நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Wednesday, December 28, 2011

முகப் புத்தக அரட்டையில் படங்கள்!

முகப் புத்தகத்தில் (Facebook) அரட்டை அடிக்கும் நபரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

முகப் புத்தகத்தில் அரட்டை அடிக்கும்போது குறித்த ஒரு நபரின் பெயரை தட்டச்சு செய்யாமல் அவரின் சுயவிபரத்தில் (Profile) இல் இருக்கும் படத்தை (Profile Picture) அரட்டைக்குள் கொண்டுவருவது எவ்வாறு என்று முதலில் காண்போம்.

இதனைச் செய்வதற்கு நீங்கள் குறித்த நபரின் அல்லது பக்கத்தின் சுயவிபர எண்(Profile ID) அல்லது பெயரைத் (Profile Name) தெரிந்து கொள்ள வேண்டும். குறித்த நபரின் அல்லது பக்கத்தின் சுயவிபரத்தை திறந்து கொள்ளுங்கள். மேலே முகவரிப் பெட்டியில் (Address Bar) சுயவிபர எண் அல்லது பெயர் காணப்படும். (பார்க்க படம்)

சுயவிபர பெயா் [Profile Name]

image

சுயவிபர எண் [Profile ID]

image

மேலே படத்தில் காட்டியவாறு சுயவிபர எண் அல்லது பெயரைப் பிரதி செய்து கொள்ளுங்கள். (Ctrl+C)

பின் நீங்கள் அரட்டை அடிக்கும் நபருக்கு [[சுயவிபர எண் அல்லது சுயவிபர பெயா்]] என வருமாறு அனுப்புங்கள்.

உதாரணமாக “உங்களுக்கு [[161910833903661]] ஐ தெரியுமா?” என்ற செய்தியை அனுப்புகிறீா்கள்.

image

அது அவா்களுக்கு கீழ் உள்ளது போல் போய்ச் சேரும்.

image

மேற்கண்டவாறு ஒரு நபரின் சுயவிபரப் படத்தை அரட்டையோடு பகிர்ந்து கொள்ளமுடியும்.

கடைசியாக ஒன்று, நீங்கள் தட்டச்சு செய்யும் எழுத்துக்களை பல வண்ணங்களில் முகப் புத்தக அரட்டையில் பகிர்ந்து கொள்ள கீழ்க் காணும் தளத்திற்குச் செல்லுங்கள். (படத்தின் மேல் கிளிக் செய்யவும்.)

image

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

Thursday, December 22, 2011

பல தத்தல்களை புத்தகக்குறி செய்தல்…!

நீங்கள் பல தத்தல்களை (Tab) ஒரே நேரத்தில் திறந்து வைத்துள்ளீா்கள் என்று வைத்துக் கொள்வோம்.எல்லாத் தத்தல்களையும் ஒரே நேரத்தில் புத்தகக்குறி (Bookmark) செய்வது எவ்வாறு என்று காண்போம்.

நீங்கள் கூகிள் குரோம் இணைய உலாவியைப் பயன்படுத்துபவா் எனில்,

ஏதாவது ஒரு தத்தல் மேல் வலது கிளிக் செய்து Bookmark all tabs… என்பதை தெரிவு செய்யுங்கள். அல்லது Ctrl + Shift + D என்ற குறுக்கு வழியைப் பயன்படுத்துங்கள். (வாழ்க்கையில தானுங்க குறுக்கு வழி கூடாது!)

image

அடுத்து நீங்கள் நெருப்பு நரி இணைய உலாவியைப் பயன்படுத்துபவா் எனில்,

ஏதாவது ஒரு தத்தல் மேல் வலது கிளிக் செய்து Bookmark All Tabs… என்பதை தெரிவு செய்யுங்கள் அல்லது Ctrl + Shift + D.

image 

இறுதியாக நீங்கள் Internet Explorer ஐ பயன்படுத்துபவா் எனில்,

கீழே படத்தில் காட்டியவாறு செய்யவும்.

image

ஆக இனிமேல் ஒவ்வொரு தத்தலாக புத்தகக்குறி செய்வதை விடுத்து மேலே காட்டியவாறு இலகுவாக செயற்படலாம்.

