நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Thursday, February 14, 2008

Blogger - சில மேம்படுத்தல்கள்

இந்தப் பதிவில் Blogger இல் வழமையாக இடம்பெறும் மேம்படுத்தல்கள் / பிழை திருத்தங்கள் (Updates & Bug Fixes) வரிசையில் அண்மைய செய்திகளை தொகுத்துத் தருகிறேன்.

பெப்ரவரி 12 இல் இடம்பெற்ற சில மேம்படுத்தல்கள் (Updates)

 • பின்னூட்டல்கள் இடுவதற்கான படிவத்தில் பின்னூட்டலை இடுபவர் தன் அடையாளத்தை(identity) இடுவதற்கான தெரிவுகள் சில புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

comment

 • ஒரு மொழியின் சொற்களை இன்னொரு மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதும் முறை உள்ளடக்கப்பட்டுள்ளது. (Transliteration) - கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளுக்கான வசதிகள் இதில் உள்ளன.

இதனை எப்படி செயற்படுத்துவது?

முதலில் Settings என்ற பகுதிக்குச் சென்று பின் Global Settings என்ற பகுதிக்கு சென்று கீழ் காட்டியவாறு மாற்றம் செய்க. (அதாவது Enable ஐ தெரிவு செய்து விரும்பிய மொழியை தெரிவு செய்க)

transliteration

பின் Posting பகுதிக்கு சென்று "Compose" ஐக் கிளிக் செய்து ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும். (அதாவது நீங்கள் தமிழை தெரிவு செய்திருந்தால், 'amma' என்று தட்டச்சு செய்து 'Space' விசையை அழுத்தவும். உடன் 'அம்மா' என்று வந்திருப்பதை கவனிக்க. - கீழ் உள்ள படம் பார்க்க.)

tran_2

 • 200 க்கும் அதிகமான பின்னூட்டல்கள் ஒரு பதிவில் இடம்பெறுமானால் அவை பல பக்கங்களில் பிரித்து வழங்கப்படும்.
 • வலைப் பூவின் பக்கவடிவமைப்பில் முன்பு "Template" என்று இருந்தது இப்போது  "Layout" ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது.

layout

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, February 12, 2008

பின்னூட்டல்களைத் திரட்டல் - II

கடந்த பதிவில் உங்கள் வலைப் பூவில் இடப்படுகின்ற பின்னூட்டல்களை Blogger இன் உள்ளமைந்த வசதியைப் பயன்படுத்தி எப்படித் திரட்டலாம் என்று பார்த்தோம். இந்தப் பதிவில் ஓடைகளை (Feeds) ஐ திரட்டும் சேவையை வழங்குபவர்களின் மூலம் எப்படித் திரட்டலாம் என்று பார்ப்போம்.

இதற்காக http://www.feeddigest.com/ என்ற இணையத் தளத்தின் உதவியை பயன்படுத்தி பதிவை திரட்டு முறையைக் காண்போம்.

 1. http://www.feeddigest.com/ தளத்திற்கு சென்று கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
 2. கணக்கு ஒன்றை உருவாக்க முயலும் போதே நீங்கள் திரட்டவிருக்கும் ஓடையின் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டி வரும்.
 3. http://உங்கள்வலைப்பூவின்பெயர்/feeds/comments/default என்பதை கொடுக்கவும் பின்னூட்டல்களைத் திரட்ட விரும்பினால் (பதிவுகளை திரட்டவிரும்பினால் கடந்த பதிவை பார்வையிடவும்.)
 4. தேவையான தரவுகளைத் தரவும் (எத்தனை பதிவுகளை காட்டவேண்டும்/ஏதேனும் ஒரு ஒழுங்கமைவைப் [Template] பயன்படுத்தல் - போன்ற தரவுகளில் கவனம் செலுத்தவும். Output Encoding - UTF - 8 இல் இருக்கட்டும்)
 5. அதற்கான நிரலை பிரதிசெய்து உங்கள் வலைப் பூவில் தேவையான இடத்தில் ஒட்டவும்.

பதிவுகளின் கீழ் பின்னூட்டல்களை காட்டுதல்

 • Template என்ற பகுதிக்குச் சென்று "Edit HTML" என்பதை தெரிவு செய்யவும்.
 • கீழ் காட்டப்பட்டுள்ளது போன்று நிரலை ஒட்டவும்.

