நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Friday, December 28, 2012

முகப் புத்தகத்தில் ஒரு தந்திரம்(Trick)!

நீங்கள் முகப் புத்தகம் (Facebook) பயன்படுத்தும் நபரா? சரி இந்த பதிவு உங்களுக்குத் தான். ஒரு இணையப் பக்கத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் உள்ள படம் ஒன்று உங்களை ஈர்க்கிறது. என் முகப் புத்தகத்தில் பதிந்தால் என்ன என்று தோன்றுகிறது. உடனே என்ன செய்வீர்கள்? அந்தப் படத்தை உங்கள் கணினியில் தரவிறக்கி, பின் முகப் புத்தகத்தில் தரவேற்றுவீர்கள். சாதாரணமாக இப்படித் தான் பலரும் செய்கிறோம்.

இப்ப நான் சொல்ல வாற விசயம் என்னவென்றால், அப்படி நீங்கள் பயன்படுத்த விரும்பும் படத்தை தரவிறக்காமலே அதனை உங்கள் முகப் புத்தகத்தில் தரவேற்றிக் கொள்ளலாம். எப்படி?

படி 1 :

பயன்படுத்த விரும்பும் படத்தின் மேல் வலது கிளிக் செய்து Copy Image URL என்பதை தெரிவு செய்யுங்கள். இதன் மூலம் அந்தப் படத்தின் முகவரியை எடுக்கலாம்.

image

படி 2 :

இப்போது உங்கள் முகப் புத்தகத்திற்குச் சென்று, Add Photos/Video > Upload Photos/Video என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். நீங்கள் படத்தை தரவேற்றுவற்கான உரையாடல் பெட்டி (Dialogue Box) தோன்றும். அதில் File name இற்குப் பக்கத்தில் காணப்படும் பெட்டியில் (Text Box) நீங்கள் முன்பு பிரதி எடுத்த படத்திற்கான முகரியை ஒட்டி (Paste – Ctrl+V) விடுங்கள். ஒட்டிய பின்  Open என்ற கட்டளைச் செயற்படுத்துங்கள்.

image

படி 3 :

பெரிசா ஒன்றும் இல்லை. Post பண்ணி விடுங்கள்.

வாசக நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சரி புது வருடத்தில்  சந்திப்போம்…

Thursday, December 13, 2012

Google Drive இல் சேமிக்க Add-on!

கூகிள் வழங்கும் பல சேவைகளில் ஒன்று Google Drive. உங்கள் கோப்புகளைச் சேமித்து எங்கிருந்தாலும் எடுத்துப் பயன்படுத்தும் வசதி. சரி அதைப் பற்றி பெரிய விளக்கம் எல்லாம்  தேவை இல்லை. விசயத்திற்கு வருவோம்.

நீங்கள் ஒரு இணையப் பக்கத்தை நேரடியாக Google Drive இல் சேமிக்க வரும்புகிறீா்களா? அல்லது ஒரு படத்தை அல்லது ஒலி/ஒளிக் கோப்புகளை Google Drive இல் சேமிக்க விரும்புகிறீா்களா? Save to Google Drive என்ற Chrome add-on இதற்கு உதவுகிறது.

உதாரணமாக ஒரு படத்தை Google Drive இல் சேமிக்க விரும்பினால், அந்தப் படத்தின் மேல் வலது-கிளிக் செய்து SaveImage to Google Drive என்ற கட்டளையைச் செயற்படுத்தி இதனைச் செய்யலாம்.

image

முயன்று பாருங்கள். மறக்காமல் முகப் புத்தகத்தில் Like பண்ணி விடுங்கள்.

Sunday, August 5, 2012

ஜமெயில் மின்னஞ்சலை Track செய்வது எப்படி?

ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் சேவையை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படிப் பயன்படுத்தும் அன்பா்கள் தாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் பெறுநரால் திறந்து பார்க்கப் பட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

இதனைச் செய்வதற்கு RightInbox என்ற நீட்சி (Extension) உதவுகிறது. இந்த நீட்சியானது கூகிள் குரோம், நெருப்பு நரி மற்றும் சபாரி ஆகிய இணைய உலாவிகளுக்கு ஆதரவு தருகின்றது.

இதனை நிறுவிய பின் ஜிமெயிலை திறந்து புதிதாக ஒரு மின்னஞ்சலை எழுத Compose என்ற பொத்தானை அழுத்தினால் Send Now என்ற பொத்தானோடு புதிதாக வேறு சில பொத்தான்களும் தோன்றியிருப்பதைக் காணலாம்.

image

நீங்கள் புதிதாக மின்னஞ்சலை தயார் செய்த பின் மறக்காமல் Track என்பதை தெரிவு செய்து Send Now ஐ அழுத்துங்கள்.

அவ்வளவு தான். உங்கள் மின்னஞ்சல் பெறுநரால் திறக்கப்ட்டால் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்து சேரும்.

