நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Thursday, January 31, 2008

கடவுளும் வந்தாச்சு...!

இந்த உலகம் மிக விசித்திரமானது... பல வித மாற்றங்களை தினமும் ஏன் நொடிக்கு நொடி கூட சந்தித்து வருகிறது. அந்த வகையில் மக்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இணையத்திற்குள் நுழைந்து விட்டனர். உலகம் பெரிது என்று சொல்வது அளவு ரீதியில் மட்டுமே... மற்றும் படி உலகத்தின் அளவு மிக மிகச் சிறிது... இவ்வளவு சொல்வதன் அவசியம் என்ன? வேறொன்றுமில்லை ஒழுங்காக வசனநடை வந்து விழுகிறதா என்று சுய சோதனை செய்து பார்த்தேன்... (அட பாவி...)

ஒரு இணைய ஆய்வின் படி 2025 இல் 35% சதவீதமான மக்களே தேவாலயத்திற்கு வருகை தருவார்களாம்... தற்போது இது 70% சதவீதமாக உள்ளது...

இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இணையம் இன்று சக்கைபோடு போடுகிறது...

அது -- http://www.godtube.com/ 

இங்கு நீங்கள் கிறிஸ்துவ வீடியோக்களை பார்க்கலாம் மற்றவர்களோடு பகிரலாம்... ஒரு வலைப்பின்னல் மூலம் உங்கள் இணையச் சமூகத்தை கட்டியெழுப்பலாம்...

என்னமோ... இனி தேவாலயத்திற்கு போகாமல்... தேவாலய நிகழ்வுகளை நேரடியாக இதில் ஒளி/ஒலி பரப்பினால்...? (நடக்கலாம்...)

ஆனால் ஒரே ஒரு பிரச்சினை தான்... கடவுளுக்கும் ஃபாதருக்கும் வாழ்க்கை வெறுத்துப் போய்விடும்!

Saturday, January 26, 2008

உங்கள் எது பிடிக்கும்? நெருப்பு நரியா அல்லது...

பலருக்கு இதில் அபிப்பிராய பேதம் இருக்கலாம். அதாவது உங்களுக்குப் பிடித்த உலாவி நெருப்பு நரியா(Firefox) அல்லது இன்டநெட் எக்ஸ்பிளோறரா (Internet Explorer) என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? நீங்கள் சொல்வதிருக்கட்டும்...

இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால்....

நெருப்பு நரி தான் பிடிக்கும் என்று சொல்பவர்கள் சொல்கிற காரணங்கள் :

 • வேகமாக செயற்படுகிறது.
 • Tab முறை மூலம் உலாவும் அனுகூலம் (Tab Browsing)
 • வைரஸ் பிரச்சனை குறைவு
 • Microsoft இன் மென்பொருள் இல்லை என்ற ஆறுதல்
 • அதைத் தான் பாவித்துப் பழக்கம்
 • இப்படிப் பல...

இன்டநெட் எக்ஸ்பிளோறர் (Internet Explorer) தான் பிடிக்கும் என்று சொல்பவர்கள் சொல்கிற காரணங்கள் :

 • அதைத் தான் பாவித்துப் பழக்கம்
 • வேற என்ன சொன்னார்கள் என்று தெரியல...

நீங்கள் எப்படி?

Wednesday, January 23, 2008

பரிசோதித்துப் பார்க்கலாம் வாங்கோ... ;-0)

Microsoft நிறுவனத்தின் அண்மைய வெளியீடாக ஓபிஸ் 2007 (Office 2007) அமைகிறது. (ஓபிஸ் இன் மேம்பட்ட வெளியீடுகள்.) இதனை வாங்குவதற்கு முன் எப்படி இருக்கும் என்று பார்த்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதுவும் உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து, நிறுவிப் பார்க்காமல் இணைய உலாவி (Internet Browser) மூலம் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? அது எப்படி என்று சொல்வது தான் இந்தப் பதிவு...

image

நீங்கள் செய்யவேண்டியது?

கீழ்க் காணும் Microsoft இன் இணையப் பக்கத்திற்குச் சென்று "Test Drive Microsoft Office" என்கின்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள். சிறிது நேரத்தில் நீங்கள் பரிசோதித்துப் பார்ப்பதற்கான இடைமுகம் தயாராகிவிடும். (Fire fox இல் வேலை செய்யாது போலத் தோன்றுகிறது. ஆகவே Internet Explorer வழி முயற்சியுங்கள்.)

