நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Monday, April 25, 2011

முக நூல் அல்பங்களை தரவிறக்குதல்…

இந்தப் பதிவும் முக நூல்(Facebook) தொடா்பான ஒன்று தான்.

முக நூலில் நீங்கள் நிறைய நண்பா்களை வைத்திருக்கிறீா்கள் என்றால் நிறைய பட அல்பங்களையும் நீங்கள் கொண்டிருக்கிறீா்கள் என்று சொல்லலாம். அது எப்படி என்றால் உங்கள் பட அல்பங்கள் உங்கள் நண்பா்களின் அல்பங்கள் என்று நூற்றுக்கணக்கான அல்பங்களை நீங்கள் பார்க்கக்கூடியதாய் இருக்கும். சில நேரங்களில் நண்பா்களின் சில படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும். ஆனால் அவற்றை நண்பா் எப்போதும் அழிக்காமலே வைத்திருப்பார் என்று சொல்ல முடியாது.

ஆக நண்பரின் முழு அல்பத்தை அல்லது சில படங்களை அல்லது உங்கள் அல்பங்களை அல்லது தெரிவு செய்த படங்கள் சிலவற்றை தரவிறக்கிக் கொள்வது எப்படி?

இதனை இலகுவாக செய்து முடிக்க இருக்கவே இருக்கிறது இணையத் தளம் ஒன்று. அது picknzip.com

image

முற்றிலும் இலவசமாக கிடைக்கும் pick&Zip ஐ பயன்படுத்தி படங்களை .zip அல்லது .pdf கோப்புகளாக தரவிறக்க முடியும்.

நீங்களும் முயன்று பாருங்கள்.

2 comments:

Kumaran said...

தயவு செய்து அதை "ஆல்பம்" ன்னு மாத்திருங்க

கவி ரூபன் said...

//தயவு செய்து அதை "ஆல்பம்" ன்னு மாத்திருங்க//
அல்பம் என்று சொல்வதில் பிழை இருப்பதாக தெரியவில்லையே...

இங்கு சென்று பாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...