நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Monday, June 15, 2009

Justin.tv – உயிர்நிலை உலகம்!

இது அண்மையில் நான் உலவிய ஒரு இ.தளத்தைப் பற்றிய குறிப்பு.

கோயில் திருவிழா அல்லது ஒரு தலைவரின் பதிவியேர்ப்பு வைபவத்தை வானொலி மூலமாகவோ தொலைக்காட்சி மூலமாகவோ நேரடியாக கேட்டு/கண்டு உணர்ந்த அனுபவம் பலருக்கும் வாய்த்திருக்கலாம். இந்த இணைய உலகிலே இது ஒரு படி மேலே போய் ஒரு மனிதனுடைய அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை இணையத்தில் உயிர்நிலையில் காட்டுகின்ற(Lifecasting) தளத்திற்குள் நாம் வந்திருக்கின்றோம். எப்படி என்றால் உங்கள் வீட்டில் ஒரு இணைய கமெராவை ஒழுங்கு செய்துவிட்டு நீங்கள் உங்கள் அன்றாட வேலைகளை செய்யவேண்டியது தான். பார்க்க விரும்புவர்கள் வந்து பார்த்துக்கொண்டு(இணையம் மூலம்) கூடவே அரட்டையும் அடிக்கலாம்.

மேலே சொன்னதை சாத்தியமாக்கும் பல தளங்களில் justin.tv என்ற தளமும் ஒன்று.

பல்வேறு வகைகளின் (Channel) கீழ் தொகுக்கப்பட்ட உயிர்நிலை காணொளிகளும் ஏற்கனவே பரிமாறப்பட்ட காணொளிகளும் காணக்கிடைக்கின்றன.

வேறு பலரோடு சேர்ந்து படங்களும் பார்க்கமுடியும். அப்படியே பார்த்துக்கொண்டு அரட்டையும் அடிக்கலாம்.

ம்.. சரி… பார்க்கலாம்…

image

இது தொடர்பான ஏனை தளங்கள்:

  • blogTV
  • வேறு தளங்களை நீங்களே சொல்லுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...