------------------------------------------------------------------------------

தத்தல் – Tab

புத்தகக்குறி – Bookmark

(மேலே உள்ள சொற் பிரயோகங்கள் தவறெனில் சுட்டிக் காட்டுங்கள். )

Friday, December 16, 2011

முகப் புத்தகத்தில் ஒரு துணைக் கோப்புறை(Sub Folder)

முகப் புத்தகத்தில் (Facebook) உங்களுக்கு அனுப்பப்படும் தனி மடல்கள் Messages என்ற கோப்புறையினுள் (Folder) தொகுக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் Messages என்ற கோப்புறையைத் தவிர துணைக் கோப்புறை (Sub folder) ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். (எங்களுக்கு எல்லாம் தெரியும்… நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்!) Other என்ற பெயரில் அமைந்த அந்த துணைக் கோப்புறை பற்றி சொல்லத் தான் இந்தப் பதிவு…

பொதுவாக உங்கள் நண்பா்களிடம் இருந்து வரும் தனி மடல்கள் Messages என்ற கோப்புறையினுள் சேமிக்கப்படும். உங்கள் நண்பா்கள் அல்லாதவா்களிடம் இருந்தோ உங்கள் நண்பா்களின் நண்பா்களிடம் இருந்தோ வரும் தனி மடல்கள் இந்த Other என்ற துணை கோப்புறையினுள் சேமிக்கப்படும். அது மட்டுமல்லாமல் நீங்கள் இணைந்த குழுக்களிடம் இருந்து அனுப்பப்படும் மடல்களும் Other என்ற துணைக் கோப்புறையினுள் சேமிக்கப்படும். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த துணைக் கோப்புறையினுள் சேமிக்கப்படும் மடல்களைப் பற்றி முகப் புத்தகம் உங்களுக்கு அறிவிக்காது. ஆக நீங்களாப் பார்த்தா தான் உண்டு.

எனக்கு தெரிந்த நண்பா் ஒருவா் கடந்த சித்திரையில் அனுப்பிய தனி மடல் ஒன்றை அண்மையில் தான் பார்க்க நேரிட்டது. காரணம் அவா் என் நண்பா் பட்டியலில் இல்லை. ஆக Other என்ற துணைக் கோப்புறையினுள் அவா் அனுப்பிய மடல் சேமிக்கப்பட்டு விட்டது. உங்களுக்கும் இதே மாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

அந்த துணை கோப்புறையை பார்வையிட Messages ஐ கிளிக் செய்யுங்கள். நீங்கள் கிளிக் செய்தவுடன் Other என்ற துணைக் கோப்புறை தோன்றும். அதற்குள் சேமிக்கப்பட்டுள்ள மடல்களைப் பார்வையிட அதனைக் கிளிக் செய்ய வேண்டும்.

image

இப்ப அடுத்த கேள்வி எவ்வாறு Other துணை கோப்புறையினுள் உள்ள மடலை Messages இற்கு மாற்றுவது? இது மிக எளிது.

மாற்ற வேண்டிய மடலை திறந்து கொள்ளுங்கள். பின் Actions –> Move to Messages என்பதை தெரிவு செய்யுங்கள். அவ்வளவு தான்.

image

உங்களுக்கு இந்தப் பதிவு பயன்பட்டதா? எழுதுங்கள் ஒரு வார்த்தை…

Saturday, December 3, 2011

VLC மூலம் காணொளி ஒன்றை வெட்டுதல்…

VLC Player ஐ நீங்கள் அறிந்திருக்கலாம் அத்தோடு பயன்படுத்தவும் செய்யலாம். VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின் (Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.

VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.

image

நீங்கள் தெரிவு செய்தவுடன் கீழே மேலதிக பொத்தான்கள் தோன்றும்.

image

இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள். பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள். இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுவிடும். (இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் சேமிக்கப்படும்.)

image

இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக் கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.

முயன்று பாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...