RightInbox ஆனது வேறு பல வசதிகளையும் தருகின்றது. Send Later என்பதைப் பயன்படுத்தி ஒரு மின்னஞ்சலை பிறிதொரு தினத்தில் அல்லது நேரத்தில் அனுப்பமுடியும். அத்துடன் Remind Me என்பதை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சலை நினைவு படுத்தச் செய்யலாம்.

தரவிறக்க இங்கே அழுத்தவும்

நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.

Wednesday, July 25, 2012

கூகிள் தேடு பொறியில் ஒரு கணிப்பான்!

கூகிள் தேடலை (Goolge Search) பயன்படுத்தாதவா் இல்லை எனலாம். சாதாரணமாக தேடும் பொறியாக மட்டும் இல்லாமல் பல பயனுள்ள வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக 18 x 9 என்பதன் விடை என்ன என்று காண கூகிள் தேடு பொறியை ஒரு கணிப்பான் போன்று பயன்படுத்தலாம். இது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். விடையை காட்டுவதோடு அது சம்பந்தப்பட்ட முடிவுகளையும் காட்டி வந்த கூகிள் தேடு பொறியானது இப்போது புது விதமாக அதனைக் காட்டுகின்றது.

அதாவது விடையோடு கூடிய கணிப்பான் ஒன்றையும் காட்டுகின்றது. நீங்கள் அந்தக் கணிப்பானைப் பயன்படுத்தி மேலதிக கணக்குகளுக்கான தீா்வினைக் காணமுடியும்.

கணிப்பானை காட்டுவதற்கு ஏதாவது கணக்கை தேடும் பெட்டியில் (Search Box) தட்டச்சு செய்து தேடுங்கள். விடையும் கணிப்பானும் தோன்றும்.

image

நீங்களும் இந்த அருமையான வசதியைப் பயன்படுத்திப் பாருங்களேன்.

Saturday, May 5, 2012

முகப் புத்தகத்திலிருந்து தானாகவே வெளியேறு…

நீங்கள் முகப் புத்தகப் பாவனையாளா் எனில் இந்தப் பதிவு உங்களுக்குப் பயன்படும். முகப் புத்தகத்தில் நுழையும் பயனா் அதிலிருந்து வெளியேறாமல் (Logout) விட்டுச் செல்வதால் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். நீங்கள் பதிந்தது போல் பதிவு (Post)  ஒன்றையோ அல்லது தேவையில்லாத படங்களையோ அந்தக் கணினியைப் பயன்படுத்துபவா் போடமுடியும்.

ஆகவே நீங்கள் பயன்படுத்தி முடித்த பின் குறிப்பிட்ட நேரத்திற்கு முகப்புத்தகத்தில் செயல்படு நிலையில் (Active) இல்லாத போது தானாகவே இயங்கி உங்கள் முகப் புத்தக கணக்கை முடித்து வைத்தால் (Logout) நல்லதல்லவா?

இதனை செய்வதற்கு ஒரு Add-on உதவுகிறது. இது நெருப்பு நரி (Firefox) உலாவியில் இயங்கக் கூடியது. இதன் பெயா் Facebook Auto-Logout. நெருப்பு நரி உலாவியில் நிறுவ இங்கே அழுத்தவும்.

நிறுவிய உடனே அது செயற்படத் தொடங்குகிறது. நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் Add-ons Manager இற்கு சென்று செய்யமுடியும். உதாரணமாக எவ்வளவு நேரத்திற்கு பின் உங்கள் கணக்கை முடித்து வைக்க வேண்டும் என்று மாற்றம் செய்ய முடியும்.

image

Sunday, January 8, 2012

முக புத்தகத்திற்கான குறுக்கு வழிகள்!

நீங்கள் விசைப் பலகையை பெரும்பாலும் பயன்படுத்துபவா் எனில், விசைப் பலகை குறுக்கு வழிகளை தெரிந்து வைத்திருத்தல் நல்லது. இந்தப் பதிவில் முகப் புத்தகத்தில் பயன்படுத்தக் கூடிய குறுக்கு வழிகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நீங்கள் குரோம் இ.உலாவி பயன்படுத்துபவா் எனில்,

Alt உடன் கீழ்க்காணும் குறுக்கு வழிகளை பயன்படுத்தலாம். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)

1 – home
2 – timeline/profile
3 – friends
4 – messages
5 – notifications
6 – general account settings
7 – privacy settings 
8 – முகப் புத்தகத்தின் facebook page
9 – legal terms
0 – help center
m – new messages
? – search

நெருப்பு நரி இ.உலாவி எனில், Shift + Alt உடன் மேற்காணும் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துங்கள். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)

இன்ரநெட் எஸ்புளோரா் 9 எனில், சில குறுக்கு வழிகள் மாத்திரமே செயற்படுகின்றன.(Alt+#,Enter)

Mac இயங்கு தளம் எனில்,

  • குரோம் – Control+Option+#
  • நெருப்பு நரி  - Control + #
  • சபாரி - Control+#

பிறகென்ன விசைப் பலகை குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி அசத்துங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...