நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Wednesday, December 28, 2011

முகப் புத்தக அரட்டையில் படங்கள்!

முகப் புத்தகத்தில் (Facebook) அரட்டை அடிக்கும் நபரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

முகப் புத்தகத்தில் அரட்டை அடிக்கும்போது குறித்த ஒரு நபரின் பெயரை தட்டச்சு செய்யாமல் அவரின் சுயவிபரத்தில் (Profile) இல் இருக்கும் படத்தை (Profile Picture) அரட்டைக்குள் கொண்டுவருவது எவ்வாறு என்று முதலில் காண்போம்.

இதனைச் செய்வதற்கு நீங்கள் குறித்த நபரின் அல்லது பக்கத்தின் சுயவிபர எண்(Profile ID) அல்லது பெயரைத் (Profile Name) தெரிந்து கொள்ள வேண்டும். குறித்த நபரின் அல்லது பக்கத்தின் சுயவிபரத்தை திறந்து கொள்ளுங்கள். மேலே முகவரிப் பெட்டியில் (Address Bar) சுயவிபர எண் அல்லது பெயர் காணப்படும். (பார்க்க படம்)

சுயவிபர பெயா் [Profile Name]

image

சுயவிபர எண் [Profile ID]

image

மேலே படத்தில் காட்டியவாறு சுயவிபர எண் அல்லது பெயரைப் பிரதி செய்து கொள்ளுங்கள். (Ctrl+C)

பின் நீங்கள் அரட்டை அடிக்கும் நபருக்கு [[சுயவிபர எண் அல்லது சுயவிபர பெயா்]] என வருமாறு அனுப்புங்கள்.

உதாரணமாக “உங்களுக்கு [[161910833903661]] ஐ தெரியுமா?” என்ற செய்தியை அனுப்புகிறீா்கள்.

image

அது அவா்களுக்கு கீழ் உள்ளது போல் போய்ச் சேரும்.

image

மேற்கண்டவாறு ஒரு நபரின் சுயவிபரப் படத்தை அரட்டையோடு பகிர்ந்து கொள்ளமுடியும்.

கடைசியாக ஒன்று, நீங்கள் தட்டச்சு செய்யும் எழுத்துக்களை பல வண்ணங்களில் முகப் புத்தக அரட்டையில் பகிர்ந்து கொள்ள கீழ்க் காணும் தளத்திற்குச் செல்லுங்கள். (படத்தின் மேல் கிளிக் செய்யவும்.)

image

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

Thursday, December 22, 2011

பல தத்தல்களை புத்தகக்குறி செய்தல்…!

நீங்கள் பல தத்தல்களை (Tab) ஒரே நேரத்தில் திறந்து வைத்துள்ளீா்கள் என்று வைத்துக் கொள்வோம்.எல்லாத் தத்தல்களையும் ஒரே நேரத்தில் புத்தகக்குறி (Bookmark) செய்வது எவ்வாறு என்று காண்போம்.

நீங்கள் கூகிள் குரோம் இணைய உலாவியைப் பயன்படுத்துபவா் எனில்,

ஏதாவது ஒரு தத்தல் மேல் வலது கிளிக் செய்து Bookmark all tabs… என்பதை தெரிவு செய்யுங்கள். அல்லது Ctrl + Shift + D என்ற குறுக்கு வழியைப் பயன்படுத்துங்கள். (வாழ்க்கையில தானுங்க குறுக்கு வழி கூடாது!)

image

அடுத்து நீங்கள் நெருப்பு நரி இணைய உலாவியைப் பயன்படுத்துபவா் எனில்,

ஏதாவது ஒரு தத்தல் மேல் வலது கிளிக் செய்து Bookmark All Tabs… என்பதை தெரிவு செய்யுங்கள் அல்லது Ctrl + Shift + D.

image 

இறுதியாக நீங்கள் Internet Explorer ஐ பயன்படுத்துபவா் எனில்,

கீழே படத்தில் காட்டியவாறு செய்யவும்.

image

ஆக இனிமேல் ஒவ்வொரு தத்தலாக புத்தகக்குறி செய்வதை விடுத்து மேலே காட்டியவாறு இலகுவாக செயற்படலாம்.

