நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Tuesday, January 8, 2008

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல் - III

Google Reader தொடரில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இந்தப் பதிவில்(இறுதிப் பதிவு) நாம் பார்க்கவிருப்பது.

  1. பார்த்த பதிவுகளைப் பகிர்தல் (Sharing)
  2. பிடித்த பதிவை மின்னஞ்சல் செய்வது (Tell your friends)
  3. பகிர்ந்த பதிவுகளை மேலாண்மை செய்தல் (Managing shared items)
  4. பகிர்ந்த பதிவுகளை உங்கள் வலைப் பூவில் இணைத்தல் (Put a clip on your site or blog)

சிலருக்கு மேற்குறிப்பிட்ட விடயங்கள் பரீட்சயமாக இருக்கலாம். என்றாலும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

  • பார்த்த பதிவுகளைப் பகிர்தல் (Sharing)

நீங்கள் இணைத்த வலைப் பூவின் ஓடையில் இருந்து ஒவ்வொரு பதிவாக பார்வையிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சில பதிவுகள் உங்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அட நல்ல விடயமாக இருக்கிறதே... மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் என்ன? என்று தோன்றுகிறது. என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இதனைச் செய்யலாம். கீழுள்ள படம் பார்க்க.

  • பிடித்த பதிவை மின்னஞ்சல் செய்வது (Tell your friends)

உங்களுக்குப் பிடித்த பதிவை நண்பருக்கு அனுப்ப இதனைப் பயன்படுத்தவும்.

பின்பு உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்து ஏதேனும் குறிப்பையும் இணைக்க விரும்பினால் அதனையும் இணைத்து அனுப்பலாம்.

  • பகிர்ந்த பதிவுகளை மேலாண்மை செய்தல் (Managing shared items)

இதல் நாம் பார்க்கவிருப்பது ஏற்கனவே பகிர்ந்த பதிவை பகிர்வில் இருந்து எப்படி விடுவிக்கலாம் என்பது தொடர்பானது.

மேலே படத்தில் காட்டிய இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் வருகின்ற பக்கத்தில் நீங்கள் பகிர்ந்த எல்லாப் பதிவுகளையும் பார்க்கமுடியும்.

அதில் ஏதேனும் ஒரு பதிவை பகிர்வில் இருந்து விடுவிக்க நினைத்தால், ஒவ்வொரு பகிர்வின் கீழும் இருக்கக் கூடிய "Unshare" ஐ கிளிக் செய்வதன் மூலம் இதனைச் செய்யலாம்.

உங்கள் பகிர்வுகளை நீங்கள் ஒரு இணையப் பக்கத்தில் பார்க்கவிருப்பினால், உங்கள் பகிர்வுகளின் பக்கத்தில் இருக்கக்கூடிய இணைய முகவரியை அழுத்தலாம். அதுபோல உங்கள் பகிர்வுகளின் ஓடையையும் (Feed) விரும்பினால் பயன்படுத்தலாம். கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் இருப்பது என் பகிர்வுகளின் முகவரி.

  • பகிர்ந்த பதிவுகளை உங்கள் வலைப் பூவில் இணைத்தல் (Put a clip on your site or blog)

இறுதியாக உங்கள் பகிர்வுகளை உங்கள் வலைப் பூவில் எப்படி இணைப்பது என்று பார்ப்போம். கீழுள்ள படத்தில் காட்டியவாறு "put a clip of your shared items" என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் இதனைச் செய்யலாம்.

இதுவரை என் அறிவுக்கு/அனுபவத்திற்கு எட்டியவாறு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். ஏதேனும் பயன் இருப்பதாக கருதுபவர்கள் ஒரு வார்த்தை எழுதுங்கள். நன்றி...

6 comments:

தமிழ்பித்தன் said...

வாழ்த்துக்கள் பின்னூட்டம் உங்களை உற்சாகமாக பதிய மட்டும் அந்த போதைக்குள் மயங்கி விடாதீர்கள் தொடர்ந்து பதியுங்கள் வாழ்த்துக்கள்

கவி ரூபன் said...

பித்தன்,

பாராட்டு ஒரு அருமையான போதை தான்... மயங்கமாட்டேன் என்று நம்புகிறேன்... உற்சாக வார்த்தைக்கு நன்றி ;-)

Anonymous said...

யாரும் இவ்வளவு பொறுமையாக திரைவெட்டு எடுத்து, இடம் குறித்து விளக்கிப் பார்த்தது இல்லை. நன்று. தொடர்ந்து கணினி, இணையத்தில் நல்லவற்றை அறிமுகப்படுத்துங்கள்.

கவி ரூபன் said...

நன்றி நண்பரே...

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் - நன்றாக விளக்கி உள்ளீர்கள் - பயனுள்ள பதிவு

atchaya said...

ஒவ்வொரு விஷயமும் தெளிவாக கூறி இருப்பது சிறப்பு.

Related Posts Plugin for WordPress, Blogger...