//

<div id='main-wrap2'>

<b:section class='main' id='main' showaddelement='no'>
<b:widget id='AdSense2' locked='false' title='' type='AdSense'/>
<b:widget id='Blog1' locked='true' title='Blog Posts' type='Blog'/>
</b:section>

இந்தப் பகுதியில் ஒட்டுவதன் மூலம் உங்கள் பதிவுகளின் கீழ் பின்னூட்டல்களைப் பார்வையிடலாம்...


</div>

//

கவனிக்க : Template இல் மாற்றம் செய்ய முன்னர் அதனை தரவிறக்கம் செய்து கொள்ளவும். ஏதேனும் பிழைவரின் மீண்டும் பயன்படுத்தலாம். நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்தபின் சேமிக்காமல் மாற்றம் சரியாக வருகிறதா என்று Preview வை அழுத்திப் பார்த்தபின்னர் இறுதியாக சேமிக்கவும். (ஒவ்வொரு சிறு மாற்றத்திற்கும் பின் சரிபார்த்து சேமித்து தொடரவும்.)

Sidebar இல் பின்னூட்டல்களைக் காட்டுதல்

 • Template என்ற பகுதிக்குச் சென்று "Add a Page Element" என்பதை தெரிவு செய்யவும்.
 • HTML/Javascript என்பதை கிளிக் செய்து அதனுள் நிரலை ஒட்டவும் (Paste)

Thursday, February 7, 2008

பின்னூட்டல்களை திரட்டுதல்

நீங்கள் ஒரு வலைப் பூவை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வலைப் பூவை பலரும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். அப்படி வருபவர்களில் சிலர் பின்னூட்டலும் இட்டுச் செல்வார்கள். உங்கள் வலைப் பூவில் மற்றவர்களால் இடப்பட்ட பின்னூட்டல்களை தொகுத்து உங்கள் வலைப் பூவின் Side Bar/Body இல் வெளியிடுவது எப்படி? அது சம்பந்தமான தகவல்களை திரட்டித் தருகிறது இந்தப் பதிவு.

தனியாக பின்னூட்டல்களை திரட்டுவதன் அவசியம் என்ன?

 • நீங்கள் ஒரு பதிவை இணைத்த பின் தளத்திற்கு வருபவர்களில் சிலர் உங்கள் பதிவுக்கு யாரும் பின்னுட்டல் போட்டிருக்கிறார்களா என்று பார்த்த பின்னர் தான் அந்தப் பதிவில் ஏதோ இருக்கிறது என்று படிக்கத் தொடங்குவார்கள்.
 • மற்றவர்களால் இடப்பட்ட பின்னூட்டல்களை தொகுத்து வழங்குவதன் மூலம் அவர்கள் பெயரும் அதில் வருவதால் தொடர்ந்து பின்னூட்டல் இடுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
 • உங்களை நீங்களே மறைமுகமாக தட்டிக் கொடுக்க. ;-)

முதலில்...

இதில் நாங்கள் பார்ப்பது Google Blogger ஐ சேவை நிறுவனமாக கொண்டர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் பதிவுகள் மற்றும் பின்னூட்டல்கள் வெவ்வேறு ஓடைகளில்(Feed) திரட்டப்படும்.

உதாரணத்திற்கு உங்கள் பதிவுகள் திரட்டப்படும் ஓடையின் பொது முகவரி :

http://உங்கள்வலைப்பூவின்பெயர்.blogspot.com/feeds/posts/default

அது போலவே உங்கள் வலைப் பூவின் பின்னூட்டல்கள் திரட்டப்படும் ஓடையின் பொது முகவரி :

http://உங்கள்வலைப்பூவின்பெயர்/feeds/comments/default

மேற்குறிப்பிடப்பட்ட பொது முகவரிகளில் உங்கள் வலைப் பூ பெயரை மாற்றீடு செய்து வேலை செய்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

[குறிப்பு : நீங்கள் உங்கள் வலைப் பூவிற்கான மேலாண்மைப் பகுதியில் (Settings) Site Feed என்ற பகுதியில் இருக்கக்கூடிய Allow Blog Feeds என்ற தெரிவுப் பெட்டியில் Full அல்லது Short என்பதை தெரிவு செய்திருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.]

திரட்டும் முறைகள் :

இரண்டு முறைகளில் இதனைச் செய்யலாம்.

