நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Sunday, January 13, 2008

உங்கள் கையில் தொலை தூரக் கணினி

நண்பர் ஒருவருடன் கதைக்கும் போது அபூர்வமாக நல்ல விடயங்களும் கதைக்கப்படுவதும் உண்டு. அப்படி எனக்கு தெரிய வந்த விடயம் தான் இது. இது போல வேறு மென் பொருள்களை பரீட்சித்துப் பார்த்திருந்தாலும் அவற்றை விட இது சுலபம் போல தோன்றுகிறது. இப்படி இது ... இது என்று எழுதி உங்களை வெறுப்பேற்றாமால் எது அது என்று சொல்லி விடுகிறேன்.

அது TeamViewer.

TeamViewer என்றால்...?

சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். இது ஒரு வகை மென்பொருள். உங்கள் கணினித் திரையை பகிரவும் (Desktop Sharing) தொலைவில் இருக்கக்கூடிய கணினியை நீங்கள் எங்கிருந்தாலும் இயக்கவும் (Remote Control) துணை செய்யும் மென்பொருள்.

எடுத்துக் காட்டாக உங்கள் கணினியில் மென்பொருள் சம்பந்தமான பிரச்சினை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களுக்கு எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் நண்பர் கொஞ்சம் இதில் புகுந்து விளையாடுவார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நண்பருக்கோ உங்கள் இடத்திற்கு வரமுடியாத சூழ்நிலை அல்லது அவர் வேறு ஒரு நாட்டில் இருக்கிறார். என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த மென்பொருள் கை கொடுக்கும். இரண்டு பேரிடமும் இணையத் தொடர்பு இருக்கவேண்டும் என்பது வேறுவிடயம்.

செய்யவேண்டியது என்ன?

  • முதலில் www.teamviewer.com என்ற இணையத்திற்கு சென்று(இவர்கள் தான் இந்தச் சேவையை வழங்குகிறார்கள்.) நீங்கள் Customer Module என்று அவர்களால் அழைக்கப்படுவதை தரவிறக்கம் செய்யவும்.

  • நண்பரை அழைத்து அவரை Full Version என்பதை தரவிறக்கச் சொல்லுங்கள்.

  • உங்கள் நண்பர் தான் தரவிறக்கியதை நிறுவியபின் நீங்கள் உங்கள் எண் (ID), கடவுச்சொல் (Password - இது ஒவ்வொரு முறை இயக்கும் போதும் புதிதாக இருக்கும். ) இரண்டையும் நண்பரிடம் கொடுங்கள்.

அவ்வளவு தான் உங்கள் நண்பர் தன் கணினித் திரையில் உங்கள் கணினித் திரையை பார்க்கக்கூடியதாக இருக்கும். என்ன செய்யவேண்டுமோ செய்து கொள்ளலாம்.

எவ்வளவு செலவாகும்?

நீங்கள் வர்த்தக தேவைகளுக்கு பயன்படுத்தாவிட்டால் இது இலவசமானது. (TeamViewer
is FREE for non-commercial use!)

இதைத் தவிர பணம் கொடுத்து வர்த்தக தேவைகளுக்கு பயன்படுத்தவும் முடியும் கூடதல் பயன்களுடன்.

அப்புறம்...?

அப்புறம் என்ன பிறகு சந்திக்கலாம். ;-)

-----------------------------------------------------------------------------------------------

கொசுறுத் தகவல் : உங்கள் MSN Messenger ஐ பயன்படுத்தியும் இது போல செய்யலாம். Actions --> Request Remote Assistance...

1 comments:

colvin said...

மிக அருமை ரூபன் அவர்களே!
என்னை நினைவிருக்கிறதா?
(கொல்வின் - இலங்கை)

Related Posts Plugin for WordPress, Blogger...