நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Saturday, February 26, 2011

ஒரு கிளிக்–ஒரு ரூபா!

உங்கள் வ.பூ அல்லது இணையப் பக்கத்திற்கு குறிப்பிடத்தக்க வாசகர் வரவு இருப்பின் அதனை பயனுள்ள வகையில் ஆக்குவது எமது கையில் உள்ளது.

அதாவது உங்கள் வ.பூவை பணம் காய்க்கும் மரமாக மாற்றுவது.

அநேகமானவா்கள் Google Adsense மற்றும் இதர விளம்பரதாரா்களின் விளம்பரங்களை தங்கள் இணையப் பக்கத்தில் இணைத்திருப்பதை காணலாம்.

பெரிதாக இல்லாவிட்டாலும் சிறிய அளவில் பணம் சம்பாதிக்கலாம்.

இதனை பல காரணிகள் தீா்மானிக்கின்றன. நல்ல சரக்கு இருந்தால் வாடிக்கையாளா் கடை எங்கிருந்தாலும் தேடி வருவது போல தான் இணையப் பக்கங்களும். நீங்கள் பயனுள்ள வகையில் சுவாரிசியமாக எழுதுபவா் எனில் கூடிய வாசகா்கள் உங்கள் தளத்திற்கு வருவது நிச்சயம்.

வாசகா்களின் எண்ணிக்கை கூடும் போது உங்கள் தளத்தில் நீங்கள் இணைக்கின்ற விளம்பரங்களை பார்வையிடுபவா்களின் எண்ணிக்கை கூடுவதுடன் அவற்றை கிளிக் செய்வதற்குமான வாய்ப்பும் அதிகம். ஒவ்வொரு கிளிக்கும் ரூபா தான்!

என் நோக்கம் இலங்கையில் இருந்து விளம்பரங்களை வழங்கும்  ஒரு இணையத்தளத்தைப் பற்றி உங்களுக்கு அறியத்தருவது தான்.

அது NetAdlk என்ற இணையத் தளம் ஆகும்.

image

புதிதாக இணைகின்ற இணையத்தள உரிமையாளா்களுக்கு உடனடியாக ரூ.150 கிடைக்கின்றது. அதைத் தவிர,

  • ஒவ்வொரு கிளிக்குக்கும் ரூ.1.00
  • உங்கள் சம்பாத்தியத்தை கண்காணிக்கும் வசதி
  • ரூ.1000 சோ்ந்தவுடன் உங்கள் பணத்தை மீளப்பெறும் வசதி. (இதனை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம் அல்லது உங்கள் செல்லிடபேசிக்கான Reload ஆகப் பெற்றுக் கொள்ளலாம்.)
  • மற்றும் சில…

சும்மா ஒரு எட்டு போய்ப் பாருங்கள். பிடித்திருந்தால் இணையுங்கள். இதனால் இழக்கப்போவது எதுவுமில்லை!

ஏதேனும் விதத்தில் பயனுள்ளதாக இருந்தால் வாக்குப் போடுவதோடு கருத்தும் இடுங்கள்.

Tuesday, February 22, 2011

“Use Facebook as Page”–என்பதை பயன்படுத்தல்

இந்தப் பதிவும் முக நூல்(Facebook) தொடா்பானது தான்.

முக நூலின்(Facebook) பக்கங்கள் (Page) தரம் உயா்த்தப்பட்டதன் விளைவாக கிடைத்திருக்கும் புதிய வசதி “Use Facebook as Page” என்பதாகும்.

பொதுவாக நீங்கள் முக நூலில் நுழைந்தவுடன் வருவது உங்களின் “Profile Page”. புதிதாக இணைந்த நண்பா்களின் விபரம்,அனுப்பப்பட்ட பின்னூட்டல்களின் (Comment) விபரம், உங்கள் செய்திகளை விரும்பியவா்கள் (like) பற்றிய விபரம் மற்றும் நண்பா்களால் பகிரப்பட்ட அல்லது எழுதப்பட்ட செய்திகளின் விபரம் ஆகியன இந்த Profile Page இல் காணப்படும்.

இந்த Use Facebook as Page என்ற வசதியைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிய பக்கத்தை முக நூலில் நுழைந்தவுடன் வருகின்ற பக்கமாக மாற்றமுடியும்.

