நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Saturday, May 21, 2011

முக நூலில் ஆல்பங்களுக்கிடையில் படங்களை மாற்றல்…

முக நூலில் ஆல்பங்கள் பல வைத்திருக்கும் நபா் நீங்கள் எனில், உங்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகின்றேன்.

ஆல்பங்கள் பல வைத்திருக்கும்போது தவறுதலாக ஒரு ஆல்பத்தில் இடம்பெறவேண்டிய ஒரு படம் வேறு ஒரு ஆல்பத்தில் சோ்க்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கலாம். தவறுதலாக இடம்பெற்ற படத்தை அந்த ஆல்பத்திலிருந்து நீக்கி மற்ற ஆல்பத்தில் சோ்க்கவேண்டும். இதனை முக நூலில் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் Photos—> My uploads இற்குச் செல்லுங்கள்.

image

நீங்கள் நீக்க வேண்டிய பட ஆல்பத்தின் கீழ் உள்ள Edit Album என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

image

பின் வரும் பக்கத்தில் Edit Photos இற்குச் செல்லுங்கள்.

image

அடுத்து நீங்கள் நீக்கவேண்டிய படத்தை கண்டுபிடித்து அதன் கீழுள்ள Move to என்பதில் எந்த ஆல்பத்திற்கு இந்தப் படம் போய்ச் சேரவேண்டுமோ அந்த ஆல்பத்தை தெரிவு செய்யுங்கள். 

image

இறுதியாக Save Changes என்ற பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

image

குறிப்பு :Profile pictures மற்றும் Wall Photos ஆகிய  நீங்கள் உருவாக்காத ஆல்பங்களுக்கு ஒரு படத்தை பிறிதோரு ஆல்பத்திலிருந்து மாற்றமுடியாது.

6 comments:

SURESH said...

USEFUL DETAILS THANKS!!!!!!!!!!

கந்தசாமி. said...

பயனுள்ள தகவல் சகோ நன்றி

கவி ரூபன் said...

சுரேஸ், கந்தசாமி உங்கள் இருவா் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

Lakshmi said...

உங்களை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கேன்
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_09.html

கவி ரூபன் said...

லக்ஸ்மி,

உங்கள் அறிமுகத்திற்கு நன்றிகள்...

Anonymous said...

பிரியமான நண்பருக்கு, தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை . ஒரு வீடியோவில் உள்ள பாடலை நீக்கிவிட்டு, அந்த காட்சிகளுக்கு வேறு பாடலை இணைப்பது எப்படி? தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
m.navaskhan@yahoo.com

Related Posts Plugin for WordPress, Blogger...