நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Saturday, April 30, 2011

ஜிமெயிலில் Default Text Style ஐ மாற்றுதல்…

இந்தப் பதிவும் ஜிமெயில்(Gmail) தொடா்பானது தான்.

ஜிமெயிலில் ஒரு மின்னஞ்சலை தட்டச்சு செய்யும் போது குறிப்பிட்ட எழுத்துருவில் குறிப்பிட்ட அளவில் (Default font & font size) எழுத்துக்கள் தோன்றும். அவ்வாறில்லாமல் நீங்கள் தெரிவு செய்யும் எழுத்துரு மற்றும் அளவில் ஒவ்வொரு புது மின்னஞ்சலும் தட்டச்சு செய்யப்படவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்யலாம்? அதனை எவ்வாறு செய்வது? அதைப் பற்றித் தான் இந்தப் பதிவு கவனம் செலுத்துகின்றது.

முதலில் Mail settings –> Labs சென்று Default Text Styling என்பதை தேடிப் பிடித்து அதனைச் செயற்படுத்தி (Enable) விடுங்கள். மறக்காமல் Save Changes பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

image

பின் Mail settings –> General சென்று Default text style என்பதில் வேண்டிய மாற்றங்களை செய்யவேண்டும். மாற்றங்களை செய்யவதற்கு முன் Remove Formatting என்ற பொத்தானை அழுத்தி default text style இற்கு கொண்டு வரவேண்டும்.

image

இனிமேல் மாற்றங்களைச் செய்யத் தொடங்கலாம். உதாரணமாக எழுத்துருவை Wide என்றும் எழுத்துருவின் அளவை Large என்றும் எழுத்துக்கு வா்ணமாக நீலத்தையும் தெரிவு செய்து சேமியுங்கள். அதன்பின் Compose mail என்ற பொத்தானை அழுத்தி புது மின்னஞ்சலை எழுதத் தொடங்குங்கள். நீங்கள் செய்த மாற்றங்களுடன் எழுத்துக்கள் தட்டச்சு செய்யப்படும். (ஒவ்வொரு புது மின்னஞ்சலும் இதே மாற்றங்களுடன் தட்டச்சு செய்யப்படும்.)

image

நீங்களும் வேறு பல மாற்றங்களைச் செய்து (உ-ம் – Bold & Italic) பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம்.

Tuesday, April 26, 2011

ஜிமெயிலில் Background Send!

நீங்கள் ஜிமெயில் (Gmail) பயன்படுத்துபவா் எனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

ஜிமெயிலில் புதிதாக ஒரு மின்னஞ்சலை அனுப்ப Send பொத்தானை அழுத்திய பின் அந்த மின்னஞ்சல் அனுப்பப்படும் வரை வேறு எதுவும் செய்யாது (அதாவது ஜிமெயிலில்) காத்திருக்கவேண்டும். நீங்கள் ஒரு நாளில் பல மின்னஞ்சல்களை அனுப்பும் நபா் எனில் ஒவ்வொரு மின்னஞ்சல் அனுப்பும் போதும் எவ்வளவு நேரம் காத்திருக்கவேண்டும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். இந்த மாதிரியான காத்திருத்தல் ஒரு வகையில் நேரவிரயம் தான்!

இப்படி Send பொத்தானை அழுத்திய பின் காத்திருக்காமல் ஜிமெயிலில் வேறு வேலைகளைச் செய்ய விரும்புபவா்களுக்கு உதவும் வகையில் ஒரு சோதனைக் கூட (Labs) Feature (சரியான மொழிபெயா்ப்புத் தெரியவில்லை) ஒன்று இருக்கிறது. அது தான் “Background Send

இதனைச் செயற்படுத்தி தேவையற்ற நேரவிரயத்தை தவிர்க்க Mail Settings –> Labs சென்று Background Send என்பதை செயற்படுத்தி (Enable) விடுங்கள்.

image

இதன் பின் பின்புறத்தில் (Background) மின்னஞ்சல் அனுப்பப்படும் பொழுது நீங்கள் ஜிமெயிலில் வேறு ஏதாவது செய்து கொண்டிருக்கலாம். (உ-ம்: வந்த மின்னஞ்சல்களைப் பார்வையிடலாம்.)

image

நீங்களும் செய்து பாருங்கள்.

