நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Tuesday, January 1, 2008

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல்

இணையத்தில் பல்வேறுபட்ட வலைப் பூக்களுக்கு (Blogs) சென்று வாசிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். (எனக்கு இருப்பதால் அப்படி ஒரு அசட்டு நம்பிக்கை)

முதலில் நீங்களாக வலைப் பூக்களுக்கு சென்று வாசிக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுருக்கமாகப் பார்த்தால்...

 • வலைப்பூக்களின் இணைய முகவரியை நினைவில் நிறுத்துவது கடினம் (Bookmarks/Favourites இல் இணைக்கலாம் என்பது சுலபமாக்கலாம் ;0))
 • அவர்களின் வலைப் பூக்களில் புதிதாக ஏதேனும் இணைத்திருக்கிறார்களா என்று அடிக்கடி பார்வையிடுவது எரிச்சல் (இதை சுலபமாக்கவும் வழி உண்டு...)
 • இணையத் தொடர்பு இல்லாத போது வாசிக்க முடியாத நிலைமை (Offline reading)

மேற்கண்ட பிரச்சனைகளை எல்லாம் மறந்து உங்களுக்குப் பிடித்த வலைப் பூக்களை ஒரே இடத்தில் படித்து மகிழ, குறிப்பாக இணையத் தொடர்பு இல்லாத நேரங்களிலும் படிக்க (இலங்கையில் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...) சிறந்த வழி என்ன என்று யோசிக்கும் போது உடனடியாக நினைவில் வருவது Google reader

என்ன செய்ய வேண்டும்?

 1. உங்கள் கணினியில் உங்களுக்குப் பிடித்த Internet Explorer / Mozilla Firefox ஐ திறந்து கொள்ளுங்கள் (இணையத் தொடர்பில் இருக்கவேண்டும்...)
 2. reader.google.com ஐ தட்டச்சு செய்வதன் மூலம் அந்தப் பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்
 3. Google Reader இன் முகப்புப் பக்கம் உங்கள் திரையில் தோன்றும்
 4. அதில் உள் நுழைவதற்கான பயனர் கணக்கு மற்றும் நுழைவுச் சொல்லை தட்டச்சு செய்யவும் (கவனிக்க Google கணக்கு உங்களிடம் இருக்க வேண்டும்... இல்லையெனில் உருவாக்கிக் கொள்ளவும்)
 5. உள் நுழைந்தவுடன் Welcome to Google Reader பக்கம் தோன்றும் (அதில் இணைக்கபட்டுள்ள Video ஐ சும்மா பார்த்து வையுங்கள்... )

இப்போது நாங்கள் அடிப்படையில் தேவையானவற்றை செய்து விட்டோம். (அப்பாடா என்று ஒரு குட்டித் தூக்கபோடுவது அவரவர் இஷ்டம்... )

 

வலைப் பூக்களை இணைப்பது எப்படி?

இதில் நாங்கள் கவனிக்க இருப்பது நீங்கள் அடிக்கடி சென்று வரும் (பார்வையிடும்) வலைப் பூவை எப்படி இணைக்கலாம் ... அதில் உள்ள பதிவுகளை எப்படி பார்வையிடுவது தொடர்பானவை.

 1. இடது பக்கத்தில் இருக்கக்கூடிய Add subscription ஐ கிளிக் செய்யவும்
 2. Enter a search term to find feeds or paste a feed url. என்ற தலைப்புடன் தோன்று பெட்டியில் (Text Box) நீங்கள் இணைக்க விரும்பும் வலைப் பூவுக்கான முகவரியை தரவும் (உ+ம் : http://thamizmanam.com/)
 3. Add பொத்தானை அழுத்தியவுடன் Google Reader தமிழ்மணத்தில் (நீங்கள் இணைத்த வலைப் பூவில்) இருக்கக் கூடிய பதிவுகளை திரட்டி வலது பக்கத் திரையில் பட்டியலிடும். (கவனிக்க கீழுள்ள படம், உ+ம் படி தமிழ் மணத்தில் இருந்த பதிவுகள்.)


 4. ஒவ்வொரு பதிவாக பார்வையிட்டு முழுமையாக படிக்க நினைத்தால் அதற்கான இணைப்பை அழுத்துவதன் மூலம் முழுமையாக படிக்க முடியும்)
 5. மேல் குறிப்பிட்ட வழிமுறைகளை பயன்படுத்தி மேலும் பிடித்த வலைப் பூக்களை இணைக்கலாம்.

இந்தப் பதிவில் நாங்கள் Google Reader என்றால் என்ன? அதில் எப்படி வலைப் பூக்களை இணைத்துப் படிக்கலாம் என்பது தொடர்பாக கவனித்தோம். இதில் இருக்கக் கூடிய வேறு விடயங்களை அடுத்தடுத்த பதிவுகளில் கவனிக்கலாம். உங்கள் ஆதரவு மேலும் எழுத உதவும் என்று நம்புகிறேன்.

1 comments:

cheena (சீனா) said...

தகவலுக்கு மிக்க நன்றி - முதல் பதிவு இணைக்கப் பட்டது

Related Posts Plugin for WordPress, Blogger...