நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Wednesday, March 2, 2011

இணைய வேகத்தை அதிகரிக்க…

உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா? அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும்.

உங்கள் இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட கணினிகள் பயன்படுத்துவதில்லை.

விண்டோஸ் தனது தேவைக்காக (உ+ம்- விண்டோசை புதுப்பித்தல்) 20% பட்டை அகலத்தை தானாகவே ஒதுக்கிக் கொள்கிறது.

இதனை மாற்றுவதன் மூலம் உங்கள் இணையத்தின் பட்டை அகலத்தை முழுமையாக நீங்கள் பயன்படுத்தமுடியும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது…

Start –> Run சென்று gpedit.msc என்பதை தட்டச்சு செய்து Local Group Policy Editor என்ற சாளரத்தை திறந்துகொள்ளுங்கள்.

பின்,  நீங்கள் செல்லவேண்டியது Local Computer Policy –>Computer Configuration –> Administrative Templates –> Network –> QoS Packet Scheduler –> Limit reservable bandwidth என்பதை இரட்டைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.

image

அதனைத் தொடா்ந்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) இல் Enabled என்பதை தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் விரும்பிய பட்டை அகலத்தை(Bandwidth) கொண்டுவரலாம்.

image

மாற்றங்களை செய்த பின் OK பொத்தானை அழுத்தி மாற்றங்களைச் சேமியுங்கள். இனி உங்கள் இணைய பட்டை அகலத்தை 100% முழுமையாக நீங்கள் பயன்படுத்தலாம்.

6 comments:

Abdul said...

How to do this on windows Vista. GPEDIT.MSC isnt open any window. Please explain me

கவி ரூபன் said...

அப்துல்,

நீங்கள் கீழ்காணும் இணைப்பிற்கு சென்று Method One or Method three ஐ முயற்சித்துப் பார்க்கவும்.

இங்கே அழுத்துங்கள்

என்னிடம் Vista இல்லாத படியால் சோதித்துப் பார்க்க முடியவில்லை. நீங்கள் முயன்று பார்த்துச் சொல்லுங்கள்.

ந.ர.செ. ராஜ்குமார் said...

இது எனக்கு மிகவும் பயன்படும். நன்றி.

thariq ahamed said...

உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_15.html

தாரிக்

abu muzain said...

மிகவும் பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி

Anonymous said...

Thanks

Related Posts Plugin for WordPress, Blogger...