Monday, April 25, 2011

முக நூல் அல்பங்களை தரவிறக்குதல்…

இந்தப் பதிவும் முக நூல்(Facebook) தொடா்பான ஒன்று தான்.

முக நூலில் நீங்கள் நிறைய நண்பா்களை வைத்திருக்கிறீா்கள் என்றால் நிறைய பட அல்பங்களையும் நீங்கள் கொண்டிருக்கிறீா்கள் என்று சொல்லலாம். அது எப்படி என்றால் உங்கள் பட அல்பங்கள் உங்கள் நண்பா்களின் அல்பங்கள் என்று நூற்றுக்கணக்கான அல்பங்களை நீங்கள் பார்க்கக்கூடியதாய் இருக்கும். சில நேரங்களில் நண்பா்களின் சில படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும். ஆனால் அவற்றை நண்பா் எப்போதும் அழிக்காமலே வைத்திருப்பார் என்று சொல்ல முடியாது.

ஆக நண்பரின் முழு அல்பத்தை அல்லது சில படங்களை அல்லது உங்கள் அல்பங்களை அல்லது தெரிவு செய்த படங்கள் சிலவற்றை தரவிறக்கிக் கொள்வது எப்படி?

இதனை இலகுவாக செய்து முடிக்க இருக்கவே இருக்கிறது இணையத் தளம் ஒன்று. அது picknzip.com

image

முற்றிலும் இலவசமாக கிடைக்கும் pick&Zip ஐ பயன்படுத்தி படங்களை .zip அல்லது .pdf கோப்புகளாக தரவிறக்க முடியும்.

நீங்களும் முயன்று பாருங்கள்.

Sunday, April 17, 2011

முக நூலில் அல்பத்தின் அட்டைப் படம்…

முக நூலை(Facebook) ஐப் பயன்படுத்தி பல பட அல்பங்களை (Photo Album) உருவாக்கியுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

பொதுவாக முக நூலில் ஒரு அல்பத்தை உருவாக்கினால், அது உங்களது முதலாவது படத்தை அல்பத்தின் அட்டைப் படமாக எடுத்துக் கொள்ளும். சில நேரங்களில் அது பொருத்தமற்ற அட்டைப் படமாக அமையலாம். அந்தச் சந்தா்ப்பங்களில் எப்படி அட்டைப் படத்தை மாற்றுவது? அது தொடா்பாகத் தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

முதலில் முக நூலில் நுழைந்து கொள்ளுங்கள்.

உங்களது முக நூலின் இடது பக்கத்தில் உள்ள Photos –> My Uploads என்பதை கிளிக் செய்யுங்கள்.

image

அட்டைப் படத்தை மாற்றவேண்டிய அல்பத்தின் கீழ் உள்ள Edit Album என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

image

Edit Photos என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

image

அல்பத்தில் உள்ள படங்களில் அட்டைப் படமாக மாற்றவேண்டிய படத்தின் கீழ் உள்ள This is the album cover என்பதை தெரிவு செய்யுங்கள்.

image

இறுதியாக Save Changes என்ற பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

image

அவ்வளவு தான் உங்கள் அல்பத்தின் அட்டைப் படம் இப்போது மாறியிருக்கும்.

Thursday, April 14, 2011

IE இல் Spell Checker!

இணைய உலாவிகள் வரிசையில் பல இருந்தாலும் அவற்றின் பாவனையாளா் எண்ணிக்கை என்று வரும்போது இன்னும் Microsoft Internet Explorer முதல் இடத்தில் இருக்கிறது. (விக்கிப்பீடியா தகவலின் படி ஜனவரி 2011 இல் 43.55% போ் இன்னும் Microsoft Internet Explorer ஐ பயன்படுத்துபவராக இருக்கின்றனா்)

புள்ளிவிபரத்தைப் பற்றிக் கதைப்பது அல்ல இந்தப் பதிவின் நோக்கம். இப்படி இன்னும் நிறைய பாவனையாளா்களை கொண்டுள்ள Internet Explorer (IE), உள்ளமைந்த Spell Checker ஐ கொண்டிருக்கவில்லை என்பது தான் விசயம்.