உதாரணம் ஒன்றின் மூலம் இதனை விளக்குகின்றேன். நான் எனது வ.பூவான பஞ்சாமிர்தத்திற்கு ஒரு பக்கத்தை முக நூலில் உருவாக்கி உள்ளேன். இதன் மூலம் எனது வ.பூவின் புதிய பதிவுகளை பகிர்ந்து கொள்ளமுடியும்.

image

இப்போது உங்கள் பக்கத்தை முக நூலின் நுழைவுப் பக்கமாக மாற்ற  Account –> Use Facebook as Page என்பதை கிளிக் செய்யுங்கள்.

image

நீங்கள் வைத்திருக்கும் பக்கங்களோடு Switch என்ற கட்டளையும் சோ்ந்து ஒரு பெட்டி தோன்றும். அதில் நீங்கள் மாற்றவிரும்புகிற பக்கத்திற்கு எதிரில் இருக்கும் Switch என்ற கட்டளையை அழுத்துவதன் மூலம் அந்தப் பக்கத்தை நுழைவுப் பக்கமாக மாற்றமுடியும்.

image

இப்படி மாற்றுவதன் மூலம் என்ன நன்மை வரப்போகிறது?

இவ்வளவு நாளும் நீங்கள் ஒரு முக நூலின் பக்கத்தை(Page) விரும்புகிறீா்கள்(like) என்று சொன்னால் அது நீங்கள் விரும்பியதாக குறித்துக் கொள்ளும். ஒரு பக்கத்தின் சுவரில் (Wall) இல் ஏதேனும் செய்தி வெளியிட்டால் அந்தச் செய்தி உங்கள் பெயருடன் தோன்றும்.

ஆனால் Use Facebook as Page என்பதை செயற்படுத்தி விரும்பிய பக்கதிற்கு மாறிய பின்னா் நீங்கள் ஒரு பக்கத்தை விரும்பினாலோ செய்தி ஒன்றை அந்தப் பக்கத்தில் இணைத்தாலோ உங்கள் பெயருக்குப் பதில் நீங்கள் தெரிவுசெய்த பக்கம் அந்த செய்தியுடன் தோன்றும்.

image

(பஞ்சாமிர்தம் என்ற பக்கத்திற்கு மாறிய பின்னா் வேறு ஒரு பக்கத்தில் நான் இட்ட செய்தியானது எனது பஞ்சாமிர்தம் என்ற பக்கத்தின் பெயரோடு சோ்ந்து வந்துள்ளதை மேலே உள்ள படத்தில் காணலாம்)

மீண்டும் உங்கள் Profile Page இற்கு மாற விரும்பினால் Account –> Switch back to XXXX என்ற கட்டளையை செயற்படுத்துங்கள். அவ்வளவு தான்.

image

ஏதேனும் விதத்தில் உங்களுக்கு உதவியாக இந்தப் பதிவு இருப்பின் வாக்குப் போடுவதோடு கருத்தும் இடுங்கள்.

Saturday, February 19, 2011

Facebook தொடங்கும் மின்னஞ்சல் சேவை!

இன்று காலை முக நூலை (Facebook)  திறந்தபோது எனக்கு ஒரு மின்னஞ்சல் கணக்கை தந்து முக நூல் வரவேற்றது.

முக நூலில் நீங்கள் உறுப்பினா் எனில், உங்களுக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரியை தருகிறது. உங்கள் பயனா் பெயரைக் (User name) கொண்டதாக அந்த மின்னஞ்சல் முகவரி அமைகிறது.

அதாவது உங்கள் மின்னஞ்சல் முகவரியின் பொது வடிவம் – username@facebook.com

image

இந்த வசதியை ஏற்படுத்தி தருவதன் மூலம் நீங்கள் உங்கள் முக நூலில் இருந்தவாறே மின்னஞ்சல் அனுப்ப முடியும். அத்தோடு நின்றுவிடாது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது கையடக்கத் தொலைபேசிக்கு (Mobile) குறுந்தகவல் அனுப்பமுடியும்.

மின்னஞ்சல் சேவையில் நிலவும் போட்டித் தன்மையைக் கருத்தில் கொண்டால் இந்த முக நூலின் மின்னஞ்சல் அறிமுகமானது கூகிள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு(Gmail) நேரடிப் போட்டியாக மாறும் என்பது என் எண்ணம்.

பாவனையாளா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் ஜிமெயிலின் பயனா் எண்ணிக்ககை 170 மில்லியன். (BBC செய்தியின் படி)  ஆனால் முக நூலின் பயனா் எண்ணிக்கை 500 மில்லியன். முக நூல் தனது அத்தனை பாவனையாளருக்கும் மின்னஞ்சல் முகவரியை வழங்குவதன் மூலம் ஜிமெயிலுக்கு அச்சுறுத்தலாக அமைவதை மறுக்க முடியாது.

உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை எனில் அவா்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கலாம். இதனை நீங்கள் செய்வதற்கு இந்த இணைப்பிற்குச் சென்று “Request an Invitation” என்பதை கிளிக் செய்யுங்கள். (பார்க்க படம்)

http://www.facebook.com/about/messages/

Related Posts Plugin for WordPress, Blogger...