நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Wednesday, August 6, 2008

வலைப் பூ எழுதும் கருவி - Windows Live Writer - II

கடந்த பதிவில் Windows Live Writer (WLW) பற்றிய அறிமுகத்தோடு அதனை நிறுவுதல் மற்றும் உங்கள் வலைப் பூவை அதில் இணைத்தல் என்பன தொடர்பாக கண்டோம்.

இந்தப் பதிவில் WLW இனைப் பயன்படுத்தி பதிவு ஒன்றை எழுதுதல், பிரசுரித்தல் ஆகியனவற்றில் கவனம் செலுத்துவோம்.

பதிவு ஒன்றை எழுதுதல்,பிரசுரித்தல் 

இது பற்றி பெரிய அளவில் விளக்கவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் பூரணத்துவம் கருதி முக்கியமான விடயங்களைப் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலில் நீங்கள் எந்த வலைப் பூவிற்கு பதிவு எழுதப் போகிறீர்களோ அதனை தெரிவுசெய்யவேண்டும். (ஒரே ஒரு வ.பூ வைத்திருப்பவர் எனின் இந்தப் பிரச்சனை இல்லை) அதற்கு நீங்கள் செய்யவேண்டியது:

  • Weblog >> பதிவு எழுத விரும்பும் வ.பூவை தெரிவு செய்யுங்கள்

s_blog

  • பதிவிற்கான தலையங்கம் மற்றும் உள்ளடகத்தை தயார் செய்யுங்கள் (இதனைச் செய்யும் போது இணையத் தொடர்பு அவசியம் இல்லை என்பது ஒரு நல்ல விடயம்)

content 

குறிப்பு : மேலே காட்டியவாறு பதிவினை எழுதுகின்ற போது சில சமயங்களில் இடையில் நிறுத்தி மீண்டும் பிறிதொரு சமயத்தில் தொடரலாம்(Save as Draft). ஒரு பதிவினை Draft ஆகா சேமிக்க விரும்பினால்: Ctrl + S என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.

  • உங்கள் பதிவினை வகைப்படுத்த விரும்பினால் (உ+ம்: கவிதை,நகைச்சுவை) WLW இல் கீழே காணப்படக்கூடிய Set categories என்பதை அழுத்துவதன் மூலம் இதனைச் செய்யலாம்.

s_cat

 

 

மேலே படத்தில் காட்டிவாறு அழுத்தியவுடன் கீழுள்ளது போன்று ஏற்கனவே உள்ள வகைகளை உள்ளடக்கிய பட்டியல் தோன்றும். புதிய வகையை தட்டச்சு செய்து Add கட்டளையை செயற்படுத்துவதன் மூலம் புதிய வகையினையும் உள்ளடக்கலாம்.

 a_cat

  • பதிவினை எழுதி முடித்தவுடன் Publish என்ற கட்டளையைச் செயற்படுத்துவதன் மூலம் உங்கள் பதிவு  வ.பூவில் பிரசுரிக்கப்பட்டுவிடும்.

 publish

இறுதியாக நீங்கள் ஏற்கனவே பதிந்த பதிவில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் அதனை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு நீங்கள், Recently Posted என்பதற்கு கீழே நீங்கள் தேடும் பதிவு இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் More... என்பதை அழுத்துவதன் மூலம் கண்டுபிடிக்கமுடியும்.

recent_post more

 

மேலை காட்டியவாறு நீங்கள் பதிவு செய்த பதிவைத் திறந்து மாற்றங்கள் செய்த பின் மீண்டும் Publish என்ற கட்டளையைச் செயற்படுத்துவதன் மூலம் பதிவில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

ஓரளவு எனக்கு தெரிந்த வகையில் விடயங்களை தந்திருக்கிறேன் என்று நம்புகின்றேன். யாரேனும் இதனால் பயன்பெற்றால் உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

4 comments:

கோவை விஜய் said...

தகவலுக்கு நன்றி.

Anonymous said...

உங்கள் சேவை மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை.

அன்புடன்
கோபி

Sharepoint the Great said...

Thanks Buddy

Sharepoint the Great said...

பட விளக்கங்கள் அருமை

Related Posts Plugin for WordPress, Blogger...