IE இல் இயங்கக் கூடிய Spell Checker ஒன்றை add-on போன்று வழங்குகிறது http://www.speckie.com 

image 

இந்த add-on ஆனது Windows XP,Vista,7 (32 & 64 bit) போன்ற இயங்கு தளங்களில் இயங்குவதுடன் IE இன் 6,7,8, 9 ஆகியவற்றிற்கும் ஆதரவு தருகிறது.

தரவிறக்கி பயன்படுத்த விரும்புவா்கள் இங்கே அழுத்தவும்.

Wednesday, April 13, 2011

என்னைத் தொடராதே–நெருப்பு நரி 4 Tips

நீங்கள் நெருப்பு நரி (Firefox) இணைய உலாவியை பயன்படுத்துபவா் எனில், உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாய் இருக்கும்.

அநேகமான இணையத் தளங்களை நீங்கள் சென்று பார்வையிடும் போது நீங்கள் அறியாமலே உங்கள் நடத்தைகள் (Behaviour) தொடா்பான விபரங்களை அதாவது எந்த இணையப் பக்கங்களை பார்வையிடுகிறீா்கள் என்ன மாதிரியான பொருட்களை இணையத்தில் வாங்குகிறீா்கள் நீங்கள் விரும்புவது மற்றும் விரும்பாதது போன்ற விபரங்களை திரட்டி வேறு நிறுவனங்களுக்கு (உதாரணமாக விளம்பர நிறுவனங்களுக்கு) விற்றுவிடுகின்றன அல்லது தந்துவிடுகின்றன. இதன் மூலம் அந்த விளம்பர நிறுவனங்கள் உங்கள் நடத்தைக்கேற்ற விளம்பரங்களை நீங்கள் பார்க்குமாறு செய்கின்றன.

“என் நடத்தைகளை கண்காணிக்க வேண்டாம்” என்று அந்த இணையத் தளங்களுக்கு சொல்வது எப்படி? நெருப்பு நரி 4 இல் இதற்கான வசதி உண்டு.

சரி எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்.

image

மேலே படத்தில் காட்டியவாறு Firefox –> Options சென்று (Windows Xp இல் Tools –> Options)

பின் வரும் தொடா்பாடல் பெட்டியில் (Dialog Box) Advanced என்பதை தெரிவு செய்து Tell web sites I do not want to be tracked என்பதை தெரிவு செய்துவிட வேண்டும்.

image

இறுதியாக OK பொத்தானை அழுத்தி சேமியுங்கள்.

அவ்வளவு தான்.

Friday, April 8, 2011

Facebook இல் உங்கள் image எப்படி?

உலகில் ஏறத்தாள 500 மில்லியன் பாவனையாளா்களில் ஒருவராக முகநூலை(Facebook) பயன்படுத்துபவராக நீங்கள் இருக்கலாம்.

முகநூலில் பலவிதமான தகவல்களை நாளும் பகிர்ந்து கொள்கிறோம். அவற்றில் சிலவற்றை பார்க்கும் ஒருவருக்கு பலவித எண்ணங்கள் தோன்றலாம். ஏன் இவ்வளவு மோசமா எழுதுறார் இந்த ஆள்? இந்த வார்த்தைப் பிரயோகம் தப்பாச்சே… என்று பலவாறு சிந்திக்கலாம். இதனால் என்ன நடக்குது என்றால் உங்களைப் பற்றி மற்றவா்களிடம் ஒரு வித மோசமான தோற்றம்(Image) உருவாகிறது. அது மாத்திரமில்லாமல் நீங்கள் முகநூலில் பாதுகாப்பாக வலம் வருகிறீா்களா என்று அறிவதும் முக்கியம்(Privacy & Security).

ஆக நீங்கள் மற்றவா்களுடன் பகிர்ந்து கொள்பவற்றில் ஏதாவது ஏடாகூடமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறீா்களா? அந்தரங்க தகவல்களை சிறப்பாக கையாளுகிறீா்களா? (Privacy) மற்றும் பாதுகாப்பாக முகநூலை பயன்படுத்துகிறீா்களா?(Security) இது போன்ற வினாக்களுக்கு விடை தரும் வகையில் ஒரு இணையத்தளம் இருக்கிறது.

reppler என்று அறியப்படும் இந்த இணையத்திற்கு சென்று உங்கள் முகநூல் கணக்கில் நுழைந்து பாருங்கள். இதன் ஆரம்பப் பதிப்பு இலவசமாக இயங்குகிறது.

image

உங்கள் முகநூல் Image எப்படி?

