நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Friday, June 19, 2009

esnips கோப்புகளைத் தரவிறக்கல்…

வணக்கம் நண்பர்களே,

இந்தப் பதிவில் “esnips” இல் இருந்து எப்படி கோப்புக்களைத் தரவிறக்கலாம் என்று பார்ப்போம்.

முதலில் இலகுவான வழி :

கோப்பினை தரவேற்றியவரிடம் சொல்லி “Download” என்ற தெரிவை செய்து கோப்பினை சேமித்தால் சரி… (இது தான் உண்மையில் கஷ்டமான விசயம்… ';-))

image 

ஆக மேலே சொன்னது பெரும்பாலும் நடக்காது. அடுத்த வழி தான் என்ன?

இதோ அடுத்த வழி :

அண்மையில் ஒரு இ.பக்கத்தை பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த இ.பக்கம் தான் அடுத்த வழி.

image

மேலே காணப்படுகின்ற இ.பக்கதிற்குச் சென்று நீங்கள் தரவிறக்கவேண்டிய கோப்பின் (உ+ம் : ஒரு mp3 கோப்பு) முகவரியினை கொடுத்து “Generate” என்ற பொத்தனை அழுத்துவதன் மூலம் நீங்கள் தரவிறக்குவதற்கு வேண்டிய கோப்பின் நீண்ட முகவரி கீழ் உள்ள பெட்டியில் தோன்றும். பிறகென்ன அந்தக் கோப்பு உங்கள் கையில்…

அடுத்த வழி :

நீங்கள் நெருப்பு நரி இ.உலாவியை பயன்படுத்துபவர் எனில் “Video Download Helper” என்ற “Add-on” ஐத் தரவிறக்கி நிறுவுதல் மூலம் இதனைச் செய்யலாம். (இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன்.)

மேலே சொன்ன Add-on ஐ நிறுவிய பின் நீங்கள் தரவிறக்கவேண்டிய esnips கோப்பினை நெருப்பு நரியில் திறந்து கொள்ளுங்கள்.

VDH

 

மேலே படத்தில் காட்டிய படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தேவையான கோப்பினைத் தரவிறக்கலாம்.

கடைசியாக…

Internet Download Manager ஐ நிறுவுவதன் மூலம் எந்த ஒரு கோப்பினையும் இலகுவாக தரவிறக்கலாம். (30 நாள்-முயற்சித்து வாங்கும் வடிவில் கிடைக்கிறது.)

வேறு என்ன இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.

இந்தப் பதிவு ஏதேனும் விதத்தில் உதவி இருப்பின் ஒரு வார்த்தை எழுதுங்கள்…

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...