நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Monday, July 26, 2010

20 வருடத்தில் – நீங்கள்…!

எல்லோருக்கும் எதிர்காலத்தில் தம் முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆா்வம் இருக்கும் தானே?

இதோ இவ் இணையத் தளம் நீங்கள் இன்னும் இருபது வருடத்தில் எப்படி இருப்பீா்கள் என்று காட்டுகின்றது. முயற்சித்துப் பாருங்களேன்.

தளம் : http://www.in20years.com/

image

Saturday, July 3, 2010

Friend Connect இல் ஒருவரைத் தடுத்தல்!

நீங்கள் உங்கள் வ.பூவில் கூகிளின் Friend Connect ஐ இணைத்து உங்கள் வ.பூவைப் படிப்பவா்கள் தொடரும் வகை செய்திருப்பீா்கள். அப்படி இணைத்து இருக்கும் பட்சத்தில் யாரும் உங்களைத்(வ.பூவை) தொடர வழி ஏற்படும்.

இங்கு தான் பிரச்சனை உருவாகிறது. அதாவது தேவையில்லாதவா்கள் எல்லாம் இணைகின்ற வழி ஏற்படும் (ஒரு வகை விளம்பரத்திற்காக சிலா் இணைகிறார்கள்).

ஆக அப்படி இணைக்கின்ற ஒருவரை தடுப்பது (Block) எப்படி?

முதலில் Friend Connect தளத்தில் நுழையுங்கள்.

image 

திறக்கின்ற சாளரத்தில் (Window) இருந்து உங்கள் வ.பூவை அல்லது இணையத் தளத்தைத் திறந்து கொள்ளுங்கள்.

image

மேலே காட்டியபடி (உ+ம்: பஞ்சாமிர்தம்) இணைப்பை அழுத்தியபின் வருகின்ற சாளரத்தில் “Moderate” என்ற இணைப்பை அழுத்தவும்.

image

மேலே காட்டியவாறு “Moderate” என்ற இணைப்பை அழுத்திய பின் உங்கள் வ.பூவில் இணைந்திருப்பவா்களின் பட்டியல் காண்பிக்கப்படும். அதில் இருந்து நீங்கள் தடுக்க (Block) வேண்டிய நபரைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.

கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு தோன்றும் தரவுகளில் இருந்து “Block this user” என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.

image

அவ்வளவு தான் நீங்கள் குறித்த நபரைத் தடுத்து (Block) விட்டீா்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...