>>http://office.microsoft.com/en-us/products/HA101687261033.aspx

கீழ் காணும் மென்பொருள்களை நீங்கள் பரிசோதித்துப் பார்க்கலாம். (வாங்குவதை விடுங்கோ... சும்மா ஒரு தரம் என்ன புதுசா இருக்கு என்று பார்க்கலாமே...)

 • Microsoft Office Access 2007
 • Microsoft Office Excel 2007
 • Microsoft Office InfoPath 2007
 • Microsoft Office OneNote 2007
 • Microsoft Office Outlook 2007
 • Microsoft Office Outlook 2007 with Business Contact Manager
 • Microsoft Office Outlook Web Access
 • Microsoft Office PowerPoint 2007
 • Microsoft Office Project Professional 2007
 • Microsoft Office Publisher 2007
 • Microsoft Office SharePoint Designer 2007
 • Microsoft Office SharePoint Server 2007
 • Microsoft Office Visio 2007
 • Microsoft Office Word 2007

Monday, January 21, 2008

Windows Live Writer - ஒரு பார்வை...

வணக்கம் நண்பர்களே,

Windows Live Writer பற்றிய ஒரு பார்வையை கீழுள்ள வீடியோ தருகிறது. பாருங்கள் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். (Windows Live Writer என்பது வலைப் பூக்களுக்கு இலகுவாக பதிவுகளை அனுப்புவதற்கு உதவும் ஒரு மென்பொருள் ஆகும்.)

மேலதிக விபரங்கள் மற்றும் தரவிறக்கத்திற்கு :

>>இங்கே அழுத்துங்கள்

Saturday, January 19, 2008

எங்கும் ஒபீஸ்(Office) - Microsoft

Google நிறுவனத்திற்கு போட்டியாகவோ என்னவோ தெரியல Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்தும் "எங்கும் ஓபீஸ்" கருத்துருவாக்கம் மூலமாக Microsoft நிறுவனமானது தனது Office மென்பொருளை இணையத்திலும் பாவிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. (Microsoft Office Live Workspace)

இதன் மூலம் நீங்கள் செய்யக்கூடியது :

 • எங்கிருந்தும் பாவிக்கலாம்
 • மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்
 • உங்கள் தொடர்புகள், நிகழ்வுகள் போன்றவற்றை ஒருங்கிசைவாக்கம் செய்யலாம்.

எப்படி பாவிப்பது?

தற்போது இது ஒரு பீட்டா (Beta) வெளியீடாக உள்ளதால், நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை முன்கூட்டியே பதிவுசெய்யவேண்டும் என்று Microsoft சொல்கிறது. (Pre-registration) அவர்கள் பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (பாவிக்கும் வழிமுறைகளைக் கொண்டதாக) அனுப்புவார்கள்.

உங்கள் பெயரையும் பட்டியலில் இணைக்க...

Google நிறுவனத்தின் Docs

மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது Google Docs.  அதனை அடைவதற்கு:

Sunday, January 13, 2008

உங்கள் கையில் தொலை தூரக் கணினி

நண்பர் ஒருவருடன் கதைக்கும் போது அபூர்வமாக நல்ல விடயங்களும் கதைக்கப்படுவதும் உண்டு. அப்படி எனக்கு தெரிய வந்த விடயம் தான் இது. இது போல வேறு மென் பொருள்களை பரீட்சித்துப் பார்த்திருந்தாலும் அவற்றை விட இது சுலபம் போல தோன்றுகிறது. இப்படி இது ... இது என்று எழுதி உங்களை வெறுப்பேற்றாமால் எது அது என்று சொல்லி விடுகிறேன்.

அது TeamViewer.

TeamViewer என்றால்...?

சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். இது ஒரு வகை மென்பொருள். உங்கள் கணினித் திரையை பகிரவும் (Desktop Sharing) தொலைவில் இருக்கக்கூடிய கணினியை நீங்கள் எங்கிருந்தாலும் இயக்கவும் (Remote Control) துணை செய்யும் மென்பொருள்.

எடுத்துக் காட்டாக உங்கள் கணினியில் மென்பொருள் சம்பந்தமான பிரச்சினை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களுக்கு எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் நண்பர் கொஞ்சம் இதில் புகுந்து விளையாடுவார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நண்பருக்கோ உங்கள் இடத்திற்கு வரமுடியாத சூழ்நிலை அல்லது அவர் வேறு ஒரு நாட்டில் இருக்கிறார். என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த மென்பொருள் கை கொடுக்கும். இரண்டு பேரிடமும் இணையத் தொடர்பு இருக்கவேண்டும் என்பது வேறுவிடயம்.