 1. Blogger இல் உள்ளமைந்த வசதியைப் பயன்படுத்தல் - இலகுவானது.
 2. ஓடைகளை (Feeds) திரட்டுபவர்களின் சேவையை பெற்றுக் கொள்ளல்.

திரட்டும் முறை : Blogger இல் உள்ளமைந்த வசதியைப் பயன்படுத்தல்

 • Template என்ற பகுதிக்குச் சென்று "Add a Page Element" என்பதை தெரிவு செய்யவும்.

comment1

 • பின் வரக்கூடிய சாளரத்தில் (Window) Feed என்ற பகுதிக்கு கீழ் உள்ள ADD TO BLOG என்பதை அழுத்தவும்.

comment2

 • அழுத்தியவுடன் வரும் சாளரத்தில் Feed URL என்கின்ற பெட்டியினுள் (Text Box) உங்கள் பின்னூட்டல்களின் ஓடையை தட்டச்சு செய்க அல்லது பிரதியெடுத்து ஒட்டவும். (Copy & Paste) CONTINUE என்ற பொத்தானை அழுத்தவும்.
 • அதன் பின் வருகின்ற ஒழுங்கமைக்கும் பகுதியில் (Configure Feed) உங்களுக்கு வேண்டிய தரவுகளை தரவும்.

comment3

 • SAVE CHANGES ஐ அழுத்தவும்

அவ்வளவே... (உங்கள் Side bar இல் திரட்டப்பட்ட பின்னூட்டல்கள் வந்திருக்கும்.  5 பின்னூட்டல்கள் மட்டும் தான் என்பது ஒரு குறை)

மேல் சொல்லப்பட்டது வலைப் பூ முழுமைக்கானது. நீங்கள் ஒரே ஒரு பதிவின் பின்னூட்டல்களை மட்டும் திரட்டவிரும்பினால் ஓடையின் (Feed) இன் முகவரியில் மாத்திரம் மாற்றம் செய்தால் போதுமானது.

http://உங்கள்வலைப்பூவின்பெயர்/feeds/YourPOSTID/comments/default

Post ID ஐ பெறுவதற்கு Dash Board சென்று "Post" ஐ கிளிக் பண்ணுங்கள். எந்தப் பதிவின் பின்னூட்டல்களை திரட்டப் போகிறீர்களோ அந்தப் பதிவின் "Edit" ஐ கிளிக் செய்யவும். உங்கள் பதிவின் Post ID இற்கு பின்னுள்ள தொடரிலக்கத்தை பிரதி எடுத்து பயன்படுத்துங்கள். அதைத் தவிர மற்றைய படிமுறைகள் வழமையானவையே!

இரண்டாவது முறை அடுத்த பதிவில்...

உங்கள் கருத்துக்கள் உற்சாகப்படுத்தும்...

Monday, February 4, 2008

Google Apps Vs MS Live Small Business

Microsoft நிறுவனமானது இலவசமாக இணையத்தளம் ஒன்றை வடிவமைப்பதற்கு ஏதுவாக மூன்று வகைப் படுத்தலின் (Packages) கீழ் உதவ முன்வந்திருக்கிறது.

 

நீங்கள் இலவமாக பெறக் கூடிய வசதிகள் :

 • இணைய முகவரி (Domain Name - .com/.org/.net )
 • இணையத்தளம் வடிவமைப்பதற்கான வசதிகள் (Web site design tools)
 • உங்கள் கம்பனி மின்னஞ்சல் முகவரி
 • சந்தைப்படுத்தும் கருவிகள் (Tools to market  your site)

அந்த மூன்று வகைப்படுத்தல்கள் (Packages) :

 • Office Live Basics - அவர்கள் முற்றிலும் இலவசம் என்று சொல்வது இதைத் தான் (கடன் அட்டை விபரம் தேவையாம்)
 • Office Live Essentials - முதல் மூன்று மாதம் இலவசம் (பின் $19.95/மாதம்)
 • Office Live Premium - முதல் மூன்று மாதம் இலவசம் (பின் $39.95/மாதம்)

ஆர்முள்ளவர்கள் முயற்சிக்கலாம். மேற்குறிப்பிட்ட மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு அமைவானதை தொடரலாம்.

>>ஒப்பிட

நேரடியாகவே களத்தில் இறங்க...

>>இங்கே அழுத்தவும்

-------------------------------------

கொசுறுச் செய்தி : கூகிள்(Google) நிறுவனம் இது போன்ற திட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. விபரம் பார்க்க : https://www.google.com/a/

Related Posts Plugin for WordPress, Blogger...