------------------------------------------------------------------------------

தத்தல் – Tab

புத்தகக்குறி – Bookmark

(மேலே உள்ள சொற் பிரயோகங்கள் தவறெனில் சுட்டிக் காட்டுங்கள். )

Friday, December 16, 2011

முகப் புத்தகத்தில் ஒரு துணைக் கோப்புறை(Sub Folder)

முகப் புத்தகத்தில் (Facebook) உங்களுக்கு அனுப்பப்படும் தனி மடல்கள் Messages என்ற கோப்புறையினுள் (Folder) தொகுக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் Messages என்ற கோப்புறையைத் தவிர துணைக் கோப்புறை (Sub folder) ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். (எங்களுக்கு எல்லாம் தெரியும்… நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்!) Other என்ற பெயரில் அமைந்த அந்த துணைக் கோப்புறை பற்றி சொல்லத் தான் இந்தப் பதிவு…

பொதுவாக உங்கள் நண்பா்களிடம் இருந்து வரும் தனி மடல்கள் Messages என்ற கோப்புறையினுள் சேமிக்கப்படும். உங்கள் நண்பா்கள் அல்லாதவா்களிடம் இருந்தோ உங்கள் நண்பா்களின் நண்பா்களிடம் இருந்தோ வரும் தனி மடல்கள் இந்த Other என்ற துணை கோப்புறையினுள் சேமிக்கப்படும். அது மட்டுமல்லாமல் நீங்கள் இணைந்த குழுக்களிடம் இருந்து அனுப்பப்படும் மடல்களும் Other என்ற துணைக் கோப்புறையினுள் சேமிக்கப்படும். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த துணைக் கோப்புறையினுள் சேமிக்கப்படும் மடல்களைப் பற்றி முகப் புத்தகம் உங்களுக்கு அறிவிக்காது. ஆக நீங்களாப் பார்த்தா தான் உண்டு.

எனக்கு தெரிந்த நண்பா் ஒருவா் கடந்த சித்திரையில் அனுப்பிய தனி மடல் ஒன்றை அண்மையில் தான் பார்க்க நேரிட்டது. காரணம் அவா் என் நண்பா் பட்டியலில் இல்லை. ஆக Other என்ற துணைக் கோப்புறையினுள் அவா் அனுப்பிய மடல் சேமிக்கப்பட்டு விட்டது. உங்களுக்கும் இதே மாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

அந்த துணை கோப்புறையை பார்வையிட Messages ஐ கிளிக் செய்யுங்கள். நீங்கள் கிளிக் செய்தவுடன் Other என்ற துணைக் கோப்புறை தோன்றும். அதற்குள் சேமிக்கப்பட்டுள்ள மடல்களைப் பார்வையிட அதனைக் கிளிக் செய்ய வேண்டும்.

image

இப்ப அடுத்த கேள்வி எவ்வாறு Other துணை கோப்புறையினுள் உள்ள மடலை Messages இற்கு மாற்றுவது? இது மிக எளிது.

மாற்ற வேண்டிய மடலை திறந்து கொள்ளுங்கள். பின் Actions –> Move to Messages என்பதை தெரிவு செய்யுங்கள். அவ்வளவு தான்.

image

உங்களுக்கு இந்தப் பதிவு பயன்பட்டதா? எழுதுங்கள் ஒரு வார்த்தை…

Saturday, December 3, 2011

VLC மூலம் காணொளி ஒன்றை வெட்டுதல்…

VLC Player ஐ நீங்கள் அறிந்திருக்கலாம் அத்தோடு பயன்படுத்தவும் செய்யலாம். VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின் (Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.

VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.

image

நீங்கள் தெரிவு செய்தவுடன் கீழே மேலதிக பொத்தான்கள் தோன்றும்.

image

இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள். பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள். இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுவிடும். (இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் சேமிக்கப்படும்.)

image

இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக் கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.

முயன்று பாருங்கள்.

Tuesday, November 22, 2011

கூகிள்+ இல் பக்கம் ஒன்றை உருவாக்கல்…

முகப் புத்தகத்திற்குப் போட்டியாக கூகிள் என்ற விருட்சத்தில் இருந்து முளைத்த கிளை தான் கூகிள்+ (Google Plus). ஆனால் கூகிள்+ எவ்வளவு தூரத்திற்கு வெல்ல முடியும் என்று தெரியவில்லை. கடைசியில் “போயிட்டு வாறன்…” என்று சொல்லி விட்டுப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆருடம் எதுவும் சொல்ல நான் வரவில்லை.

முகப் புத்தகத்தை பயன்படுத்துபவா்கள் அதில் இருக்கக்கூடிய Page என்ற வசதியைப் பற்றி அறிந்திருக்கலாம். இந்த Page மூலம் வியாபார நிறுவனங்கள் அல்லது தனி நபா் விரும்பிய ஒன்றிற்காக ஒரு பக்கத்தை உருவாக்க முடியும். ஊதாரணமாக ஒரு நடிகா் தன் பெயரில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் தன் விசிறிகளை இணைத்து தன் சம்பந்தப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். மிகுந்த பயன் உடைய இந்தப் பக்கம் என்ற வசதியை கூகிள்+ உம் தனக்குள் கொண்டு வந்துள்ளது. இந்தப் பதிவில் எவ்வாறு கூகிள்+ இல் பக்கம் ஒன்றை உருவாக்குவது என்று பார்ப்போம்.

