நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Saturday, November 21, 2009

ஒவ்வொரு கிளிக்கின் போதும் ஒவ்வொரு பதிவு!

இணையத்தில் நீந்தும் போது அறிந்த ஒன்று இது. யாருக்காவது பயன்தரலாம் என்று பகிர்ந்து கொள்கின்றேன்.

அதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டியது தான். ஏன்? பிறகு சொல்கிறேன்.

 
மேலுள்ள இணைப்பை கிளிக் செய்து பார்வையிட்டவா்கள் என் இவ் வலைப் பூவில் இருந்து ஏதேனும் ஒரு பதிவை பார்வையிட்டிருப்பீா்கள். சரி, அப்படிச் செய்தவா்கள் மறுபடியும் கிளிக் செய்து பாருங்கள். ஏன்டா… (ம்…) சும்மா செய்து பாருங்கள்… அட இப்பொழுது வேறு ஒரு பதிவு வருகிறதா? அதே தான்! நான் சொல்ல வந்த விசயம் அவ்வளவு தான்.
 
கீழே உள்ள Javascript நிரலானது உங்கள் வ.பூவில் உள்ள ஏதேனும் ஒரு பதிவை ஒவ்வொரு கிளிக்கின் போதும் எடுத்துத் தந்து கொண்டே இருக்கும்.(ஆகா…! )
 
 
<div id="myLuckyPost"></div> <script type="text/javascript"> function showLucky(root){ var feed = root.feed; var entries = feed.entry || []; var entry = feed.entry[0]; for (var j = 0; j < entry.link.length; ++j){if (entry.link[j].rel == 'alternate'){window.location = entry.link[j].href;}}} function fetchLuck(luck){ script = document.createElement('script'); script.src = '/feeds/posts/summary?start-index='+luck+'&max-results=1&alt=json-in-script&callback=showLucky'; script.type = 'text/javascript'; document.getElementsByTagName('head')[0].appendChild(script); } function feelingLucky(root){ var feed = root.feed; var total = parseInt(feed.openSearch$totalResults.$t,10); var luckyNumber = Math.floor(Math.random()*total);luckyNumber++; a = document.createElement('a'); a.href = '#random'; a.rel = luckyNumber; a.onclick = function(){fetchLuck(this.rel);}; a.innerHTML = 'View Random Post'; document.getElementById('myLuckyPost').appendChild(a); } </script> <script src="/feeds/posts/summary?max-results=0&alt=json-in-script&callback=feelingLucky"></script>

சரி, எப்படி இணைக்கலாம்?

நீங்கள் Blogger வ.பூ பயனா் எனில், உங்கள் மேலாண்மைப் பகுதிக்குச் சென்று (Dashboard)

Layout –> Add a Gadget என்பதைச் சொடுக்கி,

image

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள HTML/JavaScript ஐ செயற்படுத்தி அதனுள் மேலுள்ள நிரலை வெட்டி ஒட்டி(Copy & Paste) விடுங்கள். (Title ஏதேனும் பொருத்தமாக கொடுங்கள்.)

விரும்பினால், a.innerHTML = 'View Random Post'; ஐ  நிரலினுள் தேடிக் கண்டு பிடித்து 'View Random Post' என்பதற்குப் பதில் உங்களுக்கு பிடித்த மாதிரியான ஒரு தலைப்பைக் கொடுக்கவும். (இல்லாவிட்டால் பேசாமல் விடுங்கள்.)

பின், Save பொத்தானை அழுத்தி சேமிக்கவும்.

அவ்வளவே தான்!

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...