செய்யவேண்டியது என்ன?

 • முதலில் www.teamviewer.com என்ற இணையத்திற்கு சென்று(இவர்கள் தான் இந்தச் சேவையை வழங்குகிறார்கள்.) நீங்கள் Customer Module என்று அவர்களால் அழைக்கப்படுவதை தரவிறக்கம் செய்யவும்.

 • நண்பரை அழைத்து அவரை Full Version என்பதை தரவிறக்கச் சொல்லுங்கள்.

 • உங்கள் நண்பர் தான் தரவிறக்கியதை நிறுவியபின் நீங்கள் உங்கள் எண் (ID), கடவுச்சொல் (Password - இது ஒவ்வொரு முறை இயக்கும் போதும் புதிதாக இருக்கும். ) இரண்டையும் நண்பரிடம் கொடுங்கள்.

அவ்வளவு தான் உங்கள் நண்பர் தன் கணினித் திரையில் உங்கள் கணினித் திரையை பார்க்கக்கூடியதாக இருக்கும். என்ன செய்யவேண்டுமோ செய்து கொள்ளலாம்.

எவ்வளவு செலவாகும்?

நீங்கள் வர்த்தக தேவைகளுக்கு பயன்படுத்தாவிட்டால் இது இலவசமானது. (TeamViewer
is FREE for non-commercial use!)

இதைத் தவிர பணம் கொடுத்து வர்த்தக தேவைகளுக்கு பயன்படுத்தவும் முடியும் கூடதல் பயன்களுடன்.

அப்புறம்...?

அப்புறம் என்ன பிறகு சந்திக்கலாம். ;-)

-----------------------------------------------------------------------------------------------

கொசுறுத் தகவல் : உங்கள் MSN Messenger ஐ பயன்படுத்தியும் இது போல செய்யலாம். Actions --> Request Remote Assistance...

Thursday, January 10, 2008

Google Reader - வீடியோ

மூன்று பதிவுகளில் Google Reader பற்றி சில தரவுகளை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். அந்த வகையில் கீழ் காணும் இந்த வீடியோவானாது (இது போல பல இணையத்தில் கிடந்தாலும்...) கூடுதல் பயன் தரும் என்று நம்புகிறேன்.

Tuesday, January 8, 2008

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல் - III

Google Reader தொடரில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இந்தப் பதிவில்(இறுதிப் பதிவு) நாம் பார்க்கவிருப்பது.

 1. பார்த்த பதிவுகளைப் பகிர்தல் (Sharing)
 2. பிடித்த பதிவை மின்னஞ்சல் செய்வது (Tell your friends)
 3. பகிர்ந்த பதிவுகளை மேலாண்மை செய்தல் (Managing shared items)
 4. பகிர்ந்த பதிவுகளை உங்கள் வலைப் பூவில் இணைத்தல் (Put a clip on your site or blog)

சிலருக்கு மேற்குறிப்பிட்ட விடயங்கள் பரீட்சயமாக இருக்கலாம். என்றாலும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

 • பார்த்த பதிவுகளைப் பகிர்தல் (Sharing)

நீங்கள் இணைத்த வலைப் பூவின் ஓடையில் இருந்து ஒவ்வொரு பதிவாக பார்வையிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சில பதிவுகள் உங்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அட நல்ல விடயமாக இருக்கிறதே... மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் என்ன? என்று தோன்றுகிறது. என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இதனைச் செய்யலாம். கீழுள்ள படம் பார்க்க.

 • பிடித்த பதிவை மின்னஞ்சல் செய்வது (Tell your friends)

உங்களுக்குப் பிடித்த பதிவை நண்பருக்கு அனுப்ப இதனைப் பயன்படுத்தவும்.

பின்பு உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்து ஏதேனும் குறிப்பையும் இணைக்க விரும்பினால் அதனையும் இணைத்து அனுப்பலாம்.

 • பகிர்ந்த பதிவுகளை மேலாண்மை செய்தல் (Managing shared items)

இதல் நாம் பார்க்கவிருப்பது ஏற்கனவே பகிர்ந்த பதிவை பகிர்வில் இருந்து எப்படி விடுவிக்கலாம் என்பது தொடர்பானது.

மேலே படத்தில் காட்டிய இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் வருகின்ற பக்கத்தில் நீங்கள் பகிர்ந்த எல்லாப் பதிவுகளையும் பார்க்கமுடியும்.

