நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Monday, March 30, 2009

Google உம் Street View சங்கடங்களும்…

Google இன் Street View பற்றி சிலர் அறிந்திருக்கலாம். அறியாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கத்தை சொல்லிவிட்டு விசயத்திற்கு வருவம்…

Street View என்றால் என்ன?

Google Maps மற்றும் Google Earth இன் உள்ளமைந்த பகுதியாக விளங்கும் இது, உலக நாடுகளின் வீதிகளை, 360 பாகையில் படம்பிடிக்கக்கூடிய கமெராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு (சரியான சொற்றொடர் பயன்படுத்தியுள்ளேனா தெரியல.) என்ன விசேஷம் என்றால் நீங்கள் ஒரு வீதியில் நடந்து செல்கின்ற உணர்வு உங்களுக்குத் தோன்றும். அண்மையில் இலண்டன் நகரின் வீதிகளின் காட்சியை அதிகாரபூர்வாக Google நிறுவனம் வெளியிட்டது. அங்க தான் வந்தது வம்பு…

என்ன விசயம்?

Street View இற்காக படம் எடுக்கப்பட்ட சமயத்தில் சாலைகளில் யார் நடந்துசென்றார்கள், எந்த கார் எந்தப்பக்கமாகப் போனது போன்ற பல நீங்கள் பார்க்கும் போது உங்கள் கண்ணுக்கு தென்படலாம். (வில்லங்கமான சிலவும்) சாலைகளில் செல்பவர்களின் முகங்கள் மற்றும் கார் இலக்கத்தகடு ஆகியன தெரியாதவாறு மறைக்கப்பட்டுள்ளது என்று Google சொன்னாலும் அது முழுக்க உண்மையில்லை. Street View ஐ பார்த்துக் கொண்டிருந்த இலண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் Range Rover கார் பெண் நண்பியின் வீட்டுக்கு வெளியே நிற்பாட்டப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். அதனால் என்ன என்று தானே கேட்கிறீங்க? அதாவது அந்தப் படம் எடுக்கப்பட்ட திகதியில் அந்தப் பெண்ணின் கணவன் வியாபார விடயமாக வெளியே செல்வதாக சொல்லிச் சென்றது தான் பிரச்சனைக்கு காரணம். இதனால் அந்தப் பெண் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார். (பாவம் Google என்ன செய்யும்? )

2007 ம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவை அண்மையில் இலண்டனில் அறிமுகப்படுத்தப்ட்டதன் பின் பலர் இரகசியத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் தர்மசங்கடமான நிலையில் படம்பிடிக்கப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை புதிய பிரச்சனைகள் வருமோ தெரியல… ?

[Google இற்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்தச் சேவையை இலங்கைக்கும் விஸ்தரிச்சால் நன்றாக இருக்கும்… பல வில்லங்கங்கள் தெரியவரலாம்… ]

 

Source : Metro,London

Facebook மாதிரி ஆனால் வேற…

எல்லோருக்கும் (அநேகமாக) Facebook என்றால் என்ன என்று தெரியும். ஆனால் செல்வந்தர்கள் மட்டுமே இணைந்து கொள்ளக்கூடிய www.affluence.org/ பற்றித் தெரியுமா?

பல சமூக வலைப்பின்னல்களைப் பேணும் தளங்கள் சகலரும் தங்களை இணைத்து கொள்ள வாய்ப்பு வழங்குவது தானே பெரும்பாலும் நாம் கண்டுவருவது. ஆனாலும் அதற்கு நேர்மாறாக www.affluence.org/ என்ற இந்தத் தளமானது “The exclusive organization of the world's wealthiest people.” என்ற வாசகம் தாங்கி நீங்கள் ஒரு செல்வந்த பிரபு என்று நிரூபித்தால் மட்டுமே இணைந்து கொள்ள அனுமதிக்கிறார்கள். (ஆனால் இணைந்துகொள்ள கட்டணம் இல்லை – இலவசமானது.)

இந்தத் தளமானது கடந்த வருடம் புரட்டாதி (September) மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 20,000 அங்கத்துவர்களைக் கொண்டுள்ளது. அங்கத்துவராக இணைய விரும்புபவர் $3 மில்லியன் பெறுமதியான சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று நிரூபிக்கவேண்டும் அல்லது குறைந்தபட்ச ஆண்டு வருமானம் $300,000 ஆக இருக்கவேண்டும்.

சரி கனக்க யோசிக்காதீங்க… இணைய முடியாவிட்டாலும் ஒரு தடவை போய் பாருங்கோ… (யாராவது உலகின் ஏழைகள் மட்டுமே இணையக்கூடிய தளம் ஒன்றை ஆரம்பியுங்கோ பார்ப்போம்… நடந்தமாதிரி தான்… ;0) )

 

Source : Metro,London

Sunday, March 29, 2009

You tube, Google காணொளிகளைத் தரவிறக்க…

வணக்கம் நண்பர்களே,

வழமையாக என் பஞ்சாமிர்தம் வ.பூவிற்கு வருகின்ற நண்பர் ஒருவர் “எப்படி அதில் இடம்பெறும் YouTube காணொளிகளைத் தரவிறக்கலாம்?” என்ற கேள்வியோடு தனிமடலில் தொடர்பு கொண்டார். அவரின் கேள்விக்கு தனியாகப் பதில் சொல்லாமல் வேறு சிலருக்கும் உதவலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை இடுகின்றேன்.

தரவிறக்கம் செய்வதற்கு உதவும் வகையில் பல இணையத்தளங்கள் உள்ளன.

- இந்தத் தளத்தில் நீங்கள் தரவிறக்கவேண்டிய காணொளியின் முகவரியை கொடுத்தால் போதுமானது. காணொளிகளை .flv (Flash Video) கோப்பாகவோ அல்லது .mp4 கோப்பாகவோ சேமிக்கலாம்.

இப்படிப் பல தளங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை விட நீங்கள் உங்கள் கணினியில் Realplayer ஐ நிறுவி இருந்தால் தரவிறக்கலை மேலும் இலகுவாகச் செய்யலாம். நீங்கள் செய்யவேண்டியது தரவிறக்கவேண்டிய காணொளியின் மீது வலது பக்கமாகச் சொடுக்குவதன் மூலம் வரக்கூடிய பட்டியலில் “Download This Video To RealPlayer” என்பதை அழுத்துவது மாத்திரமே. (RealPlayer ஐ நிறுவியிருத்தல் அவசியம்.)

realPlayer

இதனைத் தவிர, நீங்கள் நெருப்பு நரி(Firefox) இணைய உலாவியை பயன்படுத்துபவர் எனின், உங்களுக்காகவே பல Add-ons கொட்டிக்கிடக்கிறது. குறிப்பிடத்தக்க ஒன்று : Video DownloadHelper (இப்படி இன்னும் பல… முயன்று பாருங்கள்… நல்லதாக இருந்தால் அடியேனுக்கும் அறியத்தாருங்கள்…)

உதவிக் குறிப்பு:

நீங்கள் .flv கோப்பாகத் தரவிறக்கினால் அதனைப் பார்வையிட Flash Video Player ஐ தரவிறக்கவேண்டும்.

ஏதேனும் ஒரு வகையில் இந்தப் பதிவு உங்களுக்கு உதவியிருப்பின் ஒரு வார்த்தை எழுதுங்கள்…

Related Posts Plugin for WordPress, Blogger...