நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Sunday, April 17, 2011

முக நூலில் அல்பத்தின் அட்டைப் படம்…

முக நூலை(Facebook) ஐப் பயன்படுத்தி பல பட அல்பங்களை (Photo Album) உருவாக்கியுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

பொதுவாக முக நூலில் ஒரு அல்பத்தை உருவாக்கினால், அது உங்களது முதலாவது படத்தை அல்பத்தின் அட்டைப் படமாக எடுத்துக் கொள்ளும். சில நேரங்களில் அது பொருத்தமற்ற அட்டைப் படமாக அமையலாம். அந்தச் சந்தா்ப்பங்களில் எப்படி அட்டைப் படத்தை மாற்றுவது? அது தொடா்பாகத் தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

முதலில் முக நூலில் நுழைந்து கொள்ளுங்கள்.

உங்களது முக நூலின் இடது பக்கத்தில் உள்ள Photos –> My Uploads என்பதை கிளிக் செய்யுங்கள்.

image

அட்டைப் படத்தை மாற்றவேண்டிய அல்பத்தின் கீழ் உள்ள Edit Album என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

image

Edit Photos என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

image

அல்பத்தில் உள்ள படங்களில் அட்டைப் படமாக மாற்றவேண்டிய படத்தின் கீழ் உள்ள This is the album cover என்பதை தெரிவு செய்யுங்கள்.

image

இறுதியாக Save Changes என்ற பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

image

அவ்வளவு தான் உங்கள் அல்பத்தின் அட்டைப் படம் இப்போது மாறியிருக்கும்.

5 comments:

Mahan.Thamesh said...

nanri thagavalukku

jafrin said...

enakku tamil type easyyaga adikka ethu vasathiyaga irukkum plz athu vilakkam tharavum

கவி ரூபன் said...

@jafrin,

நீங்கள் NHM Writer ஐப் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யமுடியும்...

jafrin said...

naan nhm writerthan payanpaduthugiren sila eluthukkal kastama irukku EKALAPPAI easy nu solrangale rendula ethu easy vilakkam tharavum

கவி ரூபன் said...

@jafrin

என்னைக் கேட்டால் NHM Writer & E-kalapai ரெண்டும் இலகுவானது தான். எழுத்துகள் கஸ்டம் என்று நீங்கள் சொல்கிற படியால் bamini எழுத்துருவிற்குரிய Keyboard Layout ஐ பார்க்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...