அதில் ஏதேனும் ஒரு பதிவை பகிர்வில் இருந்து விடுவிக்க நினைத்தால், ஒவ்வொரு பகிர்வின் கீழும் இருக்கக் கூடிய "Unshare" ஐ கிளிக் செய்வதன் மூலம் இதனைச் செய்யலாம்.

உங்கள் பகிர்வுகளை நீங்கள் ஒரு இணையப் பக்கத்தில் பார்க்கவிருப்பினால், உங்கள் பகிர்வுகளின் பக்கத்தில் இருக்கக்கூடிய இணைய முகவரியை அழுத்தலாம். அதுபோல உங்கள் பகிர்வுகளின் ஓடையையும் (Feed) விரும்பினால் பயன்படுத்தலாம். கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் இருப்பது என் பகிர்வுகளின் முகவரி.

 • பகிர்ந்த பதிவுகளை உங்கள் வலைப் பூவில் இணைத்தல் (Put a clip on your site or blog)

இறுதியாக உங்கள் பகிர்வுகளை உங்கள் வலைப் பூவில் எப்படி இணைப்பது என்று பார்ப்போம். கீழுள்ள படத்தில் காட்டியவாறு "put a clip of your shared items" என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் இதனைச் செய்யலாம்.

இதுவரை என் அறிவுக்கு/அனுபவத்திற்கு எட்டியவாறு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். ஏதேனும் பயன் இருப்பதாக கருதுபவர்கள் ஒரு வார்த்தை எழுதுங்கள். நன்றி...

ஆர்வமுள்ளவர்கள் உதவலாம்...

 

நண்பர்களே,

உங்கள் உதவி அவசியம் தேவைப்படுகிறது. நான் ஒரு வலைப் பதிவை உருவாக்கியுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் இந்த இணையத்தில் Dummy Data வை உள்ளீடு செய்வதன் மூலம் பரிசோதிக்கவேண்டும். ஏதனும் பிழைச் செய்திகள் அல்லது எதிர்பார்க்கும் முறையில் வேலை செய்யவில்லை எனில் அறியத் தரவும். உங்கள் பங்களிப்பு மேலும் மெருகூட்ட உதவும் என்று நம்புகிறேன்.

>>இங்கே சொடுக்கவும்.

Thursday, January 3, 2008

Yahoo Messenger இல் தமிழ்

அண்மையில் நண்பர் ஒருவருடன் உரையாடும் போது எங்கள் பேச்சில் Yahoo Messenger இல் Keyman Keyboard ஐ பயன்படுத்தி தமிழில் உரையாடுவது எப்படி என்ற பேச்சு வந்தது. உண்மையில் Yahoo Messenger ஐ அடியேன் பெரிதாக பயன்படுத்தாத படியால் எனக்கு பதில் ஏதும் தெரியவில்லை. ஆனாலும் தேடலின் பலனால் கிடைத்ததை இப்பதிவில் பகிர்ந்து கொள்ளகிறேன். சிலருக்கு உதவியாக இருக்கலாம்.

முதலில் செய்யவேண்டியது என்ன?

முதலில் Keyman Keyboard ஐ பாவிப்பதற்கு தேவையான மென்பொருளை (eKalappai) தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

 • இணையத்தளம் : http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3  - இந்த இணையத்தளத்திற்கு சென்று eKalappai 2.0b(Bamini) என்பதை தரவிறக்கம் செய்யுங்கள். (Bamini இல் தட்டச்சு செய்து பழகியவர்களுக்கு ஏற்றது.)
 • தரவிறக்கிய மென்பொருளை கணினியில் நிறுவிய பின் நீங்கள் நிறுவிய கோப்பினுள் சென்று கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு keyman.exe ஐ இயக்குங்கள்
 • இப்போது உங்கள் கணினியின் System Tray யானது கீழுள்ளவாறு தோற்றமளிக்கும். 

Yahoo Messenger இல் என்ன செய்யவேண்டும்?

இனி நீங்கள் உங்கள் Yahoo Messenger இல்,

 1. Messenger --> Preferences என்பதை தேர்தெடுத்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) Change Fonts & Colors... என்கின்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் யுனிகோட் எழுத்துருவை தெரிவுசெய்யுங்கள். (உ+ம் : TSCu_Paranar - இது ஒரு யுனிகோட் எழுத்துரு)  
 2.  Always use my fonts & colors. என்கின்ற தெரிவுப் பெட்டியை மறக்காமல் தெரிவு செய்க.