எனது இந்த வலைப் பூவிற்கு ஒரு பக்கத்தை உருவாக்கப் போகிறேன். பக்கம் ஒன்றை உருவாக்குவதற்கு நீங்கள் கூகிள்+ இல் இணைத்திருக்கவேண்டும். (இல்லாவிட்டால் இணையுங்கள்… சும்மா ஒரு வேடிக்கைக்காக இணைந்து பாருங்களேன்.) இந்த இணைப்பை அழுத்துவதன் மூலம் கூகிள்+ இல் பக்கத்தை உருவாக்கும் பகுதிக்குச் செல்லுங்கள்.

image

பின் உங்கள் பக்கம் எது தொடா்பானதோ அதற்கேற்ப ஒரு பிரிவை(Category) தேர்ந்தெடுங்கள். Other என்பதை எனது வ.பூவிற்கு தெரிவு செய்கிறேன்.

image

மேலே காட்டிய விபரங்களை கொடுத்த பின் Pages Terms என்பதை ஒத்துக்கொண்டு (வேற வழி?) அதையும் தெரிவு செய்து CREATE பொத்தானை அழுத்துங்கள். பின் வரும் பகுதியில் Tagline மற்றும் Profile photo போன்றவற்றைக் கொடுத்து Continue பொத்தானை அழுத்துங்கள்.

image

அடுத்து நான் ஒரு பக்கம் உருவாக்கி விட்டேன் என்று உங்கள் நண்பா்களுக்கு அல்லது மற்றவா்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

image

இறுதியாக Finish பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் உருவாக்கிய பக்கத்திற்கு செல்லலாம்.

இன்னுமொரு விசயம்… Get the badge என்ற இணைப்பிற்கு சென்று விரும்பிய badge ஒன்றை உருவாக்கி அதனை உங்கள் இணையப் பக்கத்தில் இணைக்க முடியும்.

பிறகென்ன புகுந்து விளையாட வேண்டியது தானே!

Sunday, November 6, 2011

இணைப்பு டுவீட்டரில் ஏற்கனவே பகிரப்பட்டதா?–IsItOld?

நீங்கள் ஒரு இணைப்பை உதாரணமாக ஒரு Youtube வீடியோ இணைப்பை உங்கள் நண்பருடனோ அல்லது மற்றவா்களுடனோ பகிர்ந்து கொள்ள நினைக்கிறீா்கள். அவ்வாறு நீங்கள் பகிர்ந்த இணைப்பைப் பார்த்த நண்பா் “மச்சான் நான் எப்பவோ இதை வேற ஒரு இணையப் பக்கத்தில பார்த்திட்டன்…” என்று சொல்லும் போது நீங்கள் அசடுவழியலாம்!

ஆக ஒரு இணைப்பை பகிர்ந்து கொள்ள முதல் அந்த இணைப்பு ஏற்கனவே பகிரப்பட்டதா இல்லையா என்று யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் எப்படி இருக்கும்? இதனைச் செய்ய ஒரு இணையப் பக்கம் (isitold) உதவுகிறது. அந்த இணையப் பக்கத்தில் நீங்கள் பகிர நினைக்கும் இணைப்பை கொடுத்தால் அது, அந்த இணைப்பு எத்தனை தடவை டுவீட்(Tweet) செய்யப்பட்டது… முதலில் எப்போது டுவீட் செய்யப்பட்டது போன்ற தகவல்களைத் தருகின்றது. அத்தோடு அந்த இணைப்பை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்ற தகவலையும் தருகின்றது.

சும்மா ஒருக்கா நீங்களே முயற்சித்துப் பாருங்கள். இங்கே அழுத்துங்கள்

image

குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் இதனைப் பயன்படுத்த நீங்கள் உங்களை இந்த இணையப் பக்கத்தில் பதியத் தேவையில்லை. 

Sunday, October 16, 2011

ஒரே உலாவியில் பல ஜிமெயில் கணக்குகள்!

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்கு உதவும்.

