நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Saturday, April 30, 2011

ஜிமெயிலில் Default Text Style ஐ மாற்றுதல்…

இந்தப் பதிவும் ஜிமெயில்(Gmail) தொடா்பானது தான்.

ஜிமெயிலில் ஒரு மின்னஞ்சலை தட்டச்சு செய்யும் போது குறிப்பிட்ட எழுத்துருவில் குறிப்பிட்ட அளவில் (Default font & font size) எழுத்துக்கள் தோன்றும். அவ்வாறில்லாமல் நீங்கள் தெரிவு செய்யும் எழுத்துரு மற்றும் அளவில் ஒவ்வொரு புது மின்னஞ்சலும் தட்டச்சு செய்யப்படவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்யலாம்? அதனை எவ்வாறு செய்வது? அதைப் பற்றித் தான் இந்தப் பதிவு கவனம் செலுத்துகின்றது.

முதலில் Mail settings –> Labs சென்று Default Text Styling என்பதை தேடிப் பிடித்து அதனைச் செயற்படுத்தி (Enable) விடுங்கள். மறக்காமல் Save Changes பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

image

பின் Mail settings –> General சென்று Default text style என்பதில் வேண்டிய மாற்றங்களை செய்யவேண்டும். மாற்றங்களை செய்யவதற்கு முன் Remove Formatting என்ற பொத்தானை அழுத்தி default text style இற்கு கொண்டு வரவேண்டும்.

image

இனிமேல் மாற்றங்களைச் செய்யத் தொடங்கலாம். உதாரணமாக எழுத்துருவை Wide என்றும் எழுத்துருவின் அளவை Large என்றும் எழுத்துக்கு வா்ணமாக நீலத்தையும் தெரிவு செய்து சேமியுங்கள். அதன்பின் Compose mail என்ற பொத்தானை அழுத்தி புது மின்னஞ்சலை எழுதத் தொடங்குங்கள். நீங்கள் செய்த மாற்றங்களுடன் எழுத்துக்கள் தட்டச்சு செய்யப்படும். (ஒவ்வொரு புது மின்னஞ்சலும் இதே மாற்றங்களுடன் தட்டச்சு செய்யப்படும்.)

image

நீங்களும் வேறு பல மாற்றங்களைச் செய்து (உ-ம் – Bold & Italic) பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...