நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Saturday, August 27, 2011

முக நூலில் பெரிய,வேகமாக இயங்கும் படங்கள்!

முக நூலில் நாளொன்றில் 250 மில்லியன் படங்கள் (Photos) தரவேற்றப்படுகின்றன. இவ்வாறு மிகப் பெரிய  எண்ணிக்கையில் படங்கள் தரவேற்றப்படுவதோடு மற்றவா்களுடன் பகிரவும் படுகின்றன.

இவ்வாறு தரவேற்றப்படும் படங்களைப் பார்வையிடும்போது அதன் அளவானது இதுவரை 720 Px (Pixels) என்ற காட்சித் தெளிவில் (சிறிதாக) காட்டப்பட்டன. இனி இந்த அளவானது 960 Px என்ற அளவுக்கு (சற்றுப் பெரிதாக) மாற்றப்படுகின்றது. இதன் மூலம் படமானது கூடிய தெளிவில் தெரிவதுடன் சற்றுப் பெரிதாகவும் தெரியும். ஏற்கனவே தரவேற்றப்பட்ட படங்களும் இந்த அளவில் காட்டப்படும்.

அத்தோடு படங்களை பார்வையிடும் போது பின்னணியில் கறுப்பு நிறத்திற்குப் பதில் வெள்ளை நிறத்தில் படம் தோன்றும்.

அது மாத்திரமில்லாமல் படங்கள் தோன்றும் நேரம் (Loading Time) குறைக்கப்பட்டு வேகமாக தோன்றும் (Faster Loading) விதமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அடுத்து வரும் நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்று முக நூல் அறிவித்துள்ளது.

Monday, August 22, 2011

FB Refresh - குரோம் நீட்சி!

image

நீங்கள் மேலே பார்ப்பது முக நூலின் வழமையான தொடக்கப் பக்கம் (Home Page).  முக நூலே தவம் என்று கிடப்பவா்களுக்கு இந்தப் பக்கத்தைப் பார்த்து அலுத்துக் கூடப் போகலாம்.

பின்புலத்தில் வேறு படங்கள் தோன்றுமாறு மாற்றி அமைத்தால் என்ன?

யாரோ ஒரு புண்ணியவானுக்கு (?) இந்த எண்ணம் தோன்றியிருக்கவேண்டும். FB Refresh என்ற பெயரில் கூகிள் குரோமில் இயங்கக் கூடிய நீட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த நீட்சியை நிறுவியவுடன் முகநூலின் வழமையான தொடக்கப் பக்கம் மறைந்து புதுத் தொடக்கப் பக்கம் தோன்றும்.  கீழே உள்ள படம் பார்க்க.

image

நீங்களும் தரவிறக்கி நிறுவ விரும்பினால் இங்கே அழுத்தவும்.

பின் புலத்தில் தோன்றக்கூடிய படத்தை மாற்ற விரும்பினால் Tools –> Extensions சென்று FB Refresh இற்குரிய Options ஐ செயற்படுத்தி படத்திற்கான இணைய முகவரியை கொடுத்துச் சேமித்தால் சரி.(கணினியில் உள்ள படங்களைப் பயன்படுத்த முடியாது.)

image

சரி வேறு ஒரு பதிவில் சந்திப்போம். Winking smile

Friday, August 19, 2011

Blogger இல் +1 பொத்தான் தோன்றவில்லையா?

நீங்கள் Blogger பயன்படுத்தும் நபா் எனில் உங்களுக்கு இந்தப் பதிவு சில வேளைகளில் பயனுள்ளதாக அமையும்.

நீங்கள் எழுதும் பதிவுகளை மற்றவா்களோடு பகிர்ந்து கொள்வதற்கென ஒரு பகிரல் பட்டை ஒன்றை (Share Buttons) நீங்கள் எழுதும் பதிவுகளின் கீழ் இணைப்பதன் மூலம் வாசிக்கும் நபா் உங்கள் பதிவை பல தளங்களில் பகிரமுடியும்.

இதனை Blogger இல் இலகுவாக செய்ய முடியும்.

image

மேலே படத்தில் காட்டியவாறு Blog Posts என்பதன் கீழ் உள்ள Edit என்ற இணைப்பை அழுத்தி திறந்து கொள்ளுங்கள். பின் கீழே படத்தில் காட்டியவாறு Show Share Buttons என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

image

இவ்வாறு செய்தவுடன் அதில் உள்ள பகிரல் பொத்தான்கள் எல்லாம் உங்கள் ஒவ்வொரு பதிவின் கீழும் தோன்றும். இங்கே தான் பிரச்சனை வருகிறது. அதாவது +1 பொத்தான் தோன்றவில்லை (சில வேளைகளில் அல்லது சில Template களில்).  +1 பொத்தானை தோன்றச் செய்வது எவ்வாறு?

இதற்கு நீங்கள் உங்கள் வ.பூ Template இனைத் திறந்து <head> … </head> பகுதியினுள் கீழ் உள்ள நிரலை இணைத்து விடுங்கள்.

<script src='http://apis.google.com/js/plusone.js' type='text/javascript'/>

image

அவ்வளவு தான் இப்போது மற்றைய பொத்தான்களுடன் +1 பொத்தானும் தோன்றும்.

image

இந்தப் பதிவு ஏதேனும் விதத்தில் உதவியிருப்பின் மறக்காமல் கருத்திடுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...