உங்களிடம் இரண்டு ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் உண்டு என்று வைத்துக் கொள்வோம். இரண்டு மின்னஞ்சல் கணக்குகளையும் ஒரே நேரத்தில் ஒரே இணைய உலாவியில் திறந்து பயன்படுத்த முடியுமா? அண்மைக் காலம் வரை இது சாத்தியம் இல்லாமல் இருந்தது. இரண்டு இணைய உலாவிகளில் இரண்டு மின்னஞ்சல் கணக்குகளை திறந்து பயன்படுத்தவேண்டி இருந்தது.

ஆனால் கூகிள் வழங்கும் Multiple Sessions வசதியைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 10 மின்னஞ்சல் கணக்குகளை ஒரே இணைய உலாவியில் திறந்து பயன்படுத்த முடியும். எப்படி என்று பார்ப்போமா?

முதலில் ஏதாவது ஒரு மின்னஞ்சல் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள். பின் Sign in to multiple Google Accounts என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள். வருகின்ற பக்கத்தில் On – Use multiple Google Accounts in the same web browser. என்பதை தெரிவு செய்து எல்லாத் தெரிவுகளையும் தெரிவு செய்யுங்கள்.

image

மறக்காமல் Save பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

பின் உங்கள் தற்போதைய மின்னஞ்சல் கணக்கில் இருந்து வெளியேறுங்கள். (Sign out)

வெளியேறிய பின் ஏதாவது ஒரு கணக்கினுள் நுழையுங்கள். இப்போது வலது மேல் மூலையில் உங்கள் கணக்கின் பெயரைக் கிளிக் செய்யுங்கள். Switch account என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

image

பின் Sign in to another account… என்பதை கிளிக் செய்யுங்கள்.

image

இப்போது நீங்கள் உங்கள் மற்றைய மின்னஞ்சல் கணக்கினுள் நுழையுங்கள்.

முதலில் உட்ச் சென்ற மின்னஞ்சல் கணக்கிற்கு மாற விரும்பினால் மீண்டும் Switch account என்ற இணைப்பை அழுத்துங்கள். இந்த முறை நீங்கள் முதலில் சென்ற மின்னஞ்சல் முகவரியை தெரிவு செய்து அந்தக் கணக்கினுள் செல்லலாம்.

image

ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு ஒரே நேரத்தில் 10 கணக்குகளில் ஒரே இணைய உலாவியில் நுழைய முடியும்.

இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் ஒரு வார்த்தை எழுதுங்கள்.

Saturday, October 15, 2011

Landing Page உம் முகப் புத்தக பக்கமும்!

இந்தப் பதிவில் நாம், முகப் புத்தகத்தில்(Facebook) உள்ள பக்கம் (Page) ஒன்றின் வந்திறங்கு பக்கத்தை (Landing Page) எவ்வாறு மாற்றலாம் என்று பார்ப்போம்.

முதலில் Landing Page என்றால் என்ன என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு இணையத் தளத்தை விளம்பரப்படுத்தும் போது பயனர் இணையத்தளத்தின் எந்தப் பக்கதிற்கு முதலில் வருகிறாரோ அந்தப் பக்கத்தை Landing Page என்று சொல்லலாம். ஒரு இணையத் தளத்திற்கு சில நேரங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட Landing Page இருக்கலாம்.

உதாரணமாக எனது இந்த வ.பூவை விளம்பரப்படுத்தும் போது http://computerulakam.blogspot.com/ என்பது Landing Page ஆக இருக்குமாறு வைத்துக் கொள்வேன்.

வந்திறங்கு பக்கம் என்று இதனை தமிழில் நான் அழைத்தாலும் இது சரியா என்று தெரியவில்லை. அறிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

சரி இப்போது முகப் புத்தகப் பக்கம் (Facebook Page) ஒன்றின் வந்திறங்கு பக்கத்தை எவ்வாறு மாற்றலாம் என்று காண்போம்.

முதலில் உங்கள் முகப் புத்தகத்திற்குச் சென்று நீங்கள் மாற்றவேண்டிய பக்கத்திற்குச் செல்லுங்கள். (நீங்கள் Page வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்!)

image

பின் Edit page என்பதை கிளிக் செய்யுங்கள்.

image

அதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் Default Landing Tab என்பதில் எது வேண்டுமோ அதனை தெரிவு செய்யுங்கள்.

image

இறுதியாக Save Changes என்ற பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் இப்போது உங்கள் பக்கத்தின் Landing Page ஐ மாற்றிவிட்டீா்கள்.

Saturday, August 27, 2011

முக நூலில் பெரிய,வேகமாக இயங்கும் படங்கள்!

முக நூலில் நாளொன்றில் 250 மில்லியன் படங்கள் (Photos) தரவேற்றப்படுகின்றன. இவ்வாறு மிகப் பெரிய  எண்ணிக்கையில் படங்கள் தரவேற்றப்படுவதோடு மற்றவா்களுடன் பகிரவும் படுகின்றன.

