போது அது கூகிளிற்கு சில சமயம் அச்சுறுத்தலாக இருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

மறக்காமல் முகப் புத்தகத்தில் கொம்பியூட்டர் உலகத்தை விரும்புங்கள்.

Sunday, January 13, 2013

Adobe CS2 இலவச தரவிறக்கம்!

வாசக நண்பர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்துக்கள்…!

நீங்கள் Adobe நிறுவனத்தின் ஏதேனும் மென்பொருளைப் பயன்படுத்தும் நபர் எனில் உங்களுக்கு இது பயன்படலாம்.

Adobe நிறுவனமானது தனது பழைய பதிப்பு மென்பொருட்கள் சிலவற்றை தனது தளத்தில் இருந்து இலவசமாக தரவிறக்க அனுமதிக்கிறது. கூடவே SERIAL NUMBER யையும் வழங்குகிறது. எவ்வளவு நாட்கள் மட்டும் இது அனுமதிக்கப்படும் என்று தெரியல. (இந்தப் பதிவு எழுதும் போது தரவிறக்கக் கூடியதாக இருந்தது.)

இதில் வழங்கப்படும் பழைய பதிப்பானது Adobe Creative Suite 2 என்று அழைக்கப்படும் Adobe CS2 பதிப்பாகும்.

image

தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...