நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Tuesday, November 22, 2011

கூகிள்+ இல் பக்கம் ஒன்றை உருவாக்கல்…

முகப் புத்தகத்திற்குப் போட்டியாக கூகிள் என்ற விருட்சத்தில் இருந்து முளைத்த கிளை தான் கூகிள்+ (Google Plus). ஆனால் கூகிள்+ எவ்வளவு தூரத்திற்கு வெல்ல முடியும் என்று தெரியவில்லை. கடைசியில் “போயிட்டு வாறன்…” என்று சொல்லி விட்டுப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆருடம் எதுவும் சொல்ல நான் வரவில்லை.

முகப் புத்தகத்தை பயன்படுத்துபவா்கள் அதில் இருக்கக்கூடிய Page என்ற வசதியைப் பற்றி அறிந்திருக்கலாம். இந்த Page மூலம் வியாபார நிறுவனங்கள் அல்லது தனி நபா் விரும்பிய ஒன்றிற்காக ஒரு பக்கத்தை உருவாக்க முடியும். ஊதாரணமாக ஒரு நடிகா் தன் பெயரில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் தன் விசிறிகளை இணைத்து தன் சம்பந்தப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். மிகுந்த பயன் உடைய இந்தப் பக்கம் என்ற வசதியை கூகிள்+ உம் தனக்குள் கொண்டு வந்துள்ளது. இந்தப் பதிவில் எவ்வாறு கூகிள்+ இல் பக்கம் ஒன்றை உருவாக்குவது என்று பார்ப்போம்.

எனது இந்த வலைப் பூவிற்கு ஒரு பக்கத்தை உருவாக்கப் போகிறேன். பக்கம் ஒன்றை உருவாக்குவதற்கு நீங்கள் கூகிள்+ இல் இணைத்திருக்கவேண்டும். (இல்லாவிட்டால் இணையுங்கள்… சும்மா ஒரு வேடிக்கைக்காக இணைந்து பாருங்களேன்.) இந்த இணைப்பை அழுத்துவதன் மூலம் கூகிள்+ இல் பக்கத்தை உருவாக்கும் பகுதிக்குச் செல்லுங்கள்.

image

பின் உங்கள் பக்கம் எது தொடா்பானதோ அதற்கேற்ப ஒரு பிரிவை(Category) தேர்ந்தெடுங்கள். Other என்பதை எனது வ.பூவிற்கு தெரிவு செய்கிறேன்.

image

மேலே காட்டிய விபரங்களை கொடுத்த பின் Pages Terms என்பதை ஒத்துக்கொண்டு (வேற வழி?) அதையும் தெரிவு செய்து CREATE பொத்தானை அழுத்துங்கள். பின் வரும் பகுதியில் Tagline மற்றும் Profile photo போன்றவற்றைக் கொடுத்து Continue பொத்தானை அழுத்துங்கள்.

image

அடுத்து நான் ஒரு பக்கம் உருவாக்கி விட்டேன் என்று உங்கள் நண்பா்களுக்கு அல்லது மற்றவா்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

image

இறுதியாக Finish பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் உருவாக்கிய பக்கத்திற்கு செல்லலாம்.

இன்னுமொரு விசயம்… Get the badge என்ற இணைப்பிற்கு சென்று விரும்பிய badge ஒன்றை உருவாக்கி அதனை உங்கள் இணையப் பக்கத்தில் இணைக்க முடியும்.

பிறகென்ன புகுந்து விளையாட வேண்டியது தானே!

Sunday, November 6, 2011

இணைப்பு டுவீட்டரில் ஏற்கனவே பகிரப்பட்டதா?–IsItOld?

நீங்கள் ஒரு இணைப்பை உதாரணமாக ஒரு Youtube வீடியோ இணைப்பை உங்கள் நண்பருடனோ அல்லது மற்றவா்களுடனோ பகிர்ந்து கொள்ள நினைக்கிறீா்கள். அவ்வாறு நீங்கள் பகிர்ந்த இணைப்பைப் பார்த்த நண்பா் “மச்சான் நான் எப்பவோ இதை வேற ஒரு இணையப் பக்கத்தில பார்த்திட்டன்…” என்று சொல்லும் போது நீங்கள் அசடுவழியலாம்!

ஆக ஒரு இணைப்பை பகிர்ந்து கொள்ள முதல் அந்த இணைப்பு ஏற்கனவே பகிரப்பட்டதா இல்லையா என்று யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் எப்படி இருக்கும்? இதனைச் செய்ய ஒரு இணையப் பக்கம் (isitold) உதவுகிறது. அந்த இணையப் பக்கத்தில் நீங்கள் பகிர நினைக்கும் இணைப்பை கொடுத்தால் அது, அந்த இணைப்பு எத்தனை தடவை டுவீட்(Tweet) செய்யப்பட்டது… முதலில் எப்போது டுவீட் செய்யப்பட்டது போன்ற தகவல்களைத் தருகின்றது. அத்தோடு அந்த இணைப்பை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்ற தகவலையும் தருகின்றது.

சும்மா ஒருக்கா நீங்களே முயற்சித்துப் பாருங்கள். இங்கே அழுத்துங்கள்

image

குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் இதனைப் பயன்படுத்த நீங்கள் உங்களை இந்த இணையப் பக்கத்தில் பதியத் தேவையில்லை. 

Related Posts Plugin for WordPress, Blogger...