Tuesday, April 5, 2011

யு டியூப் காணொளியை வேகமாக பார்வையிட…

யு டியூப் (You Tube) இல் காணொளி கண்டுகளிக்காதவா் யார் தான் உண்டு? அப்படி காணொளி ஒன்றை பார்வையிடும் போது பல நேரங்களில் அதனைத் திறந்து முற்றாக பார்வையிடுவதற்குள் போதுமென்றாகிவிடும். Buffering செய்து காணொளியை பார்வையிடுவதில் உங்கள் இணைய வேகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இணைய வேகம் குறைவெனில் Buffering செய்வதற்குள் விடிந்தே விடும்.

வேகமாக பார்வையிட வழி என்ன? (அதாவது இணைய வேகம் குறைந்த கணினிகளில்.)

இதற்கு நீங்கள் கைத் தொலைபேசிகளுக்குரிய யு டியூப் பதிப்பை திறந்து காட்சித் தெளிவு குறைந்த காணொளிகளை பார்வையிடலாம். இந்தக் காணொளிகள் தெளிவு குறைவு என்பதுடன் தரம் குறைவானதுமாகும். மற்றும் படி காணொளிகளில் வித்தியாசம் எதுவுமில்லை.

சரி இதற்கு என்ன செய்யலாம்?

  • உங்கள் இணைய உலாவியில் m.youtube.com  என்பதை திறந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் காணவிரும்பும் காணொளியைத் தேடுங்கள்.
  • பார்க்க விரும்பும் காணொளியை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் Watch Video என்ற இணைப்பு தோன்றும். அதனை வலது கிளிக் செய்து இணைப்பு முகவரியை பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்.

image

  • பின் VLC Player ஐ திறந்து கொள்ளுங்கள். (VLC Player நிறுவியிருத்தல் வேண்டும்.) அதில் Media—> Open Network Stream… என்ற கட்டளையை செயற்படுத்தி Please enter a network URL: என்பதில் நீங்கள் ஏற்கனவே பிரதி எடுத்த முகவரியை ஒட்டி விடுங்கள்.

image

  • இறுதியாக Play என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் எந்த வித காத்திருத்தலும் இன்றி காணொளியை கண்டு களிக்கலாம்.

மேலே சொன்னது போல VLC Player இல்லாவிடின் Real Player அல்லது Quick Time Player இருந்தால் அதில் காணொளியை கண்டு களிக்கலாம்.

Friday, April 1, 2011

Chrome PDF Viewer ஐ முடக்குதல்…

நீங்கள் கூகிள் குரோம் (Google Chrome) இணைய உலாவியை பயன்படுத்துபவா் எனில், இந்தப் பதிவு உங்களுக்காக.

கூகிள் குரோமில் உள்ளமைந்த வசதியாக  PDF கோப்புகளை பார்வையிடுவதற்கான மென்பொருள் அமைந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி நீங்கள் PDF கோப்புகளை தரவிறக்காமலே கூகிள் குரோமில் இருந்து கொண்டே பார்வையிட முடியும். சிலருக்கு இந்த உள்ளமைந்த வசதியை பயன்படுத்த விருப்பமில்லையெனில் அந்த வசதியை முடக்கிவிடலாம்(Disable). இந்தப் பதிவில் அந்த வசதியை எப்படி முடக்கலாம் என்று பார்க்கலாம்.

முதலில் about:plugins என்று உங்கள் கூகிள் குரோம் உலாவியின் முகவரி தட்டச்சு செய்யும் பகுதியில் தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்துங்கள்.

image

பின் Chrome PDF Viewer என்பதை கண்டுபிடித்து அதன் கீழ் உள்ள Disable என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

image

அவ்வளவு தான். இனிமேல் நீங்கள் PDF கோப்பை கூகிள் குரோமில் திறக்கும் போது உங்கள் கணினியில் நிறுவிய PDF கோப்பை பார்வையிடும் மென்பொருளில் திறக்கும். (உதாரணமாக Adobe reader ஐ நிறுவியிருந்தால் அதில் திறக்கும்.)

சரி மீண்டும் இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...