நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Friday, June 5, 2009

நானா நீயா பார்ப்போம் ஒரு கை!

தலைப்பை பார்த்ததும் “என்னடா…” என்று ஒரு ஆர்வத்தில என் வ.பூவை நீங்கள் எட்டிப் பார்த்து, எதிர்பார்த்த மாதிரி எதுவும் இல்லையே என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றியிருந்தால் மன்னிக்கவும்.

Microsoft நிறுவனம் தனது புது வடிவ தேடுபொறியை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் “Live Search” என்று இருந்து இப்போது “Bing” என்ற புது நாமத்தோடு ஐயா (Microsoft) களத்தில இறங்கியிருக்கிறார். கூகிளுக்கு போட்டியா இருக்கும் என்று கூட பலர் சொல்லுகினம். அப்படி எதுவும் இல்லை. (இணையத்தில் ஜுன் 3,2009 இல் இருந்து உலாவருகின்றது.)

இந்த புதிய வடிவ தேடு பொறியை சந்தைப்படுத்தி பயனர்களை ஈர்ப்பதற்காக Microsoft $80 மில்லியன் நிதியை ஒதுக்கியிருக்கிறது. இந்த முதலீடு புதிய பயனர்களையும் “Live Search” இல் வெறுத்து ஒதுங்கிய பழைய பயனர்களையும் ஈர்க்கும் என்று Microsoft நம்புகிறது.

இதில ஒரு நல்ல விசயம் என்னவென்றால், கூகிளின் தேடுபொறியில் படங்களைத் தேடினால் முதல் பக்கத்தில் சில படங்கள் காண்பித்து மற்றவற்றை பார்வையிட “Next” ஐ அடிக்கடி சொடுக்கவேண்டி இருப்பது போல இல்லாமல் Microsoft இன் “Bing” புதிய தேடு பொறியில் அனைத்தையும் ஒரே பக்கத்திலேயே காணமுடிவது. (By Scrolling)

image

சரி நீங்களும் ஒருக்கா போய்ப்பாருங்கோ. (சுற்றி என்ன நடக்குது என்று தெரிந்துகொள்வது நல்லது தானே.) ---> இங்கே சொடுக்கவும்.

 

-------------------துணைநின்றவை--------------

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...