இவ்வாறு தரவேற்றப்படும் படங்களைப் பார்வையிடும்போது அதன் அளவானது இதுவரை 720 Px (Pixels) என்ற காட்சித் தெளிவில் (சிறிதாக) காட்டப்பட்டன. இனி இந்த அளவானது 960 Px என்ற அளவுக்கு (சற்றுப் பெரிதாக) மாற்றப்படுகின்றது. இதன் மூலம் படமானது கூடிய தெளிவில் தெரிவதுடன் சற்றுப் பெரிதாகவும் தெரியும். ஏற்கனவே தரவேற்றப்பட்ட படங்களும் இந்த அளவில் காட்டப்படும்.

அத்தோடு படங்களை பார்வையிடும் போது பின்னணியில் கறுப்பு நிறத்திற்குப் பதில் வெள்ளை நிறத்தில் படம் தோன்றும்.

அது மாத்திரமில்லாமல் படங்கள் தோன்றும் நேரம் (Loading Time) குறைக்கப்பட்டு வேகமாக தோன்றும் (Faster Loading) விதமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அடுத்து வரும் நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்று முக நூல் அறிவித்துள்ளது.

Monday, August 22, 2011

FB Refresh - குரோம் நீட்சி!

image

நீங்கள் மேலே பார்ப்பது முக நூலின் வழமையான தொடக்கப் பக்கம் (Home Page).  முக நூலே தவம் என்று கிடப்பவா்களுக்கு இந்தப் பக்கத்தைப் பார்த்து அலுத்துக் கூடப் போகலாம்.

பின்புலத்தில் வேறு படங்கள் தோன்றுமாறு மாற்றி அமைத்தால் என்ன?

யாரோ ஒரு புண்ணியவானுக்கு (?) இந்த எண்ணம் தோன்றியிருக்கவேண்டும். FB Refresh என்ற பெயரில் கூகிள் குரோமில் இயங்கக் கூடிய நீட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த நீட்சியை நிறுவியவுடன் முகநூலின் வழமையான தொடக்கப் பக்கம் மறைந்து புதுத் தொடக்கப் பக்கம் தோன்றும்.  கீழே உள்ள படம் பார்க்க.

image

நீங்களும் தரவிறக்கி நிறுவ விரும்பினால் இங்கே அழுத்தவும்.

பின் புலத்தில் தோன்றக்கூடிய படத்தை மாற்ற விரும்பினால் Tools –> Extensions சென்று FB Refresh இற்குரிய Options ஐ செயற்படுத்தி படத்திற்கான இணைய முகவரியை கொடுத்துச் சேமித்தால் சரி.(கணினியில் உள்ள படங்களைப் பயன்படுத்த முடியாது.)

image

சரி வேறு ஒரு பதிவில் சந்திப்போம். Winking smile

Friday, August 19, 2011

Blogger இல் +1 பொத்தான் தோன்றவில்லையா?

நீங்கள் Blogger பயன்படுத்தும் நபா் எனில் உங்களுக்கு இந்தப் பதிவு சில வேளைகளில் பயனுள்ளதாக அமையும்.

நீங்கள் எழுதும் பதிவுகளை மற்றவா்களோடு பகிர்ந்து கொள்வதற்கென ஒரு பகிரல் பட்டை ஒன்றை (Share Buttons) நீங்கள் எழுதும் பதிவுகளின் கீழ் இணைப்பதன் மூலம் வாசிக்கும் நபா் உங்கள் பதிவை பல தளங்களில் பகிரமுடியும்.

இதனை Blogger இல் இலகுவாக செய்ய முடியும்.

image

மேலே படத்தில் காட்டியவாறு Blog Posts என்பதன் கீழ் உள்ள Edit என்ற இணைப்பை அழுத்தி திறந்து கொள்ளுங்கள். பின் கீழே படத்தில் காட்டியவாறு Show Share Buttons என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

image

இவ்வாறு செய்தவுடன் அதில் உள்ள பகிரல் பொத்தான்கள் எல்லாம் உங்கள் ஒவ்வொரு பதிவின் கீழும் தோன்றும். இங்கே தான் பிரச்சனை வருகிறது. அதாவது +1 பொத்தான் தோன்றவில்லை (சில வேளைகளில் அல்லது சில Template களில்).  +1 பொத்தானை தோன்றச் செய்வது எவ்வாறு?

இதற்கு நீங்கள் உங்கள் வ.பூ Template இனைத் திறந்து <head> … </head> பகுதியினுள் கீழ் உள்ள நிரலை இணைத்து விடுங்கள்.