இப்போது நீங்கள் Alt + 3 ஐ அழுத்துவதன் மூலம் தமிழில் தட்டச்சு செய்ய Keyman Keyboard இல் Suratha-Bamini2Tscii ஐ இயக்கநிலைக்கு கொண்டு வரவும். (K --> க்கு மாறுவதை அவதானிக்க)

அவ்வளவே இனி நீங்கள் Yahoo Messenger இலும் தமிழ் வளர்க்கலாம். ;-)

 

 உதவி : http://www.pudhucherry.com/pages/tscii.html (நல்ல பல தகவல்கள் இதில் உண்டு. ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். நன்றி)

Wednesday, January 2, 2008

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல் - II

வணக்கம் நண்பர்களே,

கடந்த பதிவில் அடிப்படையான தகவல்களைப் பார்த்தோம். இந்தப் பதிவில் மேலதிகமான தகவல்களை தர விழைகிறேன்.

பார்க்கும் முறையை மாற்றல் (தமிழ் சரியா?) /Changing View

Google Reader இரண்டு வகையான View க்கு ஆதரவு தருகிறது.

 • Expanded View - இதனை அழுத்துவதன் மூலம் ஒரு பதிவின் தலைப்பையும் அந்தப் பதிவில் இருக்கக்கூடிய உள்ளடக்கத்தின் சிறு பகுதியையும் பார்க்க முடியும். பதிவினை முழுமையாக படிப்பதா வேண்டாமா என்று முடிவு  செய்ய இந்த view உதவும்.
 • List View - இதனை அழுத்துவதன் மூலம் நீங்கள் இணைத்துள்ள வலைப்பூவில் இருக்கக்கூடிய பதிவுகளின் தலைப்புகள் மட்டுமே தெரியும். படிப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பது கஷ்டம் (ஒரு படத்தின் பெயரை மட்டும் வைத்து நல்ல படமா என்று சொல்ல முடியாதது போல...)

 

சந்தாதாரர் பட்டியலை மேலாண்மை செய்வது எப்படி?

இந்தப் பகுதியின் கீழ் நாங்கள் பார்க்கவிருப்பது

 • நீங்கள் இணைத்த வலைப் பூவின் பெயரை மாற்றுவது எப்படி? (Rename)
 • தேவையில்லையெனில் சந்தாதாரர் பட்டியலில் இருந்து விடுவிப்பது எப்படி? (Unsubscribe)
 • வலைப்பூக்களை குறிப்பிட்ட கோப்பு ஒன்றில் தொகுப்பது எப்படி? (கவிதை சம்பந்தமான பதிவுகள் எனின் அந்தப் பதிவுகளை கவிதைகள் என்ற கோப்பை உருவாக்கி அதில் தொகுக்க முடியும்.)

மேற்குறிப்பிட்ட சகலதிற்கும் நீங்கள் செய்யவேண்டியது. Feed Settings என்ற பொத்தானை அழுத்தவேண்டியது தான். அதில் நீங்கள் செய்யவேண்டியதை பொறுத்து தேர்வுசெய்து கொள்ளலாம். (படம் பார்க்க)

அடுத்த பதிவில் நிறைவு பெறும்.

Tuesday, January 1, 2008

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல்

இணையத்தில் பல்வேறுபட்ட வலைப் பூக்களுக்கு (Blogs) சென்று வாசிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். (எனக்கு இருப்பதால் அப்படி ஒரு அசட்டு நம்பிக்கை)

முதலில் நீங்களாக வலைப் பூக்களுக்கு சென்று வாசிக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுருக்கமாகப் பார்த்தால்...

 • வலைப்பூக்களின் இணைய முகவரியை நினைவில் நிறுத்துவது கடினம் (Bookmarks/Favourites இல் இணைக்கலாம் என்பது சுலபமாக்கலாம் ;0))
 • அவர்களின் வலைப் பூக்களில் புதிதாக ஏதேனும் இணைத்திருக்கிறார்களா என்று அடிக்கடி பார்வையிடுவது எரிச்சல் (இதை சுலபமாக்கவும் வழி உண்டு...)
 • இணையத் தொடர்பு இல்லாத போது வாசிக்க முடியாத நிலைமை (Offline reading)

மேற்கண்ட பிரச்சனைகளை எல்லாம் மறந்து உங்களுக்குப் பிடித்த வலைப் பூக்களை ஒரே இடத்தில் படித்து மகிழ, குறிப்பாக இணையத் தொடர்பு இல்லாத நேரங்களிலும் படிக்க (இலங்கையில் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...) சிறந்த வழி என்ன என்று யோசிக்கும் போது உடனடியாக நினைவில் வருவது Google reader

என்ன செய்ய வேண்டும்?

