நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Thursday, November 26, 2009

Blogger இல் தொடா்பான பதிவுகள் – உத்தி!

நீங்கள் Blogger ஐ பயன்படுத்துபவா் எனில், இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

பொதுவாகவே வ.பூவில் இடப்படுகின்ற பதிவுகள் ஒன்றை ஒன்று ஏதோ ஒரு விதத்தில் சார்ந்திருக்கும். அவ்வாறான பதிவுகளை வேறு ஒரு பதிவைப் படிக்கும் வ.பூ வாசகனுக்கு தெரியப்படுத்தும் போது வாசகனை எம் வ.பூவில் அதிக நேரம் வைத்திருக்கமுடியும். இந்த உத்தி பல சேவை வழங்குனா்களால் பயன்படுத்தப்டுகின்றது. “Related Links” என்று பதிவின் கீழ் அந்தப் பதிவோடு தொடா்பான பதிவுகளை காட்டுவது தான் அந்த உத்தி!

Blogger இல் இதற்கென தனியாக ஒரு Widget (தனித்து இயங்கும் சிறு நிரல்) இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. (அறிந்தவா்கள் தெரியப்படுத்தலாம்.) இதற்கான மாற்று வழி தான் இந்தப் பதிவு.

  • வ.பூக்களை மேலாண்மை செய்யும் பகுதியில் (Dashboard) Layout என்ற இணைப்பை அழுத்தி, பின் வரும் சாளரத்தில் (Window) Edit HTML என்பதை அழுத்தவும். (Blogger Dashboard –> Layout –> Edit HTML)

image

  • மேற்சொன்ன கட்டளையைச் செயற்படுத்தியவுடன் வருகின்ற சாளரத்தில் Expand Widget Templates என்ற பெட்டியானது தெரிவு செய்யப்படவேண்டும். (அதற்கு முன் உங்கள் Template ஐ தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள்!)

image

  • பின் </head> என்ற HTML Tag ஐ தேடுங்கள். (நீங்கள் நெருப்புநரி பயன்படுத்துபவா் எனில், Ctrl+F ஐ அழுத்துவதன் மூலம் இதனைச் செய்யலாம். Microsoft Internet Explorer இலும் இதே சிறு கட்டளையை பயன்படுத்தலாம்.)
  • கீழ்காணும் நிரலை (CSS Style) ஐ </head> இற்கு சற்று மேல் பிரதிசெய்து(Ctrl +C) ஒட்டவும் (Ctrl+V).

image

<style>
#related-posts {
float : left;
width : 540px;
margin-top:20px;
margin-left : 5px;
margin-bottom:20px;
font : 11px Verdana;
margin-bottom:10px;
}
#related-posts .widget {
list-style-type : none;
margin : 5px 0 5px 0;
padding : 0;
}
#related-posts .widget h2, #related-posts h2 {
font-size : 20px;
font-weight : normal;
margin : 5px 7px 0;
padding : 0 0 5px;
}
#related-posts a {
text-decoration : none;
}
#related-posts a:hover {
text-decoration : none;
}
#related-posts ul {
border : medium none;
margin : 10px;
padding : 0;
}
#related-posts ul li {
display : block;
background : url("http://1.bp.blogspot.com/_cNpXRtRph18/SpbSRYurg2I/AAAAAAAAD7Q/GbYNm2feyIQ/rss.png") no-repeat 0 0;
margin : 0;
padding-top : 0;
padding-right : 0;
padding-bottom : 1px;
padding-left : 21px;
margin-bottom : 5px;
line-height : 2em;
border-bottom:1px dotted #cccccc;
}
</style>
<script src='http://bsaves.com/scripts/Related_posts_hack.js' type='text/javascript'/>

  • இப்போது நீங்கள் <p><data:post.body/></p> அல்லது <data:post.body/> என்பதை தேடவேண்டும்.

image

  • கீழ்க்காணும் நிரலை மேலே நீங்கள் தேடிய பகுதியின் கீழ் இணைத்துவிடுங்கள்.

<b:if cond='data:blog.pageType == "item"'>
<div id="related-posts">
<font face='Arial' size='3'><b>Related Posts : </b></font><font color='#FFFFFF'><b:loop values='data:post.labels' var='label'><data:label.name/><b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>,</b:if><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels&amp;max-results=5&quot;' type='text/javascript'/></b:if></b:loop> </font>
<script type='text/javascript'> removeRelatedDuplicates(); printRelatedLabels();
</script>
</div></b:if>

  • இறுதியாக உங்கள் Template ஐ சேமித்துவிடுங்கள்.

குறிப்பு : நீங்கள் உங்கள் பதிகளுக்கு Label / Tag / Category கொடுத்திருத்தல் அவசியம்.

Saturday, November 21, 2009

ஒவ்வொரு கிளிக்கின் போதும் ஒவ்வொரு பதிவு!

இணையத்தில் நீந்தும் போது அறிந்த ஒன்று இது. யாருக்காவது பயன்தரலாம் என்று பகிர்ந்து கொள்கின்றேன்.

அதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டியது தான். ஏன்? பிறகு சொல்கிறேன்.

 
மேலுள்ள இணைப்பை கிளிக் செய்து பார்வையிட்டவா்கள் என் இவ் வலைப் பூவில் இருந்து ஏதேனும் ஒரு பதிவை பார்வையிட்டிருப்பீா்கள். சரி, அப்படிச் செய்தவா்கள் மறுபடியும் கிளிக் செய்து பாருங்கள். ஏன்டா… (ம்…) சும்மா செய்து பாருங்கள்… அட இப்பொழுது வேறு ஒரு பதிவு வருகிறதா? அதே தான்! நான் சொல்ல வந்த விசயம் அவ்வளவு தான்.
 
கீழே உள்ள Javascript நிரலானது உங்கள் வ.பூவில் உள்ள ஏதேனும் ஒரு பதிவை ஒவ்வொரு கிளிக்கின் போதும் எடுத்துத் தந்து கொண்டே இருக்கும்.(ஆகா…! )
 
 
<div id="myLuckyPost"></div> <script type="text/javascript"> function showLucky(root){ var feed = root.feed; var entries = feed.entry || []; var entry = feed.entry[0]; for (var j = 0; j < entry.link.length; ++j){if (entry.link[j].rel == 'alternate'){window.location = entry.link[j].href;}}} function fetchLuck(luck){ script = document.createElement('script'); script.src = '/feeds/posts/summary?start-index='+luck+'&max-results=1&alt=json-in-script&callback=showLucky'; script.type = 'text/javascript'; document.getElementsByTagName('head')[0].appendChild(script); } function feelingLucky(root){ var feed = root.feed; var total = parseInt(feed.openSearch$totalResults.$t,10); var luckyNumber = Math.floor(Math.random()*total);luckyNumber++; a = document.createElement('a'); a.href = '#random'; a.rel = luckyNumber; a.onclick = function(){fetchLuck(this.rel);}; a.innerHTML = 'View Random Post'; document.getElementById('myLuckyPost').appendChild(a); } </script> <script src="/feeds/posts/summary?max-results=0&alt=json-in-script&callback=feelingLucky"></script>

சரி, எப்படி இணைக்கலாம்?

நீங்கள் Blogger வ.பூ பயனா் எனில், உங்கள் மேலாண்மைப் பகுதிக்குச் சென்று (Dashboard)

Layout –> Add a Gadget என்பதைச் சொடுக்கி,

image

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள HTML/JavaScript ஐ செயற்படுத்தி அதனுள் மேலுள்ள நிரலை வெட்டி ஒட்டி(Copy & Paste) விடுங்கள். (Title ஏதேனும் பொருத்தமாக கொடுங்கள்.)

விரும்பினால், a.innerHTML = 'View Random Post'; ஐ  நிரலினுள் தேடிக் கண்டு பிடித்து 'View Random Post' என்பதற்குப் பதில் உங்களுக்கு பிடித்த மாதிரியான ஒரு தலைப்பைக் கொடுக்கவும். (இல்லாவிட்டால் பேசாமல் விடுங்கள்.)

பின், Save பொத்தானை அழுத்தி சேமிக்கவும்.

அவ்வளவே தான்!

Sunday, November 8, 2009

Gmail இல் உங்கள் கையொப்பம்! [HTML]

வணக்கம் வ.பூ நண்பர்களே,

நீண்ட நாட்களின் பின் மீண்டும் ஒரு பதிவு. (என்ன செய்ய சரக்கு இருந்தால் தினம் ஒரு பதிவு போடலாம் தான்.;-))

சரி இன்றைய பதிவின் சாரம் என்ன?

பொதுவாக கடிதம் ஒன்றை எழுதி முடித்த பின் “உங்கள் அன்பின்” இப்படி ஏதாவது ஒன்றைக் கிறுக்கி கடைசியில் நம் அழகான கையெழுத்தைப் போடுகின்ற சுகம் தனி! இப்போதெல்லாம் கடதாசி தேடி கடிதம் எழுதுவது எங்காவது அபூர்வமாக நடக்கும். இணைய உலகில் மினுக்கு மினுக்கு எனும் மின்னஞ்சல் சேவைகளை விட்டால் கதி என்ன? ஆக மின்னஞ்சல் எழுதி முடித்த பின் உங்கள் பெயர், கையொப்பம் வேறு ஏதேனும் தகவல்கள் ஆகியவற்றை மின்னஞ்சலின் அடியில் இணைத்து அனுப்புவது சாதாரணம்.

இதனை நீங்கள் ஏதேனும் மின்னஞ்சல் அனுப்பும் மென்பொருட்களைப் பயன்படுத்தி இலகுவாக செய்ய முடியும். (உ+ம்: Microsoft Outlook / Microsoft Outlook Express)

பலரும் மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களின் இணையப் பக்கங்களைப் பயன்படுத்தியே மின்னஞ்சலை அனுப்புகின்றனர்/பெறுகின்றனர். அந்தவகையில் நான் அனுப்பும் மின்னஞ்சல்களின் அடியில் என் பெயருடன் என் வ.பூக்ககளின் பட்டியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் என் முகவரி ஆகியவற்றை இணைக்கவிரும்பி நான் வழமையாகப் பயன்படுத்தும் Gmail இல் முயன்றேன். (Settings –> General –> Signature)

image

மேலே உள்ள பெட்டியினுள் எந்தவிதமான அதிகூடிய வசதிகளையும் பெறமுடியாது. அதாவது வெறும் Plain Text ஐ மட்டுமே பயன்படுத்தமுடியும். (நீங்கள் விரும்பியது போல தடித்த, சரிந்த எழுத்துகளையோ ஏதேனும் இணைப்புக்களையோ அல்லது படங்களையோ இணைக்க முடியாது.)

இதற்கு கூகிள் என்ன சொல்கிறது என்று பார்த்தால் :

image

அதாவது படங்களையோ, HTML வசதிகளையோ பயன்படுத்த முடியாது. (அதாவது <b>,<i>,<u><br> போன்றவற்றைப் பயன்படுத்தமுடியாது.)

சரி என்ன செய்யலாம் என்று மேலும் தேடியதில் கைகளில் சிக்கியது நெருப்பு நரியின் “Add-on” ஒன்று.

அது :

image

மேலே உள்ள இணைப்பின் மூலம் நெருப்பு நரியின் இந்த நீட்சியை தரவிறக்கி நிறுவிய பின், Tools –> WiseStamp ஐ செயற்படுத்துவதன் மூலம் உங்களுக்குத் தேவையான வகையில் கையொப்பம் ஒன்றைத் தயாரிக்க முடியும். (வியாபாரத் தேவைகளுக்கு ஒன்று சொந்தத் தேவைகளுக்கு ஒன்று என இரு வகை கையொப்பங்களைத் தயாரிக்கமுடியும்.)

image

உங்கள் சமூக இணையத்தளங்களின் இணைப்புகளையும் இணைக்க முடியும். (Facebook,Twitter,Youtube போன்றவை) இதனைப் பயன்படுத்தி கையொப்பம் ஒன்றை உருவாக்கிய பின் Gmail ஐ திறந்து புதிதாக ஒரு மின்னஞ்சலை எழுதத் தொடங்கினால் தானாகவே நீங்கள் உருவாக்கிய கையொப்பம் உங்கள் மின்னஞ்சலின் அடியில் இணைக்கப்பட்டுவிடும். (அப்படி தானாகவே இணைக்கத் தேவையில்லை எனில் அதற்கான தெரிவை நீக்கி விடலாம். Tools –> WiseStamp –> Settings)

image

இதன் மூலம் உருவாக்கிய கையொப்பம் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளதை கீழுள்ள படத்தில் காணலாம்.

image

இந்த நெருப்பு நரி நீட்சியானது Gmail,Yahoo,Hotmail மற்றும் AOL ஆகியவற்றில் இயங்கக்கூடியது. அத்துடன் இந்த நீட்சியானது தற்போது நெருப்பு நரியில் மட்டுமே இயங்கக்கூடியது.

இந்தப் பதிவு ஏதேனும் விதத்தில் உங்களுப் பயன்பட்டிருந்தால் தவறாது ஒரு வார்த்தை எழுதுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...