<script src='http://apis.google.com/js/plusone.js' type='text/javascript'/>

image

அவ்வளவு தான் இப்போது மற்றைய பொத்தான்களுடன் +1 பொத்தானும் தோன்றும்.

image

இந்தப் பதிவு ஏதேனும் விதத்தில் உதவியிருப்பின் மறக்காமல் கருத்திடுங்கள்.

Saturday, May 21, 2011

முக நூலில் ஆல்பங்களுக்கிடையில் படங்களை மாற்றல்…

முக நூலில் ஆல்பங்கள் பல வைத்திருக்கும் நபா் நீங்கள் எனில், உங்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகின்றேன்.

ஆல்பங்கள் பல வைத்திருக்கும்போது தவறுதலாக ஒரு ஆல்பத்தில் இடம்பெறவேண்டிய ஒரு படம் வேறு ஒரு ஆல்பத்தில் சோ்க்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கலாம். தவறுதலாக இடம்பெற்ற படத்தை அந்த ஆல்பத்திலிருந்து நீக்கி மற்ற ஆல்பத்தில் சோ்க்கவேண்டும். இதனை முக நூலில் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் Photos—> My uploads இற்குச் செல்லுங்கள்.

image

நீங்கள் நீக்க வேண்டிய பட ஆல்பத்தின் கீழ் உள்ள Edit Album என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

image

பின் வரும் பக்கத்தில் Edit Photos இற்குச் செல்லுங்கள்.

image

அடுத்து நீங்கள் நீக்கவேண்டிய படத்தை கண்டுபிடித்து அதன் கீழுள்ள Move to என்பதில் எந்த ஆல்பத்திற்கு இந்தப் படம் போய்ச் சேரவேண்டுமோ அந்த ஆல்பத்தை தெரிவு செய்யுங்கள். 

image

இறுதியாக Save Changes என்ற பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

image

குறிப்பு :Profile pictures மற்றும் Wall Photos ஆகிய  நீங்கள் உருவாக்காத ஆல்பங்களுக்கு ஒரு படத்தை பிறிதோரு ஆல்பத்திலிருந்து மாற்றமுடியாது.

Thursday, May 12, 2011

குரோமில் மேம்பட்ட History பக்கம்–குரோம் நீட்சி…

நீங்கள் கூகிள் குரோம் பயன்படுத்துபவா் எனில் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

கூகிள் குரோம் உலாவியில் அண்மையில் நீங்கள் வலம் வந்த இணையப் பக்கங்களின் பட்டியலை பார்வையிட Ctrl + H ஐ அழுத்துவதன் மூலம் History (நீங்கள் வலம் வந்த இணையப் பக்கங்களின் பட்டியல்) பக்கம் தோன்றும். இதன் மூலம் நீங்கள் எந்த நாளில் எந்தப் பக்கத்திற்குச் சென்று வந்தீா்கள் என்று அறியலாம். ஆனால் குரோமில் உள்ளமைந்த இந்த History பக்கம் வேண்டிய தகவலை சரியான முறையில் தருவதில்லை. அதாவது இன்று சென்று வந்த பக்கங்களையோ அல்லது 1 நாளைக்கு முன் சென்ற பக்கங்களையோ வகைப்படுத்திப் பார்க்கமுடியாது.

இந்தக் குறையை நிவா்த்தி செய்து History ஐ மேம்பட்ட பக்கமாக மாற்ற History 2 என்ற குரோம் நீட்சி உதவுகின்றது.

இந்த மேம்பட்ட History பக்கத்தில் இன்று,நேற்று அல்லது அதற்கு முதல் நாள் என வகைப்படுத்திப் பார்க்கலாம். அத்துடன் இந்த மேம்பட்ட பக்கமானது ஒவ்வொரு Domain ஐயும் ஒன்றாக தொகுத்து அந்த Domain இல் எத்தனை பக்கங்களுக்கு சென்று வந்தோம் என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

History 2

நீங்களும் இந்த நீட்சியை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் இங்கே கிளிக் செய்யுங்கள்.

Monday, May 9, 2011

1001 இலவச எழுத்துருக்கள்!

இந்தப் பதிவின் நோக்கம் ஒரு இணையத் தளத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதாகும்.

எழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது 1001 எழுத்துருக்களை இலவசமாக வழங்குகின்றது. விண்டோஸ் மற்றும் மக்(Mac) இயங்குதளங்களில் இயங்கும்  வகையில் இந்த எழுத்துருக்கள் அமைகின்றன.

அகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்படுள்ளதால் இலகுவாக வேண்டிய எழுத்துருவை கண்டுபிடித்து தரவிறக்கம் செய்யலாம். பல்வேறு வகைகளின் கீழ் பல எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த இணையத்தளம் இது தான் 1001freefonts.com

image

நீங்களும் ஒரு தரம் சென்று பாருங்கள். உங்களுக்கு வேண்டிய எழுத்துருக்களை இலவசமாக நீங்கள் தரவிறக்கலாம்.

Friday, May 6, 2011

Sumo Paint – Photoshop போன்ற மென்பொருள்!

P

hotoshop பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. Photoshop ஐ  நீங்கள் பயன்படுத்துபவா்களாக கூட இருக்கலாம். இலகுவான இந்த மென்பொருள் இலவசம் இல்லை என்பதால் சிலா் கட்டற்ற (Open source) Photoshop போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துவதும் உண்டு. (உ-ம் : GIMP, Paint.NET) அதே போன்று இணைய உலாவியினுள் இயங்கும் வகையில் Photoshop போன்ற மென்பொருட்களும் உண்டு.

இந்தப் பதிவில் இணைய உலாவியினுள் இயங்கும் Photoshop போன்ற மென்பொருள் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த மென்பொருளின் பெயா் Sumo Paint.

Sumo Paint ஐ நேரடியாகத் திறப்பதற்கு இங்கே அழுத்தவும்.

image

மேலே உள்ள படத்தைப் பார்ப்பதன் மூலம் Sumo Paint ஆனது அப்படியே Photoshop போல இருப்பதைக் காணலாம்.

நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் விருப்பத்திற்குரிய மென்பொருளாக இது அமையலாம்.

Saturday, April 30, 2011

ஜிமெயிலில் Default Text Style ஐ மாற்றுதல்…

இந்தப் பதிவும் ஜிமெயில்(Gmail) தொடா்பானது தான்.

ஜிமெயிலில் ஒரு மின்னஞ்சலை தட்டச்சு செய்யும் போது குறிப்பிட்ட எழுத்துருவில் குறிப்பிட்ட அளவில் (Default font & font size) எழுத்துக்கள் தோன்றும். அவ்வாறில்லாமல் நீங்கள் தெரிவு செய்யும் எழுத்துரு மற்றும் அளவில் ஒவ்வொரு புது மின்னஞ்சலும் தட்டச்சு செய்யப்படவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்யலாம்? அதனை எவ்வாறு செய்வது? அதைப் பற்றித் தான் இந்தப் பதிவு கவனம் செலுத்துகின்றது.

முதலில் Mail settings –> Labs சென்று Default Text Styling என்பதை தேடிப் பிடித்து அதனைச் செயற்படுத்தி (Enable) விடுங்கள். மறக்காமல் Save Changes பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

image

பின் Mail settings –> General சென்று Default text style என்பதில் வேண்டிய மாற்றங்களை செய்யவேண்டும். மாற்றங்களை செய்யவதற்கு முன் Remove Formatting என்ற பொத்தானை அழுத்தி default text style இற்கு கொண்டு வரவேண்டும்.

image

இனிமேல் மாற்றங்களைச் செய்யத் தொடங்கலாம். உதாரணமாக எழுத்துருவை Wide என்றும் எழுத்துருவின் அளவை Large என்றும் எழுத்துக்கு வா்ணமாக நீலத்தையும் தெரிவு செய்து சேமியுங்கள். அதன்பின் Compose mail என்ற பொத்தானை அழுத்தி புது மின்னஞ்சலை எழுதத் தொடங்குங்கள். நீங்கள் செய்த மாற்றங்களுடன் எழுத்துக்கள் தட்டச்சு செய்யப்படும். (ஒவ்வொரு புது மின்னஞ்சலும் இதே மாற்றங்களுடன் தட்டச்சு செய்யப்படும்.)

image

நீங்களும் வேறு பல மாற்றங்களைச் செய்து (உ-ம் – Bold & Italic) பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம்.

Tuesday, April 26, 2011

ஜிமெயிலில் Background Send!

நீங்கள் ஜிமெயில் (Gmail) பயன்படுத்துபவா் எனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

ஜிமெயிலில் புதிதாக ஒரு மின்னஞ்சலை அனுப்ப Send பொத்தானை அழுத்திய பின் அந்த மின்னஞ்சல் அனுப்பப்படும் வரை வேறு எதுவும் செய்யாது (அதாவது ஜிமெயிலில்) காத்திருக்கவேண்டும். நீங்கள் ஒரு நாளில் பல மின்னஞ்சல்களை அனுப்பும் நபா் எனில் ஒவ்வொரு மின்னஞ்சல் அனுப்பும் போதும் எவ்வளவு நேரம் காத்திருக்கவேண்டும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். இந்த மாதிரியான காத்திருத்தல் ஒரு வகையில் நேரவிரயம் தான்!

