நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Saturday, May 21, 2011

முக நூலில் ஆல்பங்களுக்கிடையில் படங்களை மாற்றல்…

முக நூலில் ஆல்பங்கள் பல வைத்திருக்கும் நபா் நீங்கள் எனில், உங்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகின்றேன்.

ஆல்பங்கள் பல வைத்திருக்கும்போது தவறுதலாக ஒரு ஆல்பத்தில் இடம்பெறவேண்டிய ஒரு படம் வேறு ஒரு ஆல்பத்தில் சோ்க்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கலாம். தவறுதலாக இடம்பெற்ற படத்தை அந்த ஆல்பத்திலிருந்து நீக்கி மற்ற ஆல்பத்தில் சோ்க்கவேண்டும். இதனை முக நூலில் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் Photos—> My uploads இற்குச் செல்லுங்கள்.

image

நீங்கள் நீக்க வேண்டிய பட ஆல்பத்தின் கீழ் உள்ள Edit Album என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

image

பின் வரும் பக்கத்தில் Edit Photos இற்குச் செல்லுங்கள்.

image

அடுத்து நீங்கள் நீக்கவேண்டிய படத்தை கண்டுபிடித்து அதன் கீழுள்ள Move to என்பதில் எந்த ஆல்பத்திற்கு இந்தப் படம் போய்ச் சேரவேண்டுமோ அந்த ஆல்பத்தை தெரிவு செய்யுங்கள். 

image

இறுதியாக Save Changes என்ற பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

image

குறிப்பு :Profile pictures மற்றும் Wall Photos ஆகிய  நீங்கள் உருவாக்காத ஆல்பங்களுக்கு ஒரு படத்தை பிறிதோரு ஆல்பத்திலிருந்து மாற்றமுடியாது.

Thursday, May 12, 2011

குரோமில் மேம்பட்ட History பக்கம்–குரோம் நீட்சி…

நீங்கள் கூகிள் குரோம் பயன்படுத்துபவா் எனில் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

கூகிள் குரோம் உலாவியில் அண்மையில் நீங்கள் வலம் வந்த இணையப் பக்கங்களின் பட்டியலை பார்வையிட Ctrl + H ஐ அழுத்துவதன் மூலம் History (நீங்கள் வலம் வந்த இணையப் பக்கங்களின் பட்டியல்) பக்கம் தோன்றும். இதன் மூலம் நீங்கள் எந்த நாளில் எந்தப் பக்கத்திற்குச் சென்று வந்தீா்கள் என்று அறியலாம். ஆனால் குரோமில் உள்ளமைந்த இந்த History பக்கம் வேண்டிய தகவலை சரியான முறையில் தருவதில்லை. அதாவது இன்று சென்று வந்த பக்கங்களையோ அல்லது 1 நாளைக்கு முன் சென்ற பக்கங்களையோ வகைப்படுத்திப் பார்க்கமுடியாது.

இந்தக் குறையை நிவா்த்தி செய்து History ஐ மேம்பட்ட பக்கமாக மாற்ற History 2 என்ற குரோம் நீட்சி உதவுகின்றது.

இந்த மேம்பட்ட History பக்கத்தில் இன்று,நேற்று அல்லது அதற்கு முதல் நாள் என வகைப்படுத்திப் பார்க்கலாம். அத்துடன் இந்த மேம்பட்ட பக்கமானது ஒவ்வொரு Domain ஐயும் ஒன்றாக தொகுத்து அந்த Domain இல் எத்தனை பக்கங்களுக்கு சென்று வந்தோம் என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

History 2

நீங்களும் இந்த நீட்சியை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் இங்கே கிளிக் செய்யுங்கள்.

Monday, May 9, 2011

1001 இலவச எழுத்துருக்கள்!

இந்தப் பதிவின் நோக்கம் ஒரு இணையத் தளத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதாகும்.

எழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது 1001 எழுத்துருக்களை இலவசமாக வழங்குகின்றது. விண்டோஸ் மற்றும் மக்(Mac) இயங்குதளங்களில் இயங்கும்  வகையில் இந்த எழுத்துருக்கள் அமைகின்றன.

அகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்படுள்ளதால் இலகுவாக வேண்டிய எழுத்துருவை கண்டுபிடித்து தரவிறக்கம் செய்யலாம். பல்வேறு வகைகளின் கீழ் பல எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த இணையத்தளம் இது தான் 1001freefonts.com

image

நீங்களும் ஒரு தரம் சென்று பாருங்கள். உங்களுக்கு வேண்டிய எழுத்துருக்களை இலவசமாக நீங்கள் தரவிறக்கலாம்.

Friday, May 6, 2011

Sumo Paint – Photoshop போன்ற மென்பொருள்!

P

hotoshop பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. Photoshop ஐ  நீங்கள் பயன்படுத்துபவா்களாக கூட இருக்கலாம். இலகுவான இந்த மென்பொருள் இலவசம் இல்லை என்பதால் சிலா் கட்டற்ற (Open source) Photoshop போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதும் உண்டு. (உ-ம் : GIMP, Paint.NET) அதே போன்று இணைய உலாவியினுள் இயங்கும் வகையில் Photoshop போன்ற மென்பொருட்களும் உண்டு.

இந்தப் பதிவில் இணைய உலாவியினுள் இயங்கும் Photoshop போன்ற மென்பொருள் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த மென்பொருளின் பெயா் Sumo Paint.

Sumo Paint ஐ நேரடியாகத் திறப்பதற்கு இங்கே அழுத்தவும்.

image

மேலே உள்ள படத்தைப் பார்ப்பதன் மூலம் Sumo Paint ஆனது அப்படியே Photoshop போல இருப்பதைக் காணலாம்.

நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் விருப்பத்திற்குரிய மென்பொருளாக இது அமையலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...