நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Thursday, January 3, 2008

Yahoo Messenger இல் தமிழ்

அண்மையில் நண்பர் ஒருவருடன் உரையாடும் போது எங்கள் பேச்சில் Yahoo Messenger இல் Keyman Keyboard ஐ பயன்படுத்தி தமிழில் உரையாடுவது எப்படி என்ற பேச்சு வந்தது. உண்மையில் Yahoo Messenger ஐ அடியேன் பெரிதாக பயன்படுத்தாத படியால் எனக்கு பதில் ஏதும் தெரியவில்லை. ஆனாலும் தேடலின் பலனால் கிடைத்ததை இப்பதிவில் பகிர்ந்து கொள்ளகிறேன். சிலருக்கு உதவியாக இருக்கலாம்.

முதலில் செய்யவேண்டியது என்ன?

முதலில் Keyman Keyboard ஐ பாவிப்பதற்கு தேவையான மென்பொருளை (eKalappai) தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

  • இணையத்தளம் : http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3  - இந்த இணையத்தளத்திற்கு சென்று eKalappai 2.0b(Bamini) என்பதை தரவிறக்கம் செய்யுங்கள். (Bamini இல் தட்டச்சு செய்து பழகியவர்களுக்கு ஏற்றது.)
  • தரவிறக்கிய மென்பொருளை கணினியில் நிறுவிய பின் நீங்கள் நிறுவிய கோப்பினுள் சென்று கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு keyman.exe ஐ இயக்குங்கள்
  • இப்போது உங்கள் கணினியின் System Tray யானது கீழுள்ளவாறு தோற்றமளிக்கும். 

Yahoo Messenger இல் என்ன செய்யவேண்டும்?

இனி நீங்கள் உங்கள் Yahoo Messenger இல்,

  1. Messenger --> Preferences என்பதை தேர்தெடுத்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) Change Fonts & Colors... என்கின்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் யுனிகோட் எழுத்துருவை தெரிவுசெய்யுங்கள். (உ+ம் : TSCu_Paranar - இது ஒரு யுனிகோட் எழுத்துரு)  
  2.  Always use my fonts & colors. என்கின்ற தெரிவுப் பெட்டியை மறக்காமல் தெரிவு செய்க.

இப்போது நீங்கள் Alt + 3 ஐ அழுத்துவதன் மூலம் தமிழில் தட்டச்சு செய்ய Keyman Keyboard இல் Suratha-Bamini2Tscii ஐ இயக்கநிலைக்கு கொண்டு வரவும். (K --> க்கு மாறுவதை அவதானிக்க)

அவ்வளவே இனி நீங்கள் Yahoo Messenger இலும் தமிழ் வளர்க்கலாம். ;-)

 

 உதவி : http://www.pudhucherry.com/pages/tscii.html (நல்ல பல தகவல்கள் இதில் உண்டு. ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். நன்றி)

5 comments:

Anonymous said...

பயனுள்ள பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். மறுமொழிப் பெட்டியில் உள்ள captcha சோதனையைத் தூக்கினால் நல்லா இருக்கும். நன்றி

கவி ரூபன் said...

வணக்கம் நண்பரே,

கருத்துக்கு நன்றி. தொடர்ந்து உற்சாகப்படுத்துங்கள்...

தமிழ்பித்தன் said...

இல் எந்த மாறுதலும் செய்யாமல் நேரடியாகவே ஓர் யுனிக்கோட் எழுதி கொண்டு எழுத முடியுமே????

கவி ரூபன் said...

//இல் எந்த மாறுதலும் செய்யாமல் நேரடியாகவே ஓர் யுனிக்கோட் எழுதி கொண்டு எழுத முடியுமே????//

பித்தன் முடியுமே என்று சொல்வதொடு நில்லாமல் நீங்கள் சொல்லும் யுனிகோட் எழுதி பற்றி சொல்லியிருக்கலாமே...

cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி கவி ரூபன் - பித்தனு தகவலைக் கூறினால் நன்றியுடன் இருக்கலாம்

Related Posts Plugin for WordPress, Blogger...