இப்படி Send பொத்தானை அழுத்திய பின் காத்திருக்காமல் ஜிமெயிலில் வேறு வேலைகளைச் செய்ய விரும்புபவா்களுக்கு உதவும் வகையில் ஒரு சோதனைக் கூட (Labs) Feature (சரியான மொழிபெயா்ப்புத் தெரியவில்லை) ஒன்று இருக்கிறது. அது தான் “Background Send

இதனைச் செயற்படுத்தி தேவையற்ற நேரவிரயத்தை தவிர்க்க Mail Settings –> Labs சென்று Background Send என்பதை செயற்படுத்தி (Enable) விடுங்கள்.

image

இதன் பின் பின்புறத்தில் (Background) மின்னஞ்சல் அனுப்பப்படும் பொழுது நீங்கள் ஜிமெயிலில் வேறு ஏதாவது செய்து கொண்டிருக்கலாம். (உ-ம்: வந்த மின்னஞ்சல்களைப் பார்வையிடலாம்.)

image

நீங்களும் செய்து பாருங்கள்.

Monday, April 25, 2011

முக நூல் அல்பங்களை தரவிறக்குதல்…

இந்தப் பதிவும் முக நூல்(Facebook) தொடா்பான ஒன்று தான்.

முக நூலில் நீங்கள் நிறைய நண்பா்களை வைத்திருக்கிறீா்கள் என்றால் நிறைய பட அல்பங்களையும் நீங்கள் கொண்டிருக்கிறீா்கள் என்று சொல்லலாம். அது எப்படி என்றால் உங்கள் பட அல்பங்கள் உங்கள் நண்பா்களின் அல்பங்கள் என்று நூற்றுக்கணக்கான அல்பங்களை நீங்கள் பார்க்கக்கூடியதாய் இருக்கும். சில நேரங்களில் நண்பா்களின் சில படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும். ஆனால் அவற்றை நண்பா் எப்போதும் அழிக்காமலே வைத்திருப்பார் என்று சொல்ல முடியாது.

ஆக நண்பரின் முழு அல்பத்தை அல்லது சில படங்களை அல்லது உங்கள் அல்பங்களை அல்லது தெரிவு செய்த படங்கள் சிலவற்றை தரவிறக்கிக் கொள்வது எப்படி?

இதனை இலகுவாக செய்து முடிக்க இருக்கவே இருக்கிறது இணையத் தளம் ஒன்று. அது picknzip.com

image

முற்றிலும் இலவசமாக கிடைக்கும் pick&Zip ஐ பயன்படுத்தி படங்களை .zip அல்லது .pdf கோப்புகளாக தரவிறக்க முடியும்.

நீங்களும் முயன்று பாருங்கள்.

Sunday, April 17, 2011

முக நூலில் அல்பத்தின் அட்டைப் படம்…

முக நூலை(Facebook) ஐப் பயன்படுத்தி பல பட அல்பங்களை (Photo Album) உருவாக்கியுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

பொதுவாக முக நூலில் ஒரு அல்பத்தை உருவாக்கினால், அது உங்களது முதலாவது படத்தை அல்பத்தின் அட்டைப் படமாக எடுத்துக் கொள்ளும். சில நேரங்களில் அது பொருத்தமற்ற அட்டைப் படமாக அமையலாம். அந்தச் சந்தா்ப்பங்களில் எப்படி அட்டைப் படத்தை மாற்றுவது? அது தொடா்பாகத் தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

முதலில் முக நூலில் நுழைந்து கொள்ளுங்கள்.

உங்களது முக நூலின் இடது பக்கத்தில் உள்ள Photos –> My Uploads என்பதை கிளிக் செய்யுங்கள்.

image

அட்டைப் படத்தை மாற்றவேண்டிய அல்பத்தின் கீழ் உள்ள Edit Album என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

image

Edit Photos என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

image

அல்பத்தில் உள்ள படங்களில் அட்டைப் படமாக மாற்றவேண்டிய படத்தின் கீழ் உள்ள This is the album cover என்பதை தெரிவு செய்யுங்கள்.

image

இறுதியாக Save Changes என்ற பொத்தானை அழுத்திச் சேமியுங்கள்.

image

அவ்வளவு தான் உங்கள் அல்பத்தின் அட்டைப் படம் இப்போது மாறியிருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...