நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Friday, April 17, 2009

குழந்தைகளுக்கான இணையம்

வணக்கம் நண்பர்களே,

உங்கள் வீட்டில ஒரு கணினி அதோடு இணைய இணைப்பு வேற… நீங்க பல மாதிரியான இ.பக்கங்களுக்கு சென்று வாறீங்க… (ஒரு மாதிரிப் பக்கங்களும் உள்ளடங்கலாம்.;-) ) எல்லாம் முடிந்த பிறகு நீங்க உங்க வேலையை பார்க்க… உங்க பிள்ளையும் அதே கணினியை பயன்படுத்துது… ஏடாகூடமா எல்லாம் சில வேளைகளில் பக்கங்கள் முகத்தில் அறையும்… சில நேரம் தெரிந்து நடக்குது… பல சமயங்களில் தெரியாமல்…

இதற்காக பல பெற்றோர் தங்கள் இ.உலாவியில் பல கட்டுப்பாடுகளை கூட நிறுவியிருக்கிறார்கள்.

சரி விசயம் என்ன? இந்த அவஸ்தைகளை மறந்து என் குழந்தை அதற்கு தேவையான பக்கங்களுக்கு மட்டுமே சென்று வருது என்ற நிம்மதிப் பெருமூச்சோடு உங்க வேலையை நீங்க கவனிக்க விரும்பினால்…?

இதற்கு வழி குழந்தைகளுக்கான இ.உலாவியை உங்க கணினியில் நிறுவுவது…

KiDZUi – The internet for Kids என்ற சுலோகத்தோட காணக்கிடைக்கின்ற இந்த இ.உலாவி குழந்தைகளுக்கு பல விதங்களில் நன்மை செய்யும்.

kidzui

உங்கள் கணினியில் Kidzui ஐ நிறுவுதல்.

  • நீங்கள் தனியாக இயங்கும் மென்பொருள் போன்று நிறுவலாம். அல்லது நெருப்பு நரி(Firefox) இ.உலாவி பயன்படுத்துபவர்கள் இதனை ஒரு Add-on போன்றும் நிறுவலாம்.
  • நிறுவிய பின் பெற்றோர் அல்லது பொறுப்பாளர் தங்கள் பெயரில் ஒரு பயனர் கணக்கை தொடங்கவேண்டியது அவசியம்.

இது ஒரு குழந்தைகளுக்கான வடிக்கட்டப்பட்ட இ.உலாவி போல செயற்படுது. அவர்களின் வயது என்ன என்று ஆரம்பத்தில் பதிவு செய்து விட்டால் அந்த வயதினருக்கு தேவையான காணொளிகள், விளையாட்டுக்கள் போன்றவை காணக்கிடைக்குது.

Kidzui ஐ நிறுவ விரும்புபவர்கள் : இங்கே அழுத்தவும்

----------------------------------------------------------------------------

கொசுறுத் தளம் : http://www.starfall.com/ [குழந்தைகளுக்கு மட்டும் – என்ர புருஷன் குழந்தை மாதிரி என்று நினைப்பவர்களும் பயன்படுத்தலாம். ;0) ]

Related Posts Plugin for WordPress, Blogger...