நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Thursday, February 26, 2009

Google AJAX Feed API ஐ பயன்படுத்தல்... - தொடர்ச்சி

வணக்கம் வ.பூ நண்பர்களே,

சென்ற பதிவில் Google AJAX Feed API என்றால் என்ன என்பதையும் அதனை உங்கள் வ.பூவில் அல்லது இ.தளத்தில் எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் பார்த்தோம்.

இந்தப் பதிவில் Javascript இல் மாற்றங்கள் செய்வதன் மூலம் எப்படி மெருகேற்றலாம் என்று காண்போம்.

code_exp

மேலே உள்ள படத்தில் Generate Code என்ற கட்டளையை அழுத்தியவுடன் கிடைக்கப்பெறும் நிரல் காணப்படுகின்றது. அதில் சில இடங்களை நிறத்தால் வேறுபடுத்தி இலக்கம் இட்டுள்ளேன். இனி அந்தப் பகுதிகளுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

படத்தில் இல. 1 ஐக் கவனிக்க.

இந்தப் பகுதியில் நீங்கள் வர்ணம்,எழுத்தின் அளவு, எவ்வளவு இடைவெளி தேவை போன்றவற்றை நிர்ணயிக்கலாம். அத்துடன் முக்கியமாக உங்களுடைய பதிவுகள் திரட்டப்படும் வரை அது தொடர்பான விளக்கத்தைக் கொடுக்கலாம். (பொறுமையாக இருங்கள் அல்லது பதிவுகள் திரட்டப்படுகின்றன என்பன போன்ற செய்தி ஏதேனும்.)

அடுத்து, இல. 2 ஐக் கவனிக்க.

இந்தப் பகுதி நீங்கள் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் அந்தப் வ.பூவின் தலையங்கம் மற்றும் அதன் பதிவுகளின் ஓடை ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. நீங்கள் விரும்பின் தலையங்கத்தை மாற்றமுடியும். அதேபோல் ஓடையின் முகவரி பிழையெனில் நீங்களே அதனை தட்டச்சு செய்யமுடியும் அல்லது பிரதிசெய்து ஒட்டமுடியும்.

இன்னொரு விடயம் வேறு சில வ.பூக்களையும் திரட்டவிரும்பினால் ஏற்கனவே உள்ள நிரலின் கீழ் மற்றைய வ.பூவின் தரவுகளை இணைக்க முடியும்.

உ+ம்:

var feeds = [
    {title: 'ஏதனும் தலையங்கம்',
     url: 'ஓடையின் முகவரி'
    },
    {title: 'கொம்பியூட்டர் உலகம்',
     url: 'http://computerulakam.blogspot.com/feeds/posts/default'
    },
    {title: 'பஞ்சாமிர்தம்',
     url: 'http://panchamirtham.blogspot.com/feeds/posts/default'
    },
    {title: 'கவி விகடம் உங்களை வரவேற்கிறது...',
     url: 'http://kavivikadam.blogspot.com/feeds/posts/default'
    },
    {title: 'கவி ரூபனின்(Kavi Ruban) வெளி',
     url: 'http://kaviruban.spaces.live.com/feed.rss'
    }];

மேற்காட்டியபடி நீங்கள் தேவையான  தளங்களை இணைக்கமுடியம்.

இறுதியாக இல.3 ஐக் கவனித்தால்,

அது பெரிதாக ஒன்றும் இல்லை (பிறகென்னத்திற்குச் குறித்தாய்...;-) அதாவது எந்த வடிவத்தில் உங்களுக்கு இதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதை இந்தப் பகுதி தீர்மானிக்கிறது. மேலுள்ள படத்தில்,

horizontal : true என்பது கிடையாக பதிவுகள் மாறி மாறிக் காட்டப்படும் என்பதை உணர்த்துகிறது. நீங்கள் விரும்பினால் horizontal ஐ false என்று மாற்றிவிட்டு stacked என்பதை true என்று மாற்றிப்பாருங்களேன். 

 

அப்பாடா ஒரு மாதிரி முடிச்சிட்டன்.

உங்கள் கருத்துக்களை பதியுங்கள். வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை...

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...