 1. உங்கள் கணினியில் உங்களுக்குப் பிடித்த Internet Explorer / Mozilla Firefox ஐ திறந்து கொள்ளுங்கள் (இணையத் தொடர்பில் இருக்கவேண்டும்...)
 2. reader.google.com ஐ தட்டச்சு செய்வதன் மூலம் அந்தப் பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்
 3. Google Reader இன் முகப்புப் பக்கம் உங்கள் திரையில் தோன்றும்
 4. அதில் உள் நுழைவதற்கான பயனர் கணக்கு மற்றும் நுழைவுச் சொல்லை தட்டச்சு செய்யவும் (கவனிக்க Google கணக்கு உங்களிடம் இருக்க வேண்டும்... இல்லையெனில் உருவாக்கிக் கொள்ளவும்)
 5. உள் நுழைந்தவுடன் Welcome to Google Reader பக்கம் தோன்றும் (அதில் இணைக்கபட்டுள்ள Video ஐ சும்மா பார்த்து வையுங்கள்... )

இப்போது நாங்கள் அடிப்படையில் தேவையானவற்றை செய்து விட்டோம். (அப்பாடா என்று ஒரு குட்டித் தூக்கபோடுவது அவரவர் இஷ்டம்... )

 

வலைப் பூக்களை இணைப்பது எப்படி?

இதில் நாங்கள் கவனிக்க இருப்பது நீங்கள் அடிக்கடி சென்று வரும் (பார்வையிடும்) வலைப் பூவை எப்படி இணைக்கலாம் ... அதில் உள்ள பதிவுகளை எப்படி பார்வையிடுவது தொடர்பானவை.

 1. இடது பக்கத்தில் இருக்கக்கூடிய Add subscription ஐ கிளிக் செய்யவும்
 2. Enter a search term to find feeds or paste a feed url. என்ற தலைப்புடன் தோன்று பெட்டியில் (Text Box) நீங்கள் இணைக்க விரும்பும் வலைப் பூவுக்கான முகவரியை தரவும் (உ+ம் : http://thamizmanam.com/)
 3. Add பொத்தானை அழுத்தியவுடன் Google Reader தமிழ்மணத்தில் (நீங்கள் இணைத்த வலைப் பூவில்) இருக்கக் கூடிய பதிவுகளை திரட்டி வலது பக்கத் திரையில் பட்டியலிடும். (கவனிக்க கீழுள்ள படம், உ+ம் படி தமிழ் மணத்தில் இருந்த பதிவுகள்.)


 4. ஒவ்வொரு பதிவாக பார்வையிட்டு முழுமையாக படிக்க நினைத்தால் அதற்கான இணைப்பை அழுத்துவதன் மூலம் முழுமையாக படிக்க முடியும்)
 5. மேல் குறிப்பிட்ட வழிமுறைகளை பயன்படுத்தி மேலும் பிடித்த வலைப் பூக்களை இணைக்கலாம்.

இந்தப் பதிவில் நாங்கள் Google Reader என்றால் என்ன? அதில் எப்படி வலைப் பூக்களை இணைத்துப் படிக்கலாம் என்பது தொடர்பாக கவனித்தோம். இதில் இருக்கக் கூடிய வேறு விடயங்களை அடுத்தடுத்த பதிவுகளில் கவனிக்கலாம். உங்கள் ஆதரவு மேலும் எழுத உதவும் என்று நம்புகிறேன்.

வணக்கம் நண்பர்களே...

இனிய புது நாளில் என் புது முயற்சியாக கணினி தொடர்பான தகவல்களை நான் விளங்கிய வகையில் அனுபவித்த வகையில் உலக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். முழுமையான தகவல்களை என்னால் முடிந்த வகையில் உள்ளடக்க விளைகிறேன். உங்கள் நல் ஆதரவும் கருத்துப் பரிமாற்றமும் முதுகைத் தடவி ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.

 

இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் இனிய பல அனுபவங்களை வழங்கவேண்டும் என்று எல்லாருக்கும் பொதுவான இறையை வேண்டி தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

நன்றிகளுடன்...

Related Posts Plugin for WordPress, Blogger...