நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Sunday, November 8, 2009

Gmail இல் உங்கள் கையொப்பம்! [HTML]

வணக்கம் வ.பூ நண்பர்களே,

நீண்ட நாட்களின் பின் மீண்டும் ஒரு பதிவு. (என்ன செய்ய சரக்கு இருந்தால் தினம் ஒரு பதிவு போடலாம் தான்.;-))

சரி இன்றைய பதிவின் சாரம் என்ன?

பொதுவாக கடிதம் ஒன்றை எழுதி முடித்த பின் “உங்கள் அன்பின்” இப்படி ஏதாவது ஒன்றைக் கிறுக்கி கடைசியில் நம் அழகான கையெழுத்தைப் போடுகின்ற சுகம் தனி! இப்போதெல்லாம் கடதாசி தேடி கடிதம் எழுதுவது எங்காவது அபூர்வமாக நடக்கும். இணைய உலகில் மினுக்கு மினுக்கு எனும் மின்னஞ்சல் சேவைகளை விட்டால் கதி என்ன? ஆக மின்னஞ்சல் எழுதி முடித்த பின் உங்கள் பெயர், கையொப்பம் வேறு ஏதேனும் தகவல்கள் ஆகியவற்றை மின்னஞ்சலின் அடியில் இணைத்து அனுப்புவது சாதாரணம்.

இதனை நீங்கள் ஏதேனும் மின்னஞ்சல் அனுப்பும் மென்பொருட்களைப் பயன்படுத்தி இலகுவாக செய்ய முடியும். (உ+ம்: Microsoft Outlook / Microsoft Outlook Express)

பலரும் மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களின் இணையப் பக்கங்களைப் பயன்படுத்தியே மின்னஞ்சலை அனுப்புகின்றனர்/பெறுகின்றனர். அந்தவகையில் நான் அனுப்பும் மின்னஞ்சல்களின் அடியில் என் பெயருடன் என் வ.பூக்ககளின் பட்டியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் என் முகவரி ஆகியவற்றை இணைக்கவிரும்பி நான் வழமையாகப் பயன்படுத்தும் Gmail இல் முயன்றேன். (Settings –> General –> Signature)

image

மேலே உள்ள பெட்டியினுள் எந்தவிதமான அதிகூடிய வசதிகளையும் பெறமுடியாது. அதாவது வெறும் Plain Text ஐ மட்டுமே பயன்படுத்தமுடியும். (நீங்கள் விரும்பியது போல தடித்த, சரிந்த எழுத்துகளையோ ஏதேனும் இணைப்புக்களையோ அல்லது படங்களையோ இணைக்க முடியாது.)

இதற்கு கூகிள் என்ன சொல்கிறது என்று பார்த்தால் :

image

அதாவது படங்களையோ, HTML வசதிகளையோ பயன்படுத்த முடியாது. (அதாவது <b>,<i>,<u><br> போன்றவற்றைப் பயன்படுத்தமுடியாது.)

சரி என்ன செய்யலாம் என்று மேலும் தேடியதில் கைகளில் சிக்கியது நெருப்பு நரியின் “Add-on” ஒன்று.

அது :

image

மேலே உள்ள இணைப்பின் மூலம் நெருப்பு நரியின் இந்த நீட்சியை தரவிறக்கி நிறுவிய பின், Tools –> WiseStamp ஐ செயற்படுத்துவதன் மூலம் உங்களுக்குத் தேவையான வகையில் கையொப்பம் ஒன்றைத் தயாரிக்க முடியும். (வியாபாரத் தேவைகளுக்கு ஒன்று சொந்தத் தேவைகளுக்கு ஒன்று என இரு வகை கையொப்பங்களைத் தயாரிக்கமுடியும்.)

image

உங்கள் சமூக இணையத்தளங்களின் இணைப்புகளையும் இணைக்க முடியும். (Facebook,Twitter,Youtube போன்றவை) இதனைப் பயன்படுத்தி கையொப்பம் ஒன்றை உருவாக்கிய பின் Gmail ஐ திறந்து புதிதாக ஒரு மின்னஞ்சலை எழுதத் தொடங்கினால் தானாகவே நீங்கள் உருவாக்கிய கையொப்பம் உங்கள் மின்னஞ்சலின் அடியில் இணைக்கப்பட்டுவிடும். (அப்படி தானாகவே இணைக்கத் தேவையில்லை எனில் அதற்கான தெரிவை நீக்கி விடலாம். Tools –> WiseStamp –> Settings)

image

இதன் மூலம் உருவாக்கிய கையொப்பம் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளதை கீழுள்ள படத்தில் காணலாம்.

image

இந்த நெருப்பு நரி நீட்சியானது Gmail,Yahoo,Hotmail மற்றும் AOL ஆகியவற்றில் இயங்கக்கூடியது. அத்துடன் இந்த நீட்சியானது தற்போது நெருப்பு நரியில் மட்டுமே இயங்கக்கூடியது.

இந்தப் பதிவு ஏதேனும் விதத்தில் உங்களுப் பயன்பட்டிருந்தால் தவறாது ஒரு வார்த்தை எழுதுங்கள்.

1 comments:

எம்.ஞானசேகரன் said...

நண்பரே உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
G-mail கையொப்பம் பதிவில் உள்ளபடி நான் WiseStamp நெருப்புநரியில் தரவிறக்கி விட்டேன். ஆனால் மெயில் அனுப்பும்போது கையெழுத்து (HTML)attach ஆக வில்லை. கொஞ்சம் விளக்கமாக கூறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...