நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Tuesday, August 5, 2008

வலைப் பூ எழுதும் கருவி - Windows Live Writer

வணக்கம் வலை உலக நண்பர்களே,

நீண்ட நாளாக இதைப் பற்றி எழுதவேண்டும் என்று விரும்பினாலும் இப்போது தான் முயற்சி கை கூடி இருக்கிறது. சிலருக்கு தெரிந்த ஒரு விடயமாக இருந்தாலும் என் நோக்கம் பயன்படுத்தாதவர்களும் பயன்படுத்தவேண்டும் என்பதே.

தின அடிப்படையில் அல்லது ஒரு நாளிலே பல பதிவுகள் அடிப்படையில் அல்லது கிழமைக்கு ஒன்று என்று பலரும் வலைப் பூக்களில் பதிவுகள் இடுவதைக் காணலாம். அப்படி பதிவுகளை இடும்போது அநேகமானவர்கள் அந்தந்த வலைப் பூச் சேவை வழங்குநர்களின் உள்ளமைந்த சேவையை பயன்படுத்துவதைக் காணலாம். ஆனால் அதில் உள்ள அசெளகரியங்களை மனதில் கொண்டு பதிவுகளைப் பதிவதற்கும் பல்வேறு வலைப் பூக்களை மேலாண்மை செய்வதற்கும் உதவும் வகையில் பல மென்பொருள்கள் உலவுகின்றன. அந்த வகையில் நான் அறிமுகப்படுத்த நினைப்பது,

Windows Live Writer

தரவிறக்கமும் கணினியில் நிறுவுதலும்

மிக இலகுவான நடைமுறை இது.

  • Windows Live Writer Download என்ற இணைப்பில் சென்று தரவிறக்கிய பின் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் Windows Live Writer ஐ பயன்படுத்த தயாராகிவிட்டீர்கள்.

இடைமுகத்தை அறிந்து கொள்வோம்

  • நீங்கள் நிறுவிய Windows Live Writer ஐ இயக்குவதன் மூலம் கீழ்காணும் இடைமுகத்தைக் காணலாம்.

 intro

மேல்காணும் இடைமுகம் அநேகமானவர்களுக்கு பரிச்சியமானது என்றாலும் முக்கியமான பகுதிகளைக் குறித்திருக்கிறேன்.

பதிவுகளை இடுவதற்கு முன் தயார்படுத்தல்

முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்கள் வலைப் பூவை Windows Live Writer இல் இணைத்தல்.

  • Weblog >> Add Weblog Account... என்பதை செயற்படுத்துங்கள்

add_account

  • பின் வருகின்ற உரையாடல் பெட்டியில் நீங்கள் Blogger அல்லது இதர சேவைகளை பயன்படுத்துபவர்கள் எனின், Another weblog service என்பதை தெரிவு செய்து Next ஐ அழுத்துங்கள்.

blog_type

  • உங்கள் வலைப் பூவுக்கான இணைய முகவரி மற்றும் பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றை பூர்த்தி செய்து மீண்டும் Next ஐ அழுத்தவும்.

add_account2

  • Windows Live Writer ஆனது உங்கள் வலைப் பூவுக்கான தரவுகளை ஆராய்ந்து கீழ் காட்டியவாறு சரியான முறையில் தயார்படுத்தப்பட்டதற்கான முடிவு நிலையை எட்டும்.

add_account3+ add_account4

அவ்வளவு தான் உங்கள் வலைப் பூவுக்கான தயார்படுத்தல் வேலைகள் முடிவுற்றது.

இனி அடுத்த பதிவில் மேலதிகமான விபரங்களான பிரசுரித்தல், முடிவுறாத பதிவுகளை கையாளுதல் மற்றும் பல வலைப் பூக்களை மேலாண்மை செய்தல் போன்ற தகவல்களைப் பார்ப்போம்.

தயவுசெய்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

5 comments:

Anonymous said...

தகவலுக்கு நன்றி.
நான் ஆங்கிலப்பதிவுகளுக்கு BlogJet ஐத்தான் பயன்படுத்துவேன்இ மிகவும் இலகுவானது. ஆனால் தமிழ் யுனிகோட்டிற்கு ஒத்திசைவில்லை. Win Live Writer எப்படி???

அத்துடன் நமது பதிவிட்ட எல்லா பதிவுகளையும் பின்னுட்டத்தோடு தரவிறக்கி சேமிப்பது எப்படி? ஏதாவது விஷேச மென்பொருள் பரிந்ததுரைக்க முடியுமா?
நெட்டில் கிடைத்தது வாய்க்கவில்லை.

சுபாஷ்
hisubash.wordpress.com

வடுவூர் குமார் said...

முயன்று பார்க்கிறேன்.
நன்றி

கவி ரூபன் said...

நன்றி சுபாஷ்,

//
நான் ஆங்கிலப்பதிவுகளுக்கு BlogJet ஐத்தான் பயன்படுத்துவேன்இ மிகவும் இலகுவானது. ஆனால் தமிழ் யுனிகோட்டிற்கு ஒத்திசைவில்லை. Win Live Writer எப்படி???
//
WLW தமிழில் பதிவிடுவதற்கு ஒத்திசைக்கின்றது என்பது என் எண்ணம்...

அடுத்தது பதிவுகளை தரவிறக்கி சேமிப்பது தொடர்பான தகவல் என்னிடம் எதுவும் இல்லை... அறிந்தால் அறியத் தருகிறேன.

வடுவூர் குமார் முயன்று பாருங்கள்... நிச்சயமாக விரும்புவீர்கள்.

Anonymous said...

///WLW தமிழில் பதிவிடுவதற்கு ஒத்திசைக்கின்றது என்பது என் எண்ணம்... ////

தகவலுக்கு நன்றி தோழரே. முயன்று பார்க்கிறேன்.

Sharepoint the Great said...Hi. Thanks for valuable information.

Good Post with nice pictures.


Related Posts Plugin for WordPress, Blogger...