நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Saturday, October 24, 2009

அலைகளின் நடனம்!

image

வணக்கம் வலை உலக நண்பர்களே,

"அலைகளின் நடனம்" கூகிளின் அழைப்பிதழ் ஒன்று கிடைக்கப்பெற்று அதனுள் நுழைந்து புது அலை ஒன்றில் ஏறி அலை எப்படி என அறியும் ஆவல் கொண்டு நிற்கின்றேன்.

என்ன அது "அலைகளின் நடனம்" (Google Wave) என்று கேட்பவர்களுக்கு சுருக்கமாகச் சொல்லக் கூடிய பதில்:

இது ஒரு புது வித தொடர்பாடல் ஊடகம். வழமையாக எனக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு விடயத்தைப்பற்றி என் கருத்து என்ன என்று கேட்டு என் நண்பன் அனுப்பிய மின்னஞ்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் அதனைப் படித்த பின்னர் என் கருத்துக்களை தட்டச்சு செய்து மீண்டும் என் நண்பனுக்கு அனுப்புகிறேன். அதனைத் தொடர்ந்து நண்பன் தன் கருத்துக்களைச் சொல்ல பின் மீண்டும் ஒரு மின்னஞ்சல்... இப்படி எம்மிடையே எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் என்று கற்பனை செய்து பாருங்கள். (மின்னஞ்சலின் பல பிரதிகள் பல இடங்களில் ... )

மேலே சொன்னது சிறு உதாரணம் மட்டுமே. உரையாடும் நபர்களின் எண்ணிக்கை கூடினால் இது மேலும் சிக்கலாகும். இங்கு தான் கூகிளின் "அலைகளின் நடனம்" (Google Wave) கை கொடுக்கிறது.

எப்படி? நான் புது அலை ஒன்றில் ஏறி என் கருத்துகளை தட்டச்சு செய்து யார் கருத்து வேண்டுமோ அவரை அழைத்தால் போதுமானது. ஆக அலை ஒன்று... ஒரு பொது இடத்தில்... தேவையில்லாமல் பிரதிகள் அனுப்பத் தேவையில்லை. என்னவிதமான உள்ளடக்கம் என்றாலும் இதனுள் இணைக்கலாம்...

மாதிரிக்கு ஒன்று...

இந்தத் திட்டம் (ஏதேனும் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள். ) வெற்றி பெறும் என்று நம்புபவர்கள் எத்தனை பேர்? (அதாவது உரையாடும் குழுவில் இருந்து) என்று கேட்டுவிட்டு கீழ்க்காண்பது போல வாக்குப்பதிவு எடுக்கலாம்.

image

மச்சான் அந்த இடம் எங்க இருக்கு என்று உனக்குத் தெரியுமா? (உரையாடும் குழுவில் யாரேனும் கேட்டால்.) கவலையே வேண்டாம்... இதோ (கீழே உள்ளது போல பல ஞாலங்கள் செய்யலாம்.)

image

சரி அது இருக்க என்னிடம் சில அழைப்பிதழ்கள் உண்டு. (உபயம் - கூகிள்  10-15) யாரேனும் அலையில் ஏறி விளையாட விரும்பினால் அடியேன் ஒரு அழைப்பிதழை அனுப்பமுடியும். (மின்னஞ்சல் அனுப்புங்கள். )

Related Posts